← செய்திகளுக்குத் திரும்பு
மரணபரியந்தம் உண்மையாயிருங்கள், அப்பொழுது ஜீவகிரீடத்தை உங்களுக்குத் தருவார்.
படத்தைப் பதிவிறக்கு

மரணபரியந்தம் உண்மையாயிருங்கள், அப்பொழுது ஜீவகிரீடத்தை...

“சனிக்கிழமை, 22 ஜூன் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்.வெளிப்படுத்தல் 2:10 நம் தேவன் உண்மையுள்ளவர், தமது பிள்ளைகளிடமிருந்தும் அவர் அதையே எதிர்பார்க்கிறார். உண்மை என்பது ஒரு முறை நிகழ்வதல்ல, ஆனால் வாழ்நாள் முழுவதும் காணப்படவேண்டிய உங்கள் வாழ்நாட்கால தெளிவான அர்ப்பணிப்பாகும். சிறியதும் பெரியதுமான பொறுப்புகளில் தேவன் உங்களை நம்ப முடியுமா? சூழ்நிலைகளையும் மற்றவர்களது ஆதரவையும் பொருட்படுத்தாமல், தேவன் மீதான உங்கள் பக்தியில் நீங்கள் உறுதியாய் இருப்பீர்களா? இயேசுவுக்கு உண்மையாயிருப்பது சந்தேகத்திற்கிடமின்றிப் பல்வேறு சவால்களையும் இன்னல்களையும் உடையதாகும். இருப்பினும், நீங்கள் விடாமுயற்சியுடன் இறுதிவரை அவருக்கு உண்மையாயிருந்தால், நீங்கள் ஜீவகிரீடத்தைப் பெறுவீர்கள். இந்த அசைக்க முடியாத உத்தமப் பயணத்தைத் தொடங்குவதற்கு நீங்கள் ஆயத்தமா? ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் மரணம் வரை உமக்கு உண்மையாயிருந்து, ஜீவ கிரீடத்தைப் பெற எனக்கு உதவியருளும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

சனிக்கிழமை, 22 ஜூன் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்.வெளிப்படுத்தல் 2:10 நம் தேவன் உண்மையுள்ளவர், தமது பிள்ளைகளிடமிருந்தும் அவர் அதையே எதிர்பார்க்கிறார். உண்மை என்பது ஒரு முறை நிகழ்வதல்ல, ஆனால் வாழ்நாள் முழுவதும் காணப்படவேண்டிய உங்கள் வாழ்நாட்கால தெளிவான அர்ப்பணிப்பாகும். சிறியதும் பெரியதுமான பொறுப்புகளில் தேவன் உங்களை நம்ப முடியுமா? சூழ்நிலைகளையும் மற்றவர்களது ஆதரவையும் பொருட்படுத்தாமல், தேவன் மீதான உங்கள் பக்தியில் நீங்கள் உறுதியாய் இருப்பீர்களா? இயேசுவுக்கு உண்மையாயிருப்பது சந்தேகத்திற்கிடமின்றிப் பல்வேறு சவால்களையும் இன்னல்களையும் உடையதாகும். இருப்பினும், நீங்கள் விடாமுயற்சியுடன் இறுதிவரை அவருக்கு உண்மையாயிருந்தால், நீங்கள் ஜீவகிரீடத்தைப் பெறுவீர்கள். இந்த அசைக்க முடியாத உத்தமப் பயணத்தைத் தொடங்குவதற்கு நீங்கள் ஆயத்தமா? ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் மரணம் வரை உமக்கு உண்மையாயிருந்து, ஜீவ கிரீடத்தைப் பெற எனக்கு உதவியருளும். ஆமென்.