← செய்திகளுக்குத் திரும்பு
இரவு சென்றுபோயிற்று, பகல் சமீபமாயிற்று.
படத்தைப் பதிவிறக்கு

இரவு சென்றுபோயிற்று, பகல் சமீபமாயிற்று.

“ரோமர் 13:12 அன்பு நண்பரே,சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் பலர் இரவில் செயல்படுவதை அடிக்கடி பார்க்கிறோம். துரதிர்ஷ்டவசமாக, இது ஒரு உலகளாவிய நிகழ்வாகும், ஏனெனில் பல தீய திட்டங்கள் இருட்டில் திட்டமிடப்பட்டுச் செயல்படுத்தப்படுகின்றன. ஆனால், இருளில் நாம் தொடர்ந்து வாழ முடியாது. மற்றவர்களிடமிருந்து விஷயங்களை மறைக்க முடிந்தாலும், தேவனிடமிருந்து மறைக்க முடியாது. நாம் செய்பவையெல்லாம் வெளிப்படும் கர்த்தருடைய நாள் நெருங்குகிறது. எனவே, தேவனைக் கனம்பண்ணி அவருடைய அன்பின் ஒளியைப் பிரதிபலிக்கும் வாழ்க்கை வாழ நாம் பாடுபட வேண்டும். இயேசு நம் வாழ்க்கையை மதிப்பீடு செய்தால், நாம் என்ன மதிப்பெண் பெறுவோம்? இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் நம் வாழ்வு சுத்திகரிக்கப்படுவதையும், தேவ மகிமைக்குச் சாட்சிகளாக வாழ்வதையும் உறுதிப்படுத்திக்கொள்வோம். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, ஒளியின் பிள்ளையாய் வாழ எனக்கு உதவி செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

வியாழன், 16 மே 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:இரவு சென்றுபோயிற்று, பகல் சமீபமாயிற்று. ரோமர் 13:12 அன்பு நண்பரே,சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் பலர் இரவில் செயல்படுவதை அடிக்கடி பார்க்கிறோம். துரதிர்ஷ்டவசமாக, இது ஒரு உலகளாவிய நிகழ்வாகும், ஏனெனில் பல தீய திட்டங்கள் இருட்டில் திட்டமிடப்பட்டுச் செயல்படுத்தப்படுகின்றன. ஆனால், இருளில் நாம் தொடர்ந்து வாழ முடியாது. மற்றவர்களிடமிருந்து விஷயங்களை மறைக்க முடிந்தாலும், தேவனிடமிருந்து மறைக்க முடியாது. நாம் செய்பவையெல்லாம் வெளிப்படும் கர்த்தருடைய நாள் நெருங்குகிறது. எனவே, தேவனைக் கனம்பண்ணி அவருடைய அன்பின் ஒளியைப் பிரதிபலிக்கும் வாழ்க்கை வாழ நாம் பாடுபட வேண்டும். இயேசு நம் வாழ்க்கையை மதிப்பீடு செய்தால், நாம் என்ன மதிப்பெண் பெறுவோம்? இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் நம் வாழ்வு சுத்திகரிக்கப்படுவதையும், தேவ மகிமைக்குச் சாட்சிகளாக வாழ்வதையும் உறுதிப்படுத்திக்கொள்வோம். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, ஒளியின் பிள்ளையாய் வாழ எனக்கு உதவி செய்யும். ஆமென்.