← செய்திகளுக்குத் திரும்பு
தேவனின் சிநேகிதன்
படத்தைப் பதிவிறக்கு

தேவனின் சிநேகிதன்

“செவ்வாய், 24 செப்டம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:ஆண்டவரின் அன்புறவு அவருக்கு அஞ்சி நடப்போருக்கே உரித்தாகும்; அவர் அவர்களுக்கு தமது உடன்படிக்கையை வெளிப்படுத்துவார். சங்கீதம் 25:14 (TRV) சிருஷ்டிகராகிய தேவன், பரிசுத்தத்தோடும், கீழ்ப்படிதலோடுமான உங்களுடைய நட்பை விரும்புகிறார். கீழ்ப்படிதலும் பரிசுத்தமும் அவருக்கு முக்கியமானவைகள். தேவ பயம் இருந்தால் மட்டுமே இந்தக் குணங்கள் உங்கள் வாழ்க்கையில் இருக்கும். நீங்கள் தேவனுக்குப் பயப்படுகிறீர்களா? அவருடைய வழிகளைப் பின்பற்றுவதன் மூலம் அவருடன் நெருக்கமானதும் சிநேகம் நிறைந்ததுமான நட்புறவை நீங்கள் அனுபவிக்க முடியும். நீங்கள் தினமும் தேவனைப் பிரியப்படுத்தும்போது, தேவனுடனான உங்கள் உறவு சுமுகமாகவும் மன அழுத்தமில்லாததாகவும் இருக்கும். அவர், உங்களுடனான அவரது உடன்படிக்கையின் உறவைப் பற்றி உங்களுக்குக் கற்பிப்பார். இதன் மூலம் நீங்கள் அதை மதிக்க முடியும். நீங்கள் அவருடைய நண்பரா? ஜெபம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, உம்முடைய நண்பராய் இருக்க எனக்குஉதவி செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

செவ்வாய், 24 செப்டம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:ஆண்டவரின் அன்புறவு அவருக்கு அஞ்சி நடப்போருக்கே உரித்தாகும்; அவர் அவர்களுக்கு தமது உடன்படிக்கையை வெளிப்படுத்துவார். சங்கீதம் 25:14 (TRV) சிருஷ்டிகராகிய தேவன், பரிசுத்தத்தோடும், கீழ்ப்படிதலோடுமான உங்களுடைய நட்பை விரும்புகிறார். கீழ்ப்படிதலும் பரிசுத்தமும் அவருக்கு முக்கியமானவைகள். தேவ பயம் இருந்தால் மட்டுமே இந்தக் குணங்கள் உங்கள் வாழ்க்கையில் இருக்கும். நீங்கள் தேவனுக்குப் பயப்படுகிறீர்களா? அவருடைய வழிகளைப் பின்பற்றுவதன் மூலம் அவருடன் நெருக்கமானதும் சிநேகம் நிறைந்ததுமான நட்புறவை நீங்கள் அனுபவிக்க முடியும். நீங்கள் தினமும் தேவனைப் பிரியப்படுத்தும்போது, தேவனுடனான உங்கள் உறவு சுமுகமாகவும் மன அழுத்தமில்லாததாகவும் இருக்கும். அவர், உங்களுடனான அவரது உடன்படிக்கையின் உறவைப் பற்றி உங்களுக்குக் கற்பிப்பார். இதன் மூலம் நீங்கள் அதை மதிக்க முடியும். நீங்கள் அவருடைய நண்பரா? ஜெபம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, உம்முடைய நண்பராய் இருக்க எனக்குஉதவி செய்யும். ஆமென்.