திங்கள், 27 நவம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உங்கள் ஆவிக்குள் நீங்கள் வல்லமையுடைவர்களாக இருக்க விரும்புகிறேன். நான் பிதாவை அவரது உயர்ந்த மகிமையின் நிமித்தம் கேட்கிறேன். அவர் தமது ஆவியின் மூலமாக அந்த வல்லமையைத் தருவார். எபேசியர் 3:16 (TERV) பரிசுத்தமும் வெற்றிகரமுமானதொரு வாழ்க்கை வாழ, பரிசுத்த ஆவியால் பெலப்படுத்தப்படுவது மிகவும் இன்றியமையாததாகும். ஒவ்வொரு தேவ பிள்ளையையும் வழிவிலகச் செய்ய, அவர்களுக்கு எதிராய் அனுதினமும் சாத்தான் போர் செய்துகொண்டிருக்கிறான். அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாய் மிகப்பெரும் வஞ்சகங்களுக்குப் பேர்பெற்றவனாயிருக்கிறான். அவன் ஒவ்வொருவரையும் அச்சுறுத்தி வஞ்சித்துத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முயற்சிக்கிறான். என்றாலும், ‘சத்தியமாய்’ இருக்கிற தேவன்தாமே, தம்மை நம்பும் யாவருக்கும் விடுதலையளிக்கிறார். அவர், பாவம், வியாதி மற்றும் சத்துருவின் எல்லாக் கொடுக்குகளிலிருந்தும் ஜனங்களை விடுவிக்கிறார். தங்களது வாழ்நாள் முழுவதும் விடுதலையாய் இருக்கத் தமது பிள்ளைகளைத் தேவன் பெலப்படுத்துகிறார். அதுமாத்திரமல்ல, இருளில் இடறுகிறவர்களுக்கு விடுதலையின் நற்செய்தியைப் பிரசித்தப்படுத்தவும் அவர்களை இயேசுவின் நாமத்தில் விடுதலையாக்கவும் தமது பிள்ளைகளைப் பரிசுத்த ஆவியின் பெலத்தால் நிறைக்கிறார். 1. வெற்றியுள்ள வாழ்க்கை வாழத் தேவனால் உங்களுக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரத்தைப் புரிந்துகொள்ளுகிறீர்களா?2. அடிமைத்தனத்தில் இருப்போர்க்கு விடுதலையின் நற்செய்தியைப் பகிர்ந்துகொண்டு அவர்களைச் சாத்தானின் பிடியினின்று விடுவிக்க நீங்கள் எவ்வளவு ஜாக்கிரதையாய் இருக்கிறீர்கள்? # ஒரு தேவனுடைய பிள்ளையாய்ப் பிறரை இருளிலிருந்து விடுவித்து ஒளியினிடமாய்க் கொண்டுவர நீங்கள் கடமைப்பட்டிருக்கிறீர்கள்.# இவ்வுலகத்தில் தமது பிரதிநிதியாய் இருக்கும்படி இயேசு உங்களைப் பெலப்படுத்துகிறார்.# உங்கள் பொறுப்பை அலட்சியப்படுத்தாதீர்கள். எதிரிக்கும் அஞ்சாதீர்கள்.# கிறிஸ்து உங்களில் இருப்பதால் முற்றும் ஜெயெங்கொள்ளுகிறவர்களாய் நீங்கள் பெலப்படுத்தப்பட்டிருக்கிறீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது பிள்ளையாய் வெற்றியுள்ள வாழ்க்கை வாழ எனக்கிருக்கும் பெலத்தைப் பற்றிப் புரிந்துகொள்ளக் கிருபை செய்யும். ஆமென்.
தேவன் தமது ஆவியினாலே உங்கள் உள்ளான மனுஷனைப் பெலப்படுத்துவார்.
“திங்கள், 27 நவம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உங்கள் ஆவிக்குள் நீங்கள் வல்லமையுடைவர்களாக இருக்க விரும்புகிறேன். நான் பிதாவை அவரது உயர்ந்த மகிமையின் நிமித்தம் கேட்கிறேன். அவர் தமது ஆவியின் மூலமாக அந்த வல்லமையைத் தருவார். எபேசியர் 3:16 (TERV) பரிசுத்தமும் வெற்றிகரமுமானதொரு வாழ்க்கை வாழ, பரிசுத்த ஆவியால் பெலப்படுத்தப்படுவது மிகவும் இன்றியமையாததாகும். ஒவ்வொரு தேவ பிள்ளையையும் வழிவிலகச் செய்ய, அவர்களுக்கு எதிராய் அனுதினமும் சாத்தான் போர் செய்துகொண்டிருக்கிறான். அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாய் மிகப்பெரும் வஞ்சகங்களுக்குப் பேர்பெற்றவனாயிருக்கிறான். அவன் ஒவ்வொருவரையும் அச்சுறுத்தி வஞ்சித்துத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முயற்சிக்கிறான். என்றாலும், 'சத்தியமாய்' இருக்கிற தேவன்தாமே, தம்மை நம்பும் யாவருக்கும் விடுதலையளிக்கிறார். அவர், பாவம், வியாதி மற்றும் சத்துருவின் எல்லாக் கொடுக்குகளிலிருந்தும் ஜனங்களை விடுவிக்கிறார். தங்களது வாழ்நாள் முழுவதும் விடுதலையாய் இருக்கத் தமது பிள்ளைகளைத் தேவன் பெலப்படுத்துகிறார். அதுமாத்திரமல்ல, இருளில் இடறுகிறவர்களுக்கு விடுதலையின் நற்செய்தியைப் பிரசித்தப்படுத்தவும் அவர்களை இயேசுவின் நாமத்தில் விடுதலையாக்கவும் தமது பிள்ளைகளைப் பரிசுத்த ஆவியின் பெலத்தால் நிறைக்கிறார். 1. வெற்றியுள்ள வாழ்க்கை வாழத் தேவனால் உங்களுக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரத்தைப் புரிந்துகொள்ளுகிறீர்களா?2. அடிமைத்தனத்தில் இருப்போர்க்கு விடுதலையின் நற்செய்தியைப் பகிர்ந்துகொண்டு அவர்களைச் சாத்தானின் பிடியினின்று விடுவிக்க நீங்கள் எவ்வளவு ஜாக்கிரதையாய் இருக்கிறீர்கள்? # ஒரு தேவனுடைய பிள்ளையாய்ப் பிறரை இருளிலிருந்து விடுவித்து ஒளியினிடமாய்க் கொண்டுவர நீங்கள் கடமைப்பட்டிருக்கிறீர்கள்.# இவ்வுலகத்தில் தமது பிரதிநிதியாய் இருக்கும்படி இயேசு உங்களைப் பெலப்படுத்துகிறார்.# உங்கள் பொறுப்பை அலட்சியப்படுத்தாதீர்கள். எதிரிக்கும் அஞ்சாதீர்கள்.# கிறிஸ்து உங்களில் இருப்பதால் முற்றும் ஜெயெங்கொள்ளுகிறவர்களாய் நீங்கள் பெலப்படுத்தப்பட்டிருக்கிறீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது பிள்ளையாய் வெற்றியுள்ள வாழ்க்கை வாழ எனக்கிருக்கும் பெலத்தைப் பற்றிப் புரிந்துகொள்ளக் கிருபை செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

