← செய்திகளுக்குத் திரும்பு
சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் தேவனுடைய பிள்ளைகள் என்று அழைக்கப்படுவார்கள்.
படத்தைப் பதிவிறக்கு

சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் தேவனுடைய...

“திங்கட்கிழமை, 2 அக்டோபர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள். மத்தேயு 5:9 தாவீது, கோலியாத்தின் மீது பெற்ற வெற்றியை கண்டு மக்கள் அவரைக் போற்றத் தொடங்கியதால், சவுல் ராஜா தாவீது மீது கோபமடைந்தார். அடுத்த ராஜாவாக கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட தாவீது தனது சிம்மாசனத்திற்கு அச்சுறுத்தலாக இருந்ததால் சவுல் தாவீதை கொன்று விட அதிகமாக முயற்சித்தார். மறுபுறம், யோனத்தானோ தாவீது ராஜாவாக இருப்பதற்கான கர்த்தரின் முடிவை ஏற்றுக்கொண்டு தாவீதுடன் மிகவும் சிநேகமாயிருந்தான். சவுல் பலமுறை தாவீதைக் கொல்ல முயன்றபோது, யோனத்தான் அவனுக்காக தன் தகப்பனிடம் பேசினான். அவன் தாவீதுக்காக வாதாடி சவுலுக்கும் தாவீதுக்கும் இடையே சமாதானத்தை ஏற்படுத்த முயன்றான். சமாதானம் செய்ய முயன்றதின் காரணமாக, சவுல் ஒருமுறை யோனத்தான் மீது ஈட்டியை வீசும் அளவுக்கு கோபமாய் இருந்தார். அச்சுறுத்தல் இருந்தபோதிலும், யோனத்தான் தாவீதுடனான நட்பில் உறுதியாக இருந்தான் மேலும் சமாதானம் செய்பவராக இருந்தான். எல்லா தேவனுடையப் பிள்ளைகளுக்கும் சமாதானம் பண்ணுவது என்பது ஒரு முக்கியமான குணமாக இருக்க வேண்டும். நம்மில் பெரும்பாலோர் அப்படி இருப்பதில்லை. பல கிறிஸ்தவர்கள் குழப்பவாதிகளாகவும் சமாதானத்தை உடைப்பவர்களாகவும் இருக்கிறார்கள், என்பது வேதனைக்குரிய உண்மை. தேவனுடையப் பிள்ளையாக, 1. உங்கள் வாழ்க்கையில் சமாதானம் செய்பவர்கள் இருக்கிறார்களா, அவர்கள் உங்களுக்கு எவ்வாறு பயனளித்திருக்கிறார்கள்?2. உங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்கள் எவ்வாறு சமாதானம் பண்ணுபவராக இருக்க முடியும்? # கர்த்தரின் பிள்ளைகள் என்று நம்மைக் குறித்து பேசுவதைவிட, கர்த்தரின் பிள்ளைகளாக வாழ்வது முக்கியம்.# சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, சமாதானம் செய்பவராக நான் வாழ்ந்து, உமது நற்குணத்தை உலகுக்குக் காட்ட எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

திங்கட்கிழமை, 2 அக்டோபர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள். மத்தேயு 5:9 தாவீது, கோலியாத்தின் மீது பெற்ற வெற்றியை கண்டு மக்கள் அவரைக் போற்றத் தொடங்கியதால், சவுல் ராஜா தாவீது மீது கோபமடைந்தார். அடுத்த ராஜாவாக கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட தாவீது தனது சிம்மாசனத்திற்கு அச்சுறுத்தலாக இருந்ததால் சவுல் தாவீதை கொன்று விட அதிகமாக முயற்சித்தார். மறுபுறம், யோனத்தானோ தாவீது ராஜாவாக இருப்பதற்கான கர்த்தரின் முடிவை ஏற்றுக்கொண்டு தாவீதுடன் மிகவும் சிநேகமாயிருந்தான். சவுல் பலமுறை தாவீதைக் கொல்ல முயன்றபோது, யோனத்தான் அவனுக்காக தன் தகப்பனிடம் பேசினான். அவன் தாவீதுக்காக வாதாடி சவுலுக்கும் தாவீதுக்கும் இடையே சமாதானத்தை ஏற்படுத்த முயன்றான். சமாதானம் செய்ய முயன்றதின் காரணமாக, சவுல் ஒருமுறை யோனத்தான் மீது ஈட்டியை வீசும் அளவுக்கு கோபமாய் இருந்தார். அச்சுறுத்தல் இருந்தபோதிலும், யோனத்தான் தாவீதுடனான நட்பில் உறுதியாக இருந்தான் மேலும் சமாதானம் செய்பவராக இருந்தான். எல்லா தேவனுடையப் பிள்ளைகளுக்கும் சமாதானம் பண்ணுவது என்பது ஒரு முக்கியமான குணமாக இருக்க வேண்டும். நம்மில் பெரும்பாலோர் அப்படி இருப்பதில்லை. பல கிறிஸ்தவர்கள் குழப்பவாதிகளாகவும் சமாதானத்தை உடைப்பவர்களாகவும் இருக்கிறார்கள், என்பது வேதனைக்குரிய உண்மை. தேவனுடையப் பிள்ளையாக, 1. உங்கள் வாழ்க்கையில் சமாதானம் செய்பவர்கள் இருக்கிறார்களா, அவர்கள் உங்களுக்கு எவ்வாறு பயனளித்திருக்கிறார்கள்?2. உங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்கள் எவ்வாறு சமாதானம் பண்ணுபவராக இருக்க முடியும்? # கர்த்தரின் பிள்ளைகள் என்று நம்மைக் குறித்து பேசுவதைவிட, கர்த்தரின் பிள்ளைகளாக வாழ்வது முக்கியம்.# சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, சமாதானம் செய்பவராக நான் வாழ்ந்து, உமது நற்குணத்தை உலகுக்குக் காட்ட எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.