← செய்திகளுக்குத் திரும்பு
அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள்
படத்தைப் பதிவிறக்கு

அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள்

“திங்கட்கிழமை, 7 அக்டோபர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள்; அதினாலே சிலர் அறியாமல் தேவதூதரையும் உபசரித்ததுண்டு. எபிரெயர் 13:2 ஆபிரகாமின் கூடாரத்தைக் கடந்து சென்ற அந்நியர்களைப் போல் காண்பித்த தேவ தூதர்களுக்கு விருந்தளித்தபோது ஆபிரகாம் இந்தக் குணநலனை வெளிப்படுத்தினார். அவர்கள் தங்கள் உண்மையான அடையாளங்களை வெளிப்படுத்தும் வரை ஆபிரகாம் அவர்களை தேவனுடைய தூதர்களாய் அறியவில்லை. அவர்கள் யார் என்று அவருக்குத் தெரியாவிட்டாலும் ஆபிரகாம் அவர்களிடம் கண்ணியமாகவும் நட்பாகவும் நடந்துகொண்டார். அவர்களுக்குச் சுவையான உணவளித்து பராமரித்தார். அதனால் கர்த்தரின் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டார். நீங்கள் எவ்வளவாய்ப் பிறரை உபசிரிக்கிறீர்கள்? இன்றைய உலகில், அந்நியரை ஆதரிப்பது மிகவும் ஆபத்தானது. என்றாலும், அனைவரையும் அன்பாக உபசரிப்பது அவசியம். மக்களையும் அவர்களது நோக்கங்களையும் பகுத்தறிவதற்கும், அவர்களைத் தகுந்த முறையில் நடத்துவதற்கும் தேவனுடைய கிருபையைக் கேளுங்கள். இயேசுவின் அன்பைச் செயலில் காட்டுவதன் மூலம், மற்றவர்களிடம் இரக்கத்துடனும், அன்பாகவும், அக்கறையுடனும் இருப்போமாக. அவர்களின் தேவைகளை முன்கூட்டியே புரிந்துகொண்டு உங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய முயற்சியுங்கள். மற்றவர்கள் உங்களுடன் நேரத்தைச் செலவிட ஏங்க வேண்டும் என்ற வகையில் வாழுங்கள். உங்கள் வார்த்தைகளிலும் செயல்களிலும் இயேசுவின் அன்பும், அரவணைப்பும் பாய்ந்து செல்லட்டும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமதன்பையும் அரவணைப்பையும் மற்றவர்களிடம் காட்டி, பிறரிடம் இரக்கமாயிருக்கவும், உபசரிக்கவும் எனக்கு உதவி செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

திங்கட்கிழமை, 7 அக்டோபர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள்; அதினாலே சிலர் அறியாமல் தேவதூதரையும் உபசரித்ததுண்டு. எபிரெயர் 13:2 ஆபிரகாமின் கூடாரத்தைக் கடந்து சென்ற அந்நியர்களைப் போல் காண்பித்த தேவ தூதர்களுக்கு விருந்தளித்தபோது ஆபிரகாம் இந்தக் குணநலனை வெளிப்படுத்தினார். அவர்கள் தங்கள் உண்மையான அடையாளங்களை வெளிப்படுத்தும் வரை ஆபிரகாம் அவர்களை தேவனுடைய தூதர்களாய் அறியவில்லை. அவர்கள் யார் என்று அவருக்குத் தெரியாவிட்டாலும் ஆபிரகாம் அவர்களிடம் கண்ணியமாகவும் நட்பாகவும் நடந்துகொண்டார். அவர்களுக்குச் சுவையான உணவளித்து பராமரித்தார். அதனால் கர்த்தரின் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டார். நீங்கள் எவ்வளவாய்ப் பிறரை உபசிரிக்கிறீர்கள்? இன்றைய உலகில், அந்நியரை ஆதரிப்பது மிகவும் ஆபத்தானது. என்றாலும், அனைவரையும் அன்பாக உபசரிப்பது அவசியம். மக்களையும் அவர்களது நோக்கங்களையும் பகுத்தறிவதற்கும், அவர்களைத் தகுந்த முறையில் நடத்துவதற்கும் தேவனுடைய கிருபையைக் கேளுங்கள். இயேசுவின் அன்பைச் செயலில் காட்டுவதன் மூலம், மற்றவர்களிடம் இரக்கத்துடனும், அன்பாகவும், அக்கறையுடனும் இருப்போமாக. அவர்களின் தேவைகளை முன்கூட்டியே புரிந்துகொண்டு உங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய முயற்சியுங்கள். மற்றவர்கள் உங்களுடன் நேரத்தைச் செலவிட ஏங்க வேண்டும் என்ற வகையில் வாழுங்கள். உங்கள் வார்த்தைகளிலும் செயல்களிலும் இயேசுவின் அன்பும், அரவணைப்பும் பாய்ந்து செல்லட்டும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமதன்பையும் அரவணைப்பையும் மற்றவர்களிடம் காட்டி, பிறரிடம் இரக்கமாயிருக்கவும், உபசரிக்கவும் எனக்கு உதவி செய்யும். ஆமென்.