← செய்திகளுக்குத் திரும்பு
தேவன் உங்கள் வாயைச் சிரிப்பினாலும், உங்கள் உதடுகளைக் கெம்பீரத்தாலும் நிரப்புவார்
படத்தைப் பதிவிறக்கு

தேவன் உங்கள் வாயைச் சிரிப்பினாலும், உங்கள் உதடுகளைக்...

“திடங்கொள்ளுங்கள்! ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது மகிமைக்காக என் துக்கத்தைக் களிப்பாய் மாற்றும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

செவ்வாய், 27 ஆகஸ்ட் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:இனி அவர் உம்முடைய வாயைச் சிரிப்பினாலும், உம்முடைய உதடுகளைக் கெம்பீரத்தினாலும் நிரப்புவார். யோபு 8:21 உங்கள் ஒழுங்கற்ற கடந்த காலத்தின் காரணமாய் மற்றவர்களுடன் பழகுவதற்கு நீங்கள் வெட்கப்படுகிறீர்களா?உங்களின் தற்போதைய தோல்விகளும், தொழிற் சரிவும் உங்களை மனச்சோர்வடையச் செய்கிறதா? நீங்கள் இயேசுவுக்குள் திடனாய் இருந்தால் உங்கள் எதிர்காலம் மீண்டும் மலர்ந்து செழிக்கும்.நிகழ்காலம் உங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிக்க விடாதீர்கள். வெட்கப்பட்ட இடத்தில் தேவன் உங்களைப் புகழ்ச்சியாக்குவார். அவர் உங்களை வெற்றியடையச் செய்து உங்களுடன் போட்டியிடுவோரைக் காட்டிலும் சிறந்துவிளங்கச் செய்வார். துக்கமும் வேதனையும் உள்ள இடத்தில் தேவன் உங்கள் வாயைச் சிரிப்பினாலும், உங்கள் உதடுகளை மகிழ்ச்சியினாலும் நிரப்புவார். திடங்கொள்ளுங்கள்! ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது மகிமைக்காக என் துக்கத்தைக் களிப்பாய் மாற்றும். ஆமென்.