← செய்திகளுக்குத் திரும்பு
அவர் அடிக்கிறார், அவருடைய கை ஆற்றுகிறது
படத்தைப் பதிவிறக்கு

அவர் அடிக்கிறார், அவருடைய கை ஆற்றுகிறது

“யோபு 5:18 அன்பு தேவ பிள்ளையே, * தேவன் உங்களிடம் மிகவும் கண்டிப்பாயிருக்கிறார் என்று எண்ணி நீங்கள் மனமுடைந்துவிட்டீர்களோ?* அவர் உங்கள் ஜெபங்களுக்குப் பதிலளிக்கவில்லை என்றும் உங்கள் விருப்பங்களை நிறைவேற்றவில்லை என்றும் நினைத்து நீங்கள் ஏமாற்றமடைகிறீர்களோ?* தேவனின் தாமதமோ அல்லது மறுப்போ உங்களை வருத்தப்படுத்த வேண்டாம். மாறாக, தேவன் உங்களை அளவில்லாமல் நேசிக்கிறார் என்றும் இந்த உலகில் உள்ள எல்லோரையும் விட உங்கள்மேல் அதிகமாய் அக்கறை கொள்கிறார் என்பதையும் நினைவிற்கொள்ளுங்கள். * அவர் நீதியுள்ள தேவன் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.* தேவபக்திக்குரிய நெறிமுறைகள் மற்றும் கொள்கைகளில் நீங்கள் (தளர்ந்துகொடுக்க) விட்டுக்கொடுக்க அனுமதிக்க முடியாது என்பதால், தேவைப்படும்போது அவர் உங்களைத் திருத்துகிறார்.* தேவன் உங்களுக்குப் பரிசுகள் மற்றும் ஆசீர்வாதங்களை அள்ளித் தரும் அன்பான தகப்பன் மட்டுமல்ல, உங்களைச் சரியான பாதையில் வழிநடத்தும் பொறுப்பான தகப்பனாகவும் இருக்கிறார். * உங்கள் தவறுகளுக்குத் தேவன் உங்களைத் தண்டிக்கிறார் என்றால், அவர்மீது கொண்ட நம்பிக்கையையோ விசுவாசத்தையோ இழந்து விடாதீர்கள்.* உங்கள் வேதனையான காலத்திலும், அவர்தான் உங்களைக் குணப்படுத்திக் காயங்கட்டுவார் என்பதை நினைவிற்கொள்ளுங்கள்.* அவர் உங்களை ஒழுங்குபடுத்துவார். ஆனால் உங்களால் கற்பனைக்கூட செய்துப்பார்க்க முடியாத வழிகளில் உங்களை ஆசீர்வதிப்பார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நீர் திருத்துவதைப் புரிந்துகொள்ள எனக்கு உதவிச் செய்யும். என்னை மீட்டுக் குணமாக்கும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

புதன், 10 ஜனவரி 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அவர் காயப்படுத்திக் காயங்கட்டுகிறார்; அவர் அடிக்கிறார், அவருடைய கை ஆற்றுகிறது. யோபு 5:18 அன்பு தேவ பிள்ளையே, * தேவன் உங்களிடம் மிகவும் கண்டிப்பாயிருக்கிறார் என்று எண்ணி நீங்கள் மனமுடைந்துவிட்டீர்களோ?* அவர் உங்கள் ஜெபங்களுக்குப் பதிலளிக்கவில்லை என்றும் உங்கள் விருப்பங்களை நிறைவேற்றவில்லை என்றும் நினைத்து நீங்கள் ஏமாற்றமடைகிறீர்களோ?* தேவனின் தாமதமோ அல்லது மறுப்போ உங்களை வருத்தப்படுத்த வேண்டாம். மாறாக, தேவன் உங்களை அளவில்லாமல் நேசிக்கிறார் என்றும் இந்த உலகில் உள்ள எல்லோரையும் விட உங்கள்மேல் அதிகமாய் அக்கறை கொள்கிறார் என்பதையும் நினைவிற்கொள்ளுங்கள். * அவர் நீதியுள்ள தேவன் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.* தேவபக்திக்குரிய நெறிமுறைகள் மற்றும் கொள்கைகளில் நீங்கள் (தளர்ந்துகொடுக்க) விட்டுக்கொடுக்க அனுமதிக்க முடியாது என்பதால், தேவைப்படும்போது அவர் உங்களைத் திருத்துகிறார்.* தேவன் உங்களுக்குப் பரிசுகள் மற்றும் ஆசீர்வாதங்களை அள்ளித் தரும் அன்பான தகப்பன் மட்டுமல்ல, உங்களைச் சரியான பாதையில் வழிநடத்தும் பொறுப்பான தகப்பனாகவும் இருக்கிறார். * உங்கள் தவறுகளுக்குத் தேவன் உங்களைத் தண்டிக்கிறார் என்றால், அவர்மீது கொண்ட நம்பிக்கையையோ விசுவாசத்தையோ இழந்து விடாதீர்கள்.* உங்கள் வேதனையான காலத்திலும், அவர்தான் உங்களைக் குணப்படுத்திக் காயங்கட்டுவார் என்பதை நினைவிற்கொள்ளுங்கள்.* அவர் உங்களை ஒழுங்குபடுத்துவார். ஆனால் உங்களால் கற்பனைக்கூட செய்துப்பார்க்க முடியாத வழிகளில் உங்களை ஆசீர்வதிப்பார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நீர் திருத்துவதைப் புரிந்துகொள்ள எனக்கு உதவிச் செய்யும். என்னை மீட்டுக் குணமாக்கும். ஆமென்.