புதன், 30 அக்டோபர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:தேவரீர் பூமியை விசாரித்து அதற்கு நீர்ப்பாய்ச்சுகிறீர்; தண்ணீர் நிறைந்த தேவநதியினால் அதை மிகவும் செழிப்பாக்குகிறீர். சங்கீதம் 65:9 இவ்வுலகில் உள்ள அனைத்திற்கும் தேவன் தான் ஆதாரம். உங்களுக்குத் தேவையானதை அறிந்திருக்கிற அவர், அவருடைய சித்தத்தின்படி அவற்றைக் கொடுப்பார். அன்பான பெற்றோரைப் போல, அவர் உங்களைக் கவனித்து, சரியான நேரத்தில் தேவையைச் சந்திப்பார். எதற்கும் கவலைப்பட வேண்டாம். உங்கள் தேவையின் அளவைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். நம்முடைய தேவன் சர்வ வல்லமையுள்ளவர், நம்முடைய தேவைகள் எல்லாவற்றையும் பரிபூரணமாய்ப் பூர்த்திசெய்யக்கூடியவர். அவர் முகத்தைப் பார்த்துக் கொண்டே சமாதானத்துடன் நடவுங்கள். உங்களுக்கு ஒரு நன்மையும் குறைவுபடாது. தேவனுடைய கிருபை நதி போல் ஓடுகிறது. அவர் உங்கள் வாழ்நாள் முழுவதும் ஆளுகை செய்ய அவரை அனுமதியுங்கள். அவர் உங்களை ஆசீர்வதிக்கப்பட்ட நபராயும், பலருக்கு ஆசீர்வாதமாயும் மாற்றுவார். நீர்ப் பாய்ச்சலான, வளமிக்க தோட்டத்தைப் போல் இருப்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுகூர்ந்து என் வாழ்நாள் முழுவதும் ஆளுகை செய்து என்னைப் பலருக்கு ஆசீர்வாதமாய் மாற்றும். ஆமென்.
தேவ நதி உங்களை வளமாகவும், செழிப்பாகவும் மாற்றும்
“புதன், 30 அக்டோபர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:தேவரீர் பூமியை விசாரித்து அதற்கு நீர்ப்பாய்ச்சுகிறீர்; தண்ணீர் நிறைந்த தேவநதியினால் அதை மிகவும் செழிப்பாக்குகிறீர். சங்கீதம் 65:9 இவ்வுலகில் உள்ள அனைத்திற்கும் தேவன் தான் ஆதாரம். உங்களுக்குத் தேவையானதை அறிந்திருக்கிற அவர், அவருடைய சித்தத்தின்படி அவற்றைக் கொடுப்பார். அன்பான பெற்றோரைப் போல, அவர் உங்களைக் கவனித்து, சரியான நேரத்தில் தேவையைச் சந்திப்பார். எதற்கும் கவலைப்பட வேண்டாம். உங்கள் தேவையின் அளவைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். நம்முடைய தேவன் சர்வ வல்லமையுள்ளவர், நம்முடைய தேவைகள் எல்லாவற்றையும் பரிபூரணமாய்ப் பூர்த்திசெய்யக்கூடியவர். அவர் முகத்தைப் பார்த்துக் கொண்டே சமாதானத்துடன் நடவுங்கள். உங்களுக்கு ஒரு நன்மையும் குறைவுபடாது. தேவனுடைய கிருபை நதி போல் ஓடுகிறது. அவர் உங்கள் வாழ்நாள் முழுவதும் ஆளுகை செய்ய அவரை அனுமதியுங்கள். அவர் உங்களை ஆசீர்வதிக்கப்பட்ட நபராயும், பலருக்கு ஆசீர்வாதமாயும் மாற்றுவார். நீர்ப் பாய்ச்சலான, வளமிக்க தோட்டத்தைப் போல் இருப்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுகூர்ந்து என் வாழ்நாள் முழுவதும் ஆளுகை செய்து என்னைப் பலருக்கு ஆசீர்வாதமாய் மாற்றும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

