புதன்கிழமை, 30 ஆகஸ்ட் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நாம் உண்மை இல்லாதவர்களாக இருந்தாலும், அவர் உண்மை உள்ளவராக இருக்கிறார்; அவர் தம்மைத்தாம் மறுதலிக்கமாட்டார். 2 தீமோத்தேயு 2:13 (TIRV) * நாம் சந்தேகங்களுடன் போராடும்போதும், அவரை நம்பி அவருடைய வழிகளைப் பின்பற்றுவதற்கு தடுமாறினாலும்கூட, நம் தேவன் உண்மையுள்ளவராக இருக்கிறார்.* அவர் நம்மீது உள்ள அன்பில் உண்மையுள்ளவராக இருக்கிறார், பொறுமையாக நமக்காக காத்திருந்து, தெளிவான நம்பிக்கையுடன் அவரிடம் திரும்புவதற்கு நமக்கு உதவிச் செய்கிறார்.* அதேபோல், போராட்டங்கள் மற்றும் சவால்கள் இருந்தபோதிலும் சத்தியத்தில் சிறந்து விளங்கியவர்களின் சில சிறந்த எடுத்துக்காட்டுகள் வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளன. அத்தகைய ஒரு உதாரணம், யோபின் கதை, யோபு, ஒரு நீதிமான், தன் பிள்ளைகளின் மரணம், உடல்நலத்தில் பாதிப்பு, நஷ்டம் உட்பட பெரும் துன்பங்களையும் இழப்பையும் சந்தித்தார். யோபு தனது சூழ்நிலை கேள்விக்குள்ளானபோதும், விரக்தியுடன் போராடியபோதும், தேவனை சபிக்க மறுத்துவிட்டார். தனது சோதனைகளின் போது, சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாமல் கர்த்தர் உண்மையுள்ளவர் மற்றும் நீதியுள்ளவர் என்றுப் புரிந்துக்கொண்டு அதில் உறுதியாய் இருந்தார். யோபுவின் உண்மைத்தன்மைக்காக கர்த்தர் வெகுமதி அளித்தார், அவருடைய குழந்தைகள் உட்பட அவர் இழந்த அனைத்தையும் திருப்பிக் கொடுத்தார். * நீங்களும் இதுபோன்ற சூழ்நிலைகளை சந்தித்துக் கொண்டிருக்கலாம்.* இருப்பினும், கர்த்தரை விட்டுவிடாதீர்கள்.* காலங்கள் மாறும்; இன்று நீங்கள் அனுபவிக்கும் கஷ்டங்கள் மாறி மகிழ்ச்சியான நாட்கள் வரும். * இயேசுவின் மீதுள்ள உங்கள் விசுவாசத்தைப் பற்றிக்கொண்டு, தொடர்ந்து அவருக்கு உண்மையாக இருங்கள்.* அவர் உங்களை ஒருபோதும் கைவிடமாட்டார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என்னுடைய எல்லா சவால்களின் மத்தியிலும் உமக்கு உண்மையாக இருக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.
நாம் உண்மை இல்லாதவர்களாக இருந்தாலும், அவர் உண்மை உள்ளவராக...
“2 தீமோத்தேயு 2:13 (TIRV) * நாம் சந்தேகங்களுடன் போராடும்போதும், அவரை நம்பி அவருடைய வழிகளைப் பின்பற்றுவதற்கு தடுமாறினாலும்கூட, நம் தேவன் உண்மையுள்ளவராக இருக்கிறார்.* அவர் நம்மீது உள்ள அன்பில் உண்மையுள்ளவராக இருக்கிறார், பொறுமையாக நமக்காக காத்திருந்து, தெளிவான நம்பிக்கையுடன் அவரிடம் திரும்புவதற்கு நமக்கு உதவிச் செய்கிறார்.* அதேபோல், போராட்டங்கள் மற்றும் சவால்கள் இருந்தபோதிலும் சத்தியத்தில் சிறந்து விளங்கியவர்களின் சில சிறந்த எடுத்துக்காட்டுகள் வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளன. அத்தகைய ஒரு உதாரணம், யோபின் கதை, யோபு, ஒரு நீதிமான், தன் பிள்ளைகளின் மரணம், உடல்நலத்தில் பாதிப்பு, நஷ்டம் உட்பட பெரும் துன்பங்களையும் இழப்பையும் சந்தித்தார். யோபு தனது சூழ்நிலை கேள்விக்குள்ளானபோதும், விரக்தியுடன் போராடியபோதும், தேவனை சபிக்க மறுத்துவிட்டார். தனது சோதனைகளின் போது, சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாமல் கர்த்தர் உண்மையுள்ளவர் மற்றும் நீதியுள்ளவர் என்றுப் புரிந்துக்கொண்டு அதில் உறுதியாய் இருந்தார். யோபுவின் உண்மைத்தன்மைக்காக கர்த்தர் வெகுமதி அளித்தார், அவருடைய குழந்தைகள் உட்பட அவர் இழந்த அனைத்தையும் திருப்பிக் கொடுத்தார். * நீங்களும் இதுபோன்ற சூழ்நிலைகளை சந்தித்துக் கொண்டிருக்கலாம்.* இருப்பினும், கர்த்தரை விட்டுவிடாதீர்கள்.* காலங்கள் மாறும்; இன்று நீங்கள் அனுபவிக்கும் கஷ்டங்கள் மாறி மகிழ்ச்சியான நாட்கள் வரும். * இயேசுவின் மீதுள்ள உங்கள் விசுவாசத்தைப் பற்றிக்கொண்டு, தொடர்ந்து அவருக்கு உண்மையாக இருங்கள்.* அவர் உங்களை ஒருபோதும் கைவிடமாட்டார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என்னுடைய எல்லா சவால்களின் மத்தியிலும் உமக்கு உண்மையாக இருக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

