← செய்திகளுக்குத் திரும்பு
தேவன் பொய்களை வெறுக்கிறார். உங்கள் வாழ்க்கையில் பொய் சொல்வதை நிறுத்துங்கள்
படத்தைப் பதிவிறக்கு

தேவன் பொய்களை வெறுக்கிறார்.

“திங்கட்கிழமை, 9 டிசம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல. எண்ணாகமம் 23:19 வாக்குறுதிகளை அளிப்பதில் திறமையானோரும், ஆனால் அவற்றை நிறைவேற்றத் தவறுவோருமானவர்களை நீங்கள் எப்போதாவது சந்தித்திருக்கிறீர்களா? நேர்மை என்பது பெரும்பாலும் அரிதாகிவிட்டது. தேவ பிள்ளைகளிடையே கூட, நேர்மைக்கு உணர்வு இல்லாதது போல் தெரிகிறது. பலர் தங்கள் சொந்த நலனுக்காகப் பொய்களைப் பேசுவதில் கவலையே இல்லாமல் இருக்கிறார்கள். பொய் சொல்பவர்கள் பொய்யர்கள் என்று முத்திரை குத்தப்படுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். பொய்யர்கள் நரக ஆக்கினை அடைவார்கள் என்று வெளிப்படுத்தின விசேஷம் கூறுகிறது. அன்பு தேவ பிள்ளையே, உங்கள் வார்த்தைகளைப் பகுப்பாய்வு செய்யச் சிறிது நேரம் ஒதுக்குங்கள். * பொய் பேசுகிறீர்களா? அப்படியானால்,* அதை உடனடியாய் நிறுத்துங்கள். பரலோகத்தில் உள்ள நம் பிதா சத்திய தேவன். எனவே, நேர்மையான வாழ்க்கை வாழ நாம் பாடுபட வேண்டும். வார்த்தைகள், நோக்கம் அல்லது செயல் என எதுவாயினும், அவற்றில் பொய்கள் நம் வாழ்வில் இடம் பெறக்கூடாது. நமது விசுவாசத்தின் மெய்யான சாட்சியாயிருக்கும் நமது நேர்மையை உலகம் பார்க்கட்டும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உத்தமமான வாழ்க்கை வாழ்வதன் மூலம் உமது நாமத்திற்கு மகிமையைக் கொண்டுவர எனக்கு உதவி செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

திங்கட்கிழமை, 9 டிசம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல. எண்ணாகமம் 23:19 வாக்குறுதிகளை அளிப்பதில் திறமையானோரும், ஆனால் அவற்றை நிறைவேற்றத் தவறுவோருமானவர்களை நீங்கள் எப்போதாவது சந்தித்திருக்கிறீர்களா? நேர்மை என்பது பெரும்பாலும் அரிதாகிவிட்டது. தேவ பிள்ளைகளிடையே கூட, நேர்மைக்கு உணர்வு இல்லாதது போல் தெரிகிறது. பலர் தங்கள் சொந்த நலனுக்காகப் பொய்களைப் பேசுவதில் கவலையே இல்லாமல் இருக்கிறார்கள். பொய் சொல்பவர்கள் பொய்யர்கள் என்று முத்திரை குத்தப்படுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். பொய்யர்கள் நரக ஆக்கினை அடைவார்கள் என்று வெளிப்படுத்தின விசேஷம் கூறுகிறது. அன்பு தேவ பிள்ளையே, உங்கள் வார்த்தைகளைப் பகுப்பாய்வு செய்யச் சிறிது நேரம் ஒதுக்குங்கள். * பொய் பேசுகிறீர்களா? அப்படியானால்,* அதை உடனடியாய் நிறுத்துங்கள். பரலோகத்தில் உள்ள நம் பிதா சத்திய தேவன். எனவே, நேர்மையான வாழ்க்கை வாழ நாம் பாடுபட வேண்டும். வார்த்தைகள், நோக்கம் அல்லது செயல் என எதுவாயினும், அவற்றில் பொய்கள் நம் வாழ்வில் இடம் பெறக்கூடாது. நமது விசுவாசத்தின் மெய்யான சாட்சியாயிருக்கும் நமது நேர்மையை உலகம் பார்க்கட்டும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உத்தமமான வாழ்க்கை வாழ்வதன் மூலம் உமது நாமத்திற்கு மகிமையைக் கொண்டுவர எனக்கு உதவி செய்யும். ஆமென்.