← செய்திகளுக்குத் திரும்பு
உத்தமர்களோ நன்மையைச் சுதந்தரிப்பார்கள்.
படத்தைப் பதிவிறக்கு

உத்தமர்களோ நன்மையைச் சுதந்தரிப்பார்கள்.

“சனிக்கிழமை, 27 ஜனவரி 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உத்தமர்களோ நன்மையைச் சுதந்தரிப்பார்கள். நீதிமொழிகள் 28:10 - தேவன் தமது பிள்ளைகள் குற்றமற்றவர்களாயிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.- நமது நோக்கங்கள், எண்ணங்கள், செயல்கள் மற்றும் வார்த்தைகள் தூய்மையாகவும், நேர்மையாகவும், தேவ விருப்பத்திற்கு ஏற்றதாகவும் இருக்க வேண்டும்.- அவர் நம் இருதயங்களையும் மனதையும் அறிந்திருப்பதால், தேவனுக்கு முன்பாக நாம் நல்லவர்களாய் நடிக்க முடியாது. - ஒரு குற்றமற்ற நபர் சரியானதைச் செய்கிறார், உண்மையாய் பேசி செயல்படுகிறார்.- உத்தமமாய் வாழ்வது கடினம், ஆனால் நாம் தேவனுடன் நடந்து அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்தால் அது சாத்தியமாகும். - நாம் தேவனின் விருப்பங்களை முதன்மைப்படுத்தும்போது, ​​ அவரைப் பிரியப்படுத்தும் வாழ்க்கை வாழ முடியும்.- இதன் பொருள், நமது சித்தம், விருப்பங்கள், திட்டங்களை எல்லாம் அவரிடம் ஒப்படைத்து, நாம் செய்யும் எல்லாவற்றிலும் அவருடைய வழிகாட்டுதலை நாடுவதாகும்.- நாம் இதைச் செய்யும்போது, ​​நம் வாழ்க்கையின் தரத்தில் வெளிப்படையானதொரு மாற்றத்தைக் காண்போம்.- நாம் தேவ தயவையும், நன்மையையும் பரிபூரணமுமான எல்லா ஈவுகளையும் பெறுவோம்.- நமக்கு ஒரு நன்மையும் குறைவுபடாது. ஜெபம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, உத்தமமாய் வாழ எனக்கு உதவிச் செய்யும். உம்முடன் நடக்கவும், உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவும், உமது விருப்பங்களை என் விருப்பமாய்க் கருதவும் எனக்கு கிருபைத் தாரும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

சனிக்கிழமை, 27 ஜனவரி 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உத்தமர்களோ நன்மையைச் சுதந்தரிப்பார்கள். நீதிமொழிகள் 28:10 - தேவன் தமது பிள்ளைகள் குற்றமற்றவர்களாயிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.- நமது நோக்கங்கள், எண்ணங்கள், செயல்கள் மற்றும் வார்த்தைகள் தூய்மையாகவும், நேர்மையாகவும், தேவ விருப்பத்திற்கு ஏற்றதாகவும் இருக்க வேண்டும்.- அவர் நம் இருதயங்களையும் மனதையும் அறிந்திருப்பதால், தேவனுக்கு முன்பாக நாம் நல்லவர்களாய் நடிக்க முடியாது. - ஒரு குற்றமற்ற நபர் சரியானதைச் செய்கிறார், உண்மையாய் பேசி செயல்படுகிறார்.- உத்தமமாய் வாழ்வது கடினம், ஆனால் நாம் தேவனுடன் நடந்து அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்தால் அது சாத்தியமாகும். - நாம் தேவனின் விருப்பங்களை முதன்மைப்படுத்தும்போது, ​​ அவரைப் பிரியப்படுத்தும் வாழ்க்கை வாழ முடியும்.- இதன் பொருள், நமது சித்தம், விருப்பங்கள், திட்டங்களை எல்லாம் அவரிடம் ஒப்படைத்து, நாம் செய்யும் எல்லாவற்றிலும் அவருடைய வழிகாட்டுதலை நாடுவதாகும்.- நாம் இதைச் செய்யும்போது, ​​நம் வாழ்க்கையின் தரத்தில் வெளிப்படையானதொரு மாற்றத்தைக் காண்போம்.- நாம் தேவ தயவையும், நன்மையையும் பரிபூரணமுமான எல்லா ஈவுகளையும் பெறுவோம்.- நமக்கு ஒரு நன்மையும் குறைவுபடாது. ஜெபம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, உத்தமமாய் வாழ எனக்கு உதவிச் செய்யும். உம்முடன் நடக்கவும், உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவும், உமது விருப்பங்களை என் விருப்பமாய்க் கருதவும் எனக்கு கிருபைத் தாரும். ஆமென்.