சனிக்கிழமை, 9 டிசம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தர் இரக்கமும் மன உருக்கமும் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் உள்ளவர். சங்கீதம் 145:8 இரக்கத்துடன் இருப்பதென்பது மற்றவர்களிடம் கண்ணியமாகவும் கனிவாகவும் இருப்பதைக் குறிக்கிறது. முரட்டுத்தனமான நடத்தை இரக்கத்துக்கு எதிரானது. பொதுவாகவே, ஏழைகள் மற்றும் வரியவரிடம் மக்கள் முரட்டுத்தனமாக அல்லது கடினமாக நடந்துகொள்வதைப் பார்க்க முடிகிறது. தலைமைப் பதவியில் இருப்பவர்கள் தங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களிடம் முரட்டுத்தனமாக நடந்து கொள்வதையும், அவர்களை மிரட்டுவதையும் அடிக்கடி நாம் காணலாம். # தேவனின் பிள்ளையாக, மற்றவர்களை நீங்கள் எப்படி நடத்துகிறீர்கள்?# நீங்கள் அன்பானவரா அல்லது முரட்டுத்தனமானவரா?# மற்றவர்கள் தவறு செய்யும்போது, நீங்கள் அவர்களுக்கு கிருபை பாராட்டுவீர்களா? விபச்சாரத்தில் சிக்கிய ஒரு பெண் இயேசுவிடம் கொண்டு வரப்பட்டபோது, அவர் அவளை அன்பாக நடத்தினார். அங்கு அவர் கிருபையையும் இரக்கத்தையும் பிரதிபலிக்கிறார். தனது பிள்ளைகளும் பிறரிடம் அதே அணுகுமுறையைக் கொண்டிருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறார். # மற்றவர்களிடம், குறிப்பாகத் தவறு செய்பவர்களிடம் இரக்கம் காட்டுவது பலவீனத்தின் அடையாளமல்ல.# மாறாக, இது பரிசுத்த ஆவியின் பலத்தின் மூலம் எடுத்துக்காட்டாய் அமையக்கூடிய சிறந்ததொரு குணம்.# எனவே, உங்கள் குடும்பத்திலும், பணியிடத்திலும், சமுதாயத்திலும் மற்றவரிடம் உங்கள் இரக்கத்தைக் காண்பித்து அவர்களிடம் மன உருக்கத்தோடிருங்கள்.# இயேசுவின் அன்பு உங்கள்மூலம் இவ்வுலகில் பரவட்டும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து அனைவரிடமும் இரக்கத்தோடிருக்க எனக்கு உதவும். ஆமென்.
கர்த்தர் இரக்கமும் மன உருக்கமும் உள்ளவர்.
“ந்தமும் மிகுந்த கிருபையும் உள்ளவர். சங்கீதம் 145:8 இரக்கத்துடன் இருப்பதென்பது மற்றவர்களிடம் கண்ணியமாகவும் கனிவாகவும் இருப்பதைக் குறிக்கிறது. முரட்டுத்தனமான நடத்தை இரக்கத்துக்கு எதிரானது. பொதுவாகவே, ஏழைகள் மற்றும் வரியவரிடம் மக்கள் முரட்டுத்தனமாக அல்லது கடினமாக நடந்துகொள்வதைப் பார்க்க முடிகிறது. தலைமைப் பதவியில் இருப்பவர்கள் தங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களிடம் முரட்டுத்தனமாக நடந்து கொள்வதையும், அவர்களை மிரட்டுவதையும் அடிக்கடி நாம் காணலாம். # தேவனின் பிள்ளையாக, மற்றவர்களை நீங்கள் எப்படி நடத்துகிறீர்கள்?# நீங்கள் அன்பானவரா அல்லது முரட்டுத்தனமானவரா?# மற்றவர்கள் தவறு செய்யும்போது, நீங்கள் அவர்களுக்கு கிருபை பாராட்டுவீர்களா? விபச்சாரத்தில் சிக்கிய ஒரு பெண் இயேசுவிடம் கொண்டு வரப்பட்டபோது, அவர் அவளை அன்பாக நடத்தினார். அங்கு அவர் கிருபையையும் இரக்கத்தையும் பிரதிபலிக்கிறார். தனது பிள்ளைகளும் பிறரிடம் அதே அணுகுமுறையைக் கொண்டிருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறார். # மற்றவர்களிடம், குறிப்பாகத் தவறு செய்பவர்களிடம் இரக்கம் காட்டுவது பலவீனத்தின் அடையாளமல்ல.# மாறாக, இது பரிசுத்த ஆவியின் பலத்தின் மூலம் எடுத்துக்காட்டாய் அமையக்கூடிய சிறந்ததொரு குணம்.# எனவே, உங்கள் குடும்பத்திலும், பணியிடத்திலும், சமுதாயத்திலும் மற்றவரிடம் உங்கள் இரக்கத்தைக் காண்பித்து அவர்களிடம் மன உருக்கத்தோடிருங்கள்.# இயேசுவின் அன்பு உங்கள்மூலம் இவ்வுலகில் பரவட்டும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து அனைவரிடமும் இரக்கத்தோடிருக்க எனக்கு உதவும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

