← செய்திகளுக்குத் திரும்பு
பரிபூரணம் அடையுங்கள்
படத்தைப் பதிவிறக்கு

பரிபூரணம் அடையுங்கள்

“வியாழன், 31 அக்டோபர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கிறிஸ்து இயேசு என்னை ஆட்கொண்டதற்கான நோக்கம் நிறைவேறுவதற்காகத் தொடர்ந்து ஓடுகிறேன்.பிலிப்பியர் 3:12b (TRV) - தேவன் பரிபூரணமானவர். நாம் பரிபூரணமாய் இருக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார்.- எந்த மனிதனும் முழுமை அடைந்துவிட்டான் என்று சொல்ல முடியாது. இந்த உலகில் நாம் நமது ஓட்டத்தை முடிக்கும் வரை இது ஓர் தொடர்ச்சியான செயலாகும். உலகம் ஓர் பட்டறை போன்றது, இங்கு நாம் பரலோகத்திற்கு அழைத்துச் செல்லப்படு முன்பு கிறிஸ்துவைப் போல் இருக்கச் சீர்ப்படுத்தப்பட்டு சரி செய்யப்பட்டு முழுமைப்படுத்தப்படுவோம்.- கிறிஸ்து நம்மைப் பூரணமாக்கும்படித் தம்மையே ஒப்புக்கொடுத்தார். அதனால் நாம் அவருடன் நித்தியத்தை அனுபவிக்க முடியும். வாழ்க்கையின் சவால்கள் மற்றும் இன்னல்களை, நம் சுபாவத்தைப் பூரணமாக்கவும், நம்மை மென்மேலும் அவரைப் போல் ஆக்கவும் அவர் அனுமதிக்கிறார். எனவே, இந்தப் பரிபூரணத்தைப் பெறத் தொடருங்கள்.- மனம் தளர்ந்துவிடாதீர்கள். நீங்கள் மீண்டும் மீண்டும் தோல்வியுற்றாலும் தொடர்ந்து முன்னேறுங்கள். கிறிஸ்துவைச் சார்ந்திருங்கள், அவர் உங்களைத் தம்மைப் போல் பரிபூரணமாக்குவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுகூர்ந்து உம்மைப் போல் பரிபூரணமாய் மாற எனக்கு உதவி செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

வியாழன், 31 அக்டோபர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கிறிஸ்து இயேசு என்னை ஆட்கொண்டதற்கான நோக்கம் நிறைவேறுவதற்காகத் தொடர்ந்து ஓடுகிறேன்.பிலிப்பியர் 3:12b (TRV) - தேவன் பரிபூரணமானவர். நாம் பரிபூரணமாய் இருக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார்.- எந்த மனிதனும் முழுமை அடைந்துவிட்டான் என்று சொல்ல முடியாது. இந்த உலகில் நாம் நமது ஓட்டத்தை முடிக்கும் வரை இது ஓர் தொடர்ச்சியான செயலாகும். உலகம் ஓர் பட்டறை போன்றது, இங்கு நாம் பரலோகத்திற்கு அழைத்துச் செல்லப்படு முன்பு கிறிஸ்துவைப் போல் இருக்கச் சீர்ப்படுத்தப்பட்டு சரி செய்யப்பட்டு முழுமைப்படுத்தப்படுவோம்.- கிறிஸ்து நம்மைப் பூரணமாக்கும்படித் தம்மையே ஒப்புக்கொடுத்தார். அதனால் நாம் அவருடன் நித்தியத்தை அனுபவிக்க முடியும். வாழ்க்கையின் சவால்கள் மற்றும் இன்னல்களை, நம் சுபாவத்தைப் பூரணமாக்கவும், நம்மை மென்மேலும் அவரைப் போல் ஆக்கவும் அவர் அனுமதிக்கிறார். எனவே, இந்தப் பரிபூரணத்தைப் பெறத் தொடருங்கள்.- மனம் தளர்ந்துவிடாதீர்கள். நீங்கள் மீண்டும் மீண்டும் தோல்வியுற்றாலும் தொடர்ந்து முன்னேறுங்கள். கிறிஸ்துவைச் சார்ந்திருங்கள், அவர் உங்களைத் தம்மைப் போல் பரிபூரணமாக்குவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுகூர்ந்து உம்மைப் போல் பரிபூரணமாய் மாற எனக்கு உதவி செய்யும். ஆமென்.