← செய்திகளுக்குத் திரும்பு
கிறிஸ்துவைப் போல் மாறுங்கள்
படத்தைப் பதிவிறக்கு

கிறிஸ்துவைப் போல் மாறுங்கள்

“செவ்வாய், 5 மார்ச் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:துர்இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள். ரோமர் 13:14 நம் வாழ்வில் இயேசுவைப் பிரதிபலிக்க நாம் அழைக்கப்பட்டுள்ளோம். அவருடைய செயல்கள், போதனைகள், குணாதிசயங்கள் ஆகியவற்றை நாம் அனுதினமும் பின்பற்ற வேண்டும். அவருடைய எல்லாக் குணங்களையும் சுபாவங்களையும் சுதந்தரித்து, நம் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் அவற்றை நிரூபித்து, அவரைப் போல் மாற வேண்டும் என்பதே நமக்கான இறுதி இலக்காகும். ஆகையால், இனிமேல் அவரைப் போல் வாழத் தொடங்குங்கள். உங்கள் அன்றாட வாழ்வில் அவருடைய சுபாவத்தைக் காட்டுங்கள். உங்கள் முழு இருதயத்தோடும், முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும் தேவனை நேசித்து, உங்களைப் போலவே உங்கள் அயலாரையும் நேசியுங்கள். மற்றவர்களிடம் மனதுருக்கத்துடனும், பணிவாகவும், இரக்கமாகவும் இருந்து, அவர்களுக்கு அன்புடன் சேவை செய்யத் தொடர்ந்து முயன்றிடுங்கள். நீதிக்கும், நியாயத்துக்கும், உண்மைக்கும் உறுதியாய் நின்றிடுங்கள். தேவனை மகிமைப்படுத்தும் விதத்தில் உங்கள் வாழ்க்கையை வாழுங்கள். இயேசுவின் குணங்களையும் சுபாவங்களையும் மற்றவர்கள் உங்களில் காணும்போது, உண்மையில் அவர் யார் என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள். நம் வாழ்வின் மூலம் இயேசுவைப் பற்றி இந்த உலகம் அறியட்டும் இயேசுவை அனுதினமும் பின்பற்றுவதற்கான நமது அழைப்பைப் பற்றிக்கொண்டு, அவருடைய ஒளி நம் மூலம் உலகிற்குப் பிரகாசிக்க அனுமதிப்போமாக! ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் வாழ்வின் எல்லாப் பகுதிகளிலும் உம்மைப் பிரதிபலிக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

செவ்வாய், 5 மார்ச் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:துர்இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள். ரோமர் 13:14 நம் வாழ்வில் இயேசுவைப் பிரதிபலிக்க நாம் அழைக்கப்பட்டுள்ளோம். அவருடைய செயல்கள், போதனைகள், குணாதிசயங்கள் ஆகியவற்றை நாம் அனுதினமும் பின்பற்ற வேண்டும். அவருடைய எல்லாக் குணங்களையும் சுபாவங்களையும் சுதந்தரித்து, நம் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் அவற்றை நிரூபித்து, அவரைப் போல் மாற வேண்டும் என்பதே நமக்கான இறுதி இலக்காகும். ஆகையால், இனிமேல் அவரைப் போல் வாழத் தொடங்குங்கள். உங்கள் அன்றாட வாழ்வில் அவருடைய சுபாவத்தைக் காட்டுங்கள். உங்கள் முழு இருதயத்தோடும், முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும் தேவனை நேசித்து, உங்களைப் போலவே உங்கள் அயலாரையும் நேசியுங்கள். மற்றவர்களிடம் மனதுருக்கத்துடனும், பணிவாகவும், இரக்கமாகவும் இருந்து, அவர்களுக்கு அன்புடன் சேவை செய்யத் தொடர்ந்து முயன்றிடுங்கள். நீதிக்கும், நியாயத்துக்கும், உண்மைக்கும் உறுதியாய் நின்றிடுங்கள். தேவனை மகிமைப்படுத்தும் விதத்தில் உங்கள் வாழ்க்கையை வாழுங்கள். இயேசுவின் குணங்களையும் சுபாவங்களையும் மற்றவர்கள் உங்களில் காணும்போது, உண்மையில் அவர் யார் என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள். நம் வாழ்வின் மூலம் இயேசுவைப் பற்றி இந்த உலகம் அறியட்டும் இயேசுவை அனுதினமும் பின்பற்றுவதற்கான நமது அழைப்பைப் பற்றிக்கொண்டு, அவருடைய ஒளி நம் மூலம் உலகிற்குப் பிரகாசிக்க அனுமதிப்போமாக! ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் வாழ்வின் எல்லாப் பகுதிகளிலும் உம்மைப் பிரதிபலிக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்.