← செய்திகளுக்குத் திரும்பு
மற்றவர்கள் சரியானதைச் செய்ய உதவிச் செய்து அவர்களைக் கர்த்தருக்குள் கட்டியெழுப்புங்கள்.
படத்தைப் பதிவிறக்கு

மற்றவர்கள் சரியானதைச் செய்ய உதவிச் செய்து அவர்களைக்...

“உங்கள் வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதற்கும் மற்றவர்களை கர்த்தரில் கட்டியெழுப்புவதற்கும் நீங்கள் எந்தளவு வெளிப்படையாயிருக்கிறீர்கள்? # உங்கள் நேரம், செல்வங்கள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு மற்றவர்களுக்கு உதவிச் செய்யுங்கள்.# அது அவர்கள் கர்த்தருக்குள் வளரவும், வாழ்க்கையில் சரியான காரியங்களைச் செய்யவும் உதவிச் செய்யும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, மற்றவர்களை நான் எல்லா வழிகளிலும் உயர்த்தவும், அவர்கள் உம்மில் வளரவும் உதவிச் செய்யும் ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

வியாழன், 2 நவம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நம்மில் ஒவ்வொருவனும் பிறனுடைய பக்திவிருத்திக்கேதுவான நன்மையுண்டாகும்படி அவனுக்குப் பிரியமாய் நடக்கக்கடவன். ரோமர் 15:2. இன்றைய பரபரப்பான உலகில், மற்றவர்களுக்கு நேரம் கொடுப்பதே சவாலாக மாறிவிட்டது. முக்கியமாக சுயநலம் கொண்டவர்களுக்கு இது மிகவும் கடினம். ஆனால், மற்றவர்கள் சரியான விஷயங்களைச் செய்யவும், அவர்களைக் கட்டியெழுப்ப உதவிச் செய்வதும் தேவனுடையப் பிள்ளைகளின் முக்கியமானப் பணியாகக் கருதப்படுகிறது. அப்போஸ்தலனாகிய பவுல் மற்றவர்களை உயர்த்த உதவிச் செய்ததற்கு ஒரு சிறந்த உதாரணம். அவர் ஒரு சிறந்த வழிகாட்டியாகவும் ஊக்கமளிப்பவராகவும் இருந்தார். அவர் இளம் தலைவர்களை வளர்ப்பதில் அதிக நேரம் செலவிட்டார். அவர் மற்றவர்களிடமிருந்து பெற்ற ஆதரவை கவனத்தோடு அங்கிகரித்து ஏற்றுக்கொண்டார். சக விசுவாசிகளுக்கும் தலைவர்களுக்கும் உதவி செய்ய அவர் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தார். அவர் மற்றவர்களைக் கட்டியெழுப்ப தனது அனுபவங்களை வெளிப்படையுடனும், குறிக்கோளுடனும் பகிர்ந்துக் கொண்டார். 1. மற்றவர்கள் சரியானதைச் செய்யும் படி அவர்களுக்கு உதவ நீங்கள் நேரத்தை ஒதுக்குகிறீர்களா?2. உங்கள் வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதற்கும் மற்றவர்களை கர்த்தரில் கட்டியெழுப்புவதற்கும் நீங்கள் எந்தளவு வெளிப்படையாயிருக்கிறீர்கள்? # உங்கள் நேரம், செல்வங்கள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு மற்றவர்களுக்கு உதவிச் செய்யுங்கள்.# அது அவர்கள் கர்த்தருக்குள் வளரவும், வாழ்க்கையில் சரியான காரியங்களைச் செய்யவும் உதவிச் செய்யும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, மற்றவர்களை நான் எல்லா வழிகளிலும் உயர்த்தவும், அவர்கள் உம்மில் வளரவும் உதவிச் செய்யும் ஆமென்.