← செய்திகளுக்குத் திரும்பு
யாரை அல்லது எதை நீங்கள் நம்பப் போகிறீர்கள்?
படத்தைப் பதிவிறக்கு

யாரை அல்லது எதை நீங்கள் நம்பப் போகிறீர்கள்?

“சனிக்கிழமை, 28 டிசம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக்குறித்தும் மேன்மைபாராட்டுகிறார்கள்; நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம்.சங்கீதம் 20:7 இந்த உலகம், நீதிமான்களை விட வெற்றிகரமான நபர்களை அதிகமாய் மதிக்க முனைகிறது. பலர், இருதயத்தில் ஊழல் நிறைந்தவர்களாய், சோம்பேறிகளாய், வாழ்க்கையில் வெற்றிபெறக் குறுக்குவழிகளைத் தொடர்ந்து தேடுகிறார்கள். அவர்கள் தங்கள் சொந்த பலம், செல்வம் மற்றும் செல்வாக்கை நம்பியிருக்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாய், சிலர் பெரும்பாலும், மற்றவர்களிடமிருந்து வாய்ப்புகள், வெகுமதிகள், சொத்துக்கள் மற்றும் செல்வத்தை விரும்பித் திருடுகிறார்கள். ஆனால், அவை ஏற்படுத்தும் வலி மற்றும் துன்பத்தை அறிவதில்லை. ஆனால் நீங்களோ, தேவனுடைய பிள்ளைகளே:- உலக வளங்களில் உங்கள் நம்பிக்கையை வைக்காதீர்கள்.- நீங்கள் பின்னடைவுகளைச் சந்திக்க வேண்டியிருந்தாலும், உங்கள் நீதியான வாழ்க்கையை விட்டுவிடாதீர்கள்.- தேவனில் தொடர்ந்து நம்பிக்கை வையுங்கள். உலக முயற்சிகள் அனைத்தும் இறுதியில் தோல்வியடையும். ஆனால், கர்த்தருடைய நாமத்தில் நம்பிக்கை வைப்பவர்கள் செழிப்பார்கள். தேவன் அவர்களை அவர்களது கஷ்டங்களிலிருந்து விடுவித்து, எல்லையற்றதும் முடிவில்லாதுமான மகிழ்ச்சியால் நிரப்பப்பட்ட நித்திய பேரின்பத்தை கட்டளையிடுவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நான் உமது நாமத்தில் நம்பிக்கை வைக்கிறேன். உமது வழிகளின்படி என் வாழ்க்கையை வாழவும், நான் செய்யும் எல்லாவற்றிலும் வெற்றிபெறவும் எனக்கு உதவி செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

சனிக்கிழமை, 28 டிசம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக்குறித்தும் மேன்மைபாராட்டுகிறார்கள்; நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம்.சங்கீதம் 20:7 இந்த உலகம், நீதிமான்களை விட வெற்றிகரமான நபர்களை அதிகமாய் மதிக்க முனைகிறது. பலர், இருதயத்தில் ஊழல் நிறைந்தவர்களாய், சோம்பேறிகளாய், வாழ்க்கையில் வெற்றிபெறக் குறுக்குவழிகளைத் தொடர்ந்து தேடுகிறார்கள். அவர்கள் தங்கள் சொந்த பலம், செல்வம் மற்றும் செல்வாக்கை நம்பியிருக்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாய், சிலர் பெரும்பாலும், மற்றவர்களிடமிருந்து வாய்ப்புகள், வெகுமதிகள், சொத்துக்கள் மற்றும் செல்வத்தை விரும்பித் திருடுகிறார்கள். ஆனால், அவை ஏற்படுத்தும் வலி மற்றும் துன்பத்தை அறிவதில்லை. ஆனால் நீங்களோ, தேவனுடைய பிள்ளைகளே:- உலக வளங்களில் உங்கள் நம்பிக்கையை வைக்காதீர்கள்.- நீங்கள் பின்னடைவுகளைச் சந்திக்க வேண்டியிருந்தாலும், உங்கள் நீதியான வாழ்க்கையை விட்டுவிடாதீர்கள்.- தேவனில் தொடர்ந்து நம்பிக்கை வையுங்கள். உலக முயற்சிகள் அனைத்தும் இறுதியில் தோல்வியடையும். ஆனால், கர்த்தருடைய நாமத்தில் நம்பிக்கை வைப்பவர்கள் செழிப்பார்கள். தேவன் அவர்களை அவர்களது கஷ்டங்களிலிருந்து விடுவித்து, எல்லையற்றதும் முடிவில்லாதுமான மகிழ்ச்சியால் நிரப்பப்பட்ட நித்திய பேரின்பத்தை கட்டளையிடுவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நான் உமது நாமத்தில் நம்பிக்கை வைக்கிறேன். உமது வழிகளின்படி என் வாழ்க்கையை வாழவும், நான் செய்யும் எல்லாவற்றிலும் வெற்றிபெறவும் எனக்கு உதவி செய்யும். ஆமென்.