← செய்திகளுக்குத் திரும்பு
இரட்டிப்பான நன்மையைத் தேவன் உங்களுக்குத் தருவார்.
படத்தைப் பதிவிறக்கு

இரட்டிப்பான நன்மையைத் தேவன் உங்களுக்குத் தருவார்.

“வியாழன், 13 ஜூன் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:இரட்டிப்பான நன்மையைத் தருவேன், இன்றைக்கே தருவேன்.சகரியா 9:12 நீங்கள் தொடர்ந்து உங்கள் தொழிலில் பணத்தை இழக்கிறீர்களா? அல்லது உங்கள் ஊழியத்தில் குறைவான முன்னேற்றத்தைக் காண்கிறீர்களா? இயேசுவுக்காய் நீங்கள் துன்புறுத்தலையும் இழப்பையும் சந்திக்கிறீர்களா? உங்கள் வாழ்க்கைக்கான தேவ திட்ட்த்திற்குப் பொறுமையாய்க் காத்திருந்து, அவருடைய சித்தத்திற்கு உங்களை முழுமையாக ஒப்புக்கொடுங்கள். உங்கள் கிறிஸ்தவக் கொள்கைகளைச் சமரசம் செய்யாதீர்கள். நீங்கள் என்ன செய்தாலும், உங்களது சிறப்பான உழைப்பைக் காட்டிடுங்கள். தேவன் உங்களைக் கைவிடமாட்டார். ஏற்ற காலத்தில், அவர் உங்கள் சிறையிருப்பை மாற்றி, இயேசுவுக்காக நீங்கள் அனுபவித்த அவமானத்திற்கு பதிலாக இரட்டிப்பான நன்மையைத் தருவார்.உங்களைத் துன்புறுத்திய அனைவரின் கண்களுக்கும் முன்பாக உங்களை உயர்த்துவார். அவர் உங்களை ஆசீர்வதித்து, மற்றவர்களுக்கும் உங்களை ஆசீர்வாதமாய் மாற்றுவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என்னுடைய எல்லா ஆசீர்வாதங்களையும் இருமடங்காய்த் திரும்பத் தந்தருளும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

வியாழன், 13 ஜூன் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:இரட்டிப்பான நன்மையைத் தருவேன், இன்றைக்கே தருவேன்.சகரியா 9:12 நீங்கள் தொடர்ந்து உங்கள் தொழிலில் பணத்தை இழக்கிறீர்களா? அல்லது உங்கள் ஊழியத்தில் குறைவான முன்னேற்றத்தைக் காண்கிறீர்களா? இயேசுவுக்காய் நீங்கள் துன்புறுத்தலையும் இழப்பையும் சந்திக்கிறீர்களா? உங்கள் வாழ்க்கைக்கான தேவ திட்ட்த்திற்குப் பொறுமையாய்க் காத்திருந்து, அவருடைய சித்தத்திற்கு உங்களை முழுமையாக ஒப்புக்கொடுங்கள். உங்கள் கிறிஸ்தவக் கொள்கைகளைச் சமரசம் செய்யாதீர்கள். நீங்கள் என்ன செய்தாலும், உங்களது சிறப்பான உழைப்பைக் காட்டிடுங்கள். தேவன் உங்களைக் கைவிடமாட்டார். ஏற்ற காலத்தில், அவர் உங்கள் சிறையிருப்பை மாற்றி, இயேசுவுக்காக நீங்கள் அனுபவித்த அவமானத்திற்கு பதிலாக இரட்டிப்பான நன்மையைத் தருவார்.உங்களைத் துன்புறுத்திய அனைவரின் கண்களுக்கும் முன்பாக உங்களை உயர்த்துவார். அவர் உங்களை ஆசீர்வதித்து, மற்றவர்களுக்கும் உங்களை ஆசீர்வாதமாய் மாற்றுவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என்னுடைய எல்லா ஆசீர்வாதங்களையும் இருமடங்காய்த் திரும்பத் தந்தருளும். ஆமென்.