ஞாயிற்றுக்கிழமை, 6 அக்டோபர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீயோ ஆரோக்கியமான உபதேசத்துக்கேற்றவைகளைப் பேசு. தீத்து 2:1 மீண்டும் ஒருமுறை, நல்ல வாழ்வு வாழ்வதற்குப் பவுலின் வலியுறுத்தலை நினைவூட்டிக்கொள்கிறோம். இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ஆரோக்கியமான உபதேசத்தை நம் வாழ்வில் பிரதிபலிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்துகிறார். நம் வாழ்வானது நம் ஆண்டவரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் போதனைகளையும் வாழ்க்கையையும் பிரதிபலிக்க வேண்டும். நம் வாழ்வையும் நாம் பிறருக்குப் பிரசங்கிக்கும் செய்தியையும் கூர்ந்து கவனிப்பது முக்கியம். கிறிஸ்துவைப் பற்றிய முழுமையான புரிதலையும், நற்செய்தி மற்றும் போதனைகளையும், நாம் வாழும் வழியின் மூலம் பிறருக்குத் தெரிவிக்க முயற்சி செய்ய வேண்டும். நமது வார்த்தைகளும் செயல்களும் சீரமைக்கப்பட வேண்டும். ஏனெனில் முரண்பட்ட வாழ்க்கை வாழ்ந்தால், அது மாயக்காரர் என்று முத்திரை குத்தப்படுவதற்கு வழிவகுக்கும். அது தேவனுக்குப் பிரியமற்றதாகும். உங்கள் வாழ்க்கையைப் பற்றி இன்று சிந்தித்துப் பாருங்கள். அது உண்மையிலேயே இயேசுவைப் பிரதிபலிக்கிறதா என யோசியுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது அன்பையும், பிற பண்புகளையும் பிரதிபலிக்கும் ஓர் வாழ்க்கை வாழ எனக்கு உதவி செய்யும். ஆமென்.
ஆரோக்கியமான உபதேசத்தைப் பிரதிபலிக்கும் வகையிலான வாழ்வை...
“ஞாயிற்றுக்கிழமை, 6 அக்டோபர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீயோ ஆரோக்கியமான உபதேசத்துக்கேற்றவைகளைப் பேசு. தீத்து 2:1 மீண்டும் ஒருமுறை, நல்ல வாழ்வு வாழ்வதற்குப் பவுலின் வலியுறுத்தலை நினைவூட்டிக்கொள்கிறோம். இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ஆரோக்கியமான உபதேசத்தை நம் வாழ்வில் பிரதிபலிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்துகிறார். நம் வாழ்வானது நம் ஆண்டவரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் போதனைகளையும் வாழ்க்கையையும் பிரதிபலிக்க வேண்டும். நம் வாழ்வையும் நாம் பிறருக்குப் பிரசங்கிக்கும் செய்தியையும் கூர்ந்து கவனிப்பது முக்கியம். கிறிஸ்துவைப் பற்றிய முழுமையான புரிதலையும், நற்செய்தி மற்றும் போதனைகளையும், நாம் வாழும் வழியின் மூலம் பிறருக்குத் தெரிவிக்க முயற்சி செய்ய வேண்டும். நமது வார்த்தைகளும் செயல்களும் சீரமைக்கப்பட வேண்டும். ஏனெனில் முரண்பட்ட வாழ்க்கை வாழ்ந்தால், அது மாயக்காரர் என்று முத்திரை குத்தப்படுவதற்கு வழிவகுக்கும். அது தேவனுக்குப் பிரியமற்றதாகும். உங்கள் வாழ்க்கையைப் பற்றி இன்று சிந்தித்துப் பாருங்கள். அது உண்மையிலேயே இயேசுவைப் பிரதிபலிக்கிறதா என யோசியுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது அன்பையும், பிற பண்புகளையும் பிரதிபலிக்கும் ஓர் வாழ்க்கை வாழ எனக்கு உதவி செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

