இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்மமுழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார். தீத்து 3:5 ஒருகாலத்தில் நாமும், அஞ்ஞானிகளாகவும் கீழ்ப்படியாதவர்களாகவும் இருந்தோம். நாம் தவறாய் வழிநடத்தப்பட்டுப் பல இச்சைகளுக்கும் இன்பங்களுக்கும் அடிமையானோம். நாம் ஒருவரையொருவர் பகைக்கத் தக்கவர்களாயிருந்தோம். நம் வாழ்க்கை தீமையும் பொறாமையும் நிறைந்ததாய் இருந்தது. ஆனால், நம்முடைய இரட்சகராகிய தேவன் தம்முடைய இரக்கத்தையும் அன்பையும் வெளிப்படுத்தியபோது, நாம் செய்த நீதியான காரியங்களால் அல்ல, மாறாக அவருடைய இரக்கத்தினாலே அவர் நம்மை இரட்சித்தார். அவர் நம்முடைய பாவங்களைக் கழுவி, பரிசுத்த ஆவியினால் நமக்குப் புதுப் பிறப்பையும் புது வாழ்வையும் தந்தார். நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்து மூலமாய் அவர் தாராளமாய் ஆவியை நம்மேல் ஊற்றினார். அவருடைய கிருபையினாலே, அவர் நம்மை நீதிமான்களாய் அறிவித்து, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளுவோம் என்ற நம்பிக்கையை அளித்தார். உங்கள் இரட்சிப்பின் கதை என்ன? அதை மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டு, அவர்களது இரட்சிப்பின் தேவனைக் கண்டறிய உதவுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுகூர்ந்து எனக்கு ஓர் புதிய வாழ்வைத் தந்து, மற்றவர்கள் என் மூலமாய் உம்மை அறிந்து கொள்ள உதவி செய்யும் . ஆமென்.
பரிசுத்த ஆவியினால் புதிய வாழ்க்கை
“இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்மமுழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார். தீத்து 3:5 ஒருகாலத்தில் நாமும், அஞ்ஞானிகளாகவும் கீழ்ப்படியாதவர்களாகவும் இருந்தோம். நாம் தவறாய் வழிநடத்தப்பட்டுப் பல இச்சைகளுக்கும் இன்பங்களுக்கும் அடிமையானோம். நாம் ஒருவரையொருவர் பகைக்கத் தக்கவர்களாயிருந்தோம். நம் வாழ்க்கை தீமையும் பொறாமையும் நிறைந்ததாய் இருந்தது. ஆனால், நம்முடைய இரட்சகராகிய தேவன் தம்முடைய இரக்கத்தையும் அன்பையும் வெளிப்படுத்தியபோது, நாம் செய்த நீதியான காரியங்களால் அல்ல, மாறாக அவருடைய இரக்கத்தினாலே அவர் நம்மை இரட்சித்தார். அவர் நம்முடைய பாவங்களைக் கழுவி, பரிசுத்த ஆவியினால் நமக்குப் புதுப் பிறப்பையும் புது வாழ்வையும் தந்தார். நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்து மூலமாய் அவர் தாராளமாய் ஆவியை நம்மேல் ஊற்றினார். அவருடைய கிருபையினாலே, அவர் நம்மை நீதிமான்களாய் அறிவித்து, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளுவோம் என்ற நம்பிக்கையை அளித்தார். உங்கள் இரட்சிப்பின் கதை என்ன? அதை மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டு, அவர்களது இரட்சிப்பின் தேவனைக் கண்டறிய உதவுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுகூர்ந்து எனக்கு ஓர் புதிய வாழ்வைத் தந்து, மற்றவர்கள் என் மூலமாய் உம்மை அறிந்து கொள்ள உதவி செய்யும் . ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

