புதன்கிழமை, 25 செப்டம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூருங்கள். 1 பேதுரு 1:22 ராஜாவான பிறகும், தாவீது தனது சிநேகிதன் யோனத்தானிடம் நேர்மையான பாசத்தையும் நட்பையும் காட்டினார். தாவீது யோனத்தானின் மகனான மேவிபோசேத்தைப் பற்றி கேள்விப்பட்டு, அவனை அரச அரண்மனைக்கு அழைத்து வந்தார். அவன் ஊனமுற்றவனாய் இருந்தபோதிலும் தாவீது மேவிபோசேத்தை நேசித்தார். தாவீது மேவிபோசேத்தைத் தன் சொந்த மகனைப் போல் நடத்தி, தம்முடைய மேஜையில் அவனுக்கு இடம் கொடுத்தார். நேர்மையான அன்பிற்கு இது ஓர் அழகான உதாரணம். இன்று, பலர், கண்ணில் படாதபோது நெருங்கிய நண்பர்களைக் கூட மறந்து விடுகிறார்கள். “கண்ணை விட்டுப் போனால் சிந்தை விட்டுப் போகும்” என்பது ஆங்கிலத்தில் ஓர் பிரபலமான பழமொழி.சூழ்நிலைகள் மற்றும் தூரங்களைப் பொருட்படுத்தாமல் உறவுகளை நினைவில் வைத்துக் கொள்வதிலும் பராமரிப்பதிலும் நீங்கள் எவ்வளவு நேர்மையாயிருக்கிறீர்கள்? நீங்கள் தலைமுறைகளாய்க் குடும்பத்தையும் நட்பையும் பராமரிக்கிறீர்களா?உங்களைச் சுற்றியுள்ள அனைவருக்கும் தேவனுடைய அன்பைக் காட்டுவதில் நேர்மையாய் இருங்கள். அப்படிச் செய்வதன் மூலம், உலகத்தைச் சிறந்ததோர் இடமாய் மாற்ற முடியும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, ஒருவரையொருவர் நேசிப்பதில் உண்மையாயிருக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்.
ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூருங்கள்
“புதன்கிழமை, 25 செப்டம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூருங்கள். 1 பேதுரு 1:22 ராஜாவான பிறகும், தாவீது தனது சிநேகிதன் யோனத்தானிடம் நேர்மையான பாசத்தையும் நட்பையும் காட்டினார். தாவீது யோனத்தானின் மகனான மேவிபோசேத்தைப் பற்றி கேள்விப்பட்டு, அவனை அரச அரண்மனைக்கு அழைத்து வந்தார். அவன் ஊனமுற்றவனாய் இருந்தபோதிலும் தாவீது மேவிபோசேத்தை நேசித்தார். தாவீது மேவிபோசேத்தைத் தன் சொந்த மகனைப் போல் நடத்தி, தம்முடைய மேஜையில் அவனுக்கு இடம் கொடுத்தார். நேர்மையான அன்பிற்கு இது ஓர் அழகான உதாரணம். இன்று, பலர், கண்ணில் படாதபோது நெருங்கிய நண்பர்களைக் கூட மறந்து விடுகிறார்கள். "கண்ணை விட்டுப் போனால் சிந்தை விட்டுப் போகும்" என்பது ஆங்கிலத்தில் ஓர் பிரபலமான பழமொழி.சூழ்நிலைகள் மற்றும் தூரங்களைப் பொருட்படுத்தாமல் உறவுகளை நினைவில் வைத்துக் கொள்வதிலும் பராமரிப்பதிலும் நீங்கள் எவ்வளவு நேர்மையாயிருக்கிறீர்கள்? நீங்கள் தலைமுறைகளாய்க் குடும்பத்தையும் நட்பையும் பராமரிக்கிறீர்களா?உங்களைச் சுற்றியுள்ள அனைவருக்கும் தேவனுடைய அன்பைக் காட்டுவதில் நேர்மையாய் இருங்கள். அப்படிச் செய்வதன் மூலம், உலகத்தைச் சிறந்ததோர் இடமாய் மாற்ற முடியும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, ஒருவரையொருவர் நேசிப்பதில் உண்மையாயிருக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

