← செய்திகளுக்குத் திரும்பு
கவலை உங்கள் மகிழ்ச்சியைப் பறிக்கிறது
படத்தைப் பதிவிறக்கு

கவலை உங்கள் மகிழ்ச்சியைப் பறிக்கிறது

“வெள்ளிக்கிழமை, 11 அக்டோபர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:மனுஷனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும்; நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும். நீதிமொழிகள் 12:25 கவலை நம் வாழ்விலிருந்து மகிழ்ச்சியையும் சமாதானத்தையும் உறிஞ்சிவிட்டு, எதையும் மகிழ்ச்சியோடு அனுபவிப்பதைத் தடுக்கிறபடியால் அது, தீங்கு விளைவிக்கக் கூடியதாய் இருக்கிறது.கடந்த கால நிகழ்வுகளைப் பற்றிய கவலைகள் உங்களை மேற்கொள்கிறதா? நினைவில் கொள்ளுங்கள், கவலையால் கடந்த காலத்தை மாற்ற முடியாது. நிகழ்காலமோ, எதிர்காலமோ நம் கையில் இல்லை. இந்தச் சுமைகளைச் சுமக்காமல், நம் காலங்கள் உட்பட அனைத்தையும் கட்டுப்படுத்தும் தேவனிடம் அவற்றை ஒப்புக்கொடுங்கள். நீங்கள் கட்டுப்படுத்தக்கூடியவற்றில் கவனம் செலுத்துங்கள். எல்லாச் சூழ்நிலைகளிலும் உங்களால் முடிந்ததைச் செய்ய முயற்சி செய்யுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, இவ்வுலகின் கவலைகளில் மூழ்காமல் இருக்க எனக்கு உதவி செய்யும். என் கவலைகள் அனைத்தையும் உம் பாதத்தில் வைத்துவிட்டு, உம்முடைய சமாதானத்தை அனுபவிக்க எனக்கு கிருபை தாரும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

வெள்ளிக்கிழமை, 11 அக்டோபர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:மனுஷனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும்; நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும். நீதிமொழிகள் 12:25 கவலை நம் வாழ்விலிருந்து மகிழ்ச்சியையும் சமாதானத்தையும் உறிஞ்சிவிட்டு, எதையும் மகிழ்ச்சியோடு அனுபவிப்பதைத் தடுக்கிறபடியால் அது, தீங்கு விளைவிக்கக் கூடியதாய் இருக்கிறது.கடந்த கால நிகழ்வுகளைப் பற்றிய கவலைகள் உங்களை மேற்கொள்கிறதா? நினைவில் கொள்ளுங்கள், கவலையால் கடந்த காலத்தை மாற்ற முடியாது. நிகழ்காலமோ, எதிர்காலமோ நம் கையில் இல்லை. இந்தச் சுமைகளைச் சுமக்காமல், நம் காலங்கள் உட்பட அனைத்தையும் கட்டுப்படுத்தும் தேவனிடம் அவற்றை ஒப்புக்கொடுங்கள். நீங்கள் கட்டுப்படுத்தக்கூடியவற்றில் கவனம் செலுத்துங்கள். எல்லாச் சூழ்நிலைகளிலும் உங்களால் முடிந்ததைச் செய்ய முயற்சி செய்யுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, இவ்வுலகின் கவலைகளில் மூழ்காமல் இருக்க எனக்கு உதவி செய்யும். என் கவலைகள் அனைத்தையும் உம் பாதத்தில் வைத்துவிட்டு, உம்முடைய சமாதானத்தை அனுபவிக்க எனக்கு கிருபை தாரும். ஆமென்.