← செய்திகளுக்குத் திரும்பு
எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்.
படத்தைப் பதிவிறக்கு

எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல்,...

“கொலோசெயர் 3:24 * இந்த வசனம் எதைச் செய்தாலும் முழு மனதுடன் செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.* நமது நோக்கங்களைப் பற்றி நாம் உற்சாகமாக இருந்தால் ஒழிய, நம் வேலையில் முழு இருதயத்தையும் செயல்படுத்துவது சாத்தியமில்லை.* நாம் நமது வேலையில் உற்சாகமாக இருக்கும்போது, அது ஒரு மகிழ்ச்சியான சேவையாக மாறி கர்த்தரை கனப்படுத்துகிறது. எருசலேமின் தேவாலயத்தில், தன்னிடம் இருந்த அனைத்தையும் காணிக்கையாகக் கொடுத்த விதவையின் கதை, கர்த்தருக்குச் சேவை செய்வதில் ஆர்வமாக இருப்பதற்கு ஒரு அருமையான உதாரணம். அவள் இரண்டு காசை காணிக்கையாகப் போட்டாள். அந்த இரண்டு காசுகள் அவளுடைய சூழ்நிலையில் மிகவும் மதிப்புமிக்கவை. மற்றவர்களின் பெரிய காணிக்கைகளுடன் ஒப்பிடும்போது அவளுடைய பங்களிப்பு மிகக் குறைவு என்றாலும், அது உண்மையுடன் கொடுக்கப்பட்டது. இது கர்த்தருக்கு அவளுடைய அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக காணிக்கை அளித்த பலரைப் போலல்லாமல், விதவையின் மகிழ்ச்சியான தியாகம் கர்த்தரிடத்தில் அவளுக்கு இருந்த உண்மையான அன்பையும் விசுவாசத்தையும் பிரதிபலித்தது. * மனுஷன் முகத்தைப் பார்க்கிறான், ஆனால் கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்று பரிசுத்த வேதாகமம் கூறுகிறது.* உங்கள் ஈடுபாட்டின் உண்மைத் தன்மை, பிறருக்கு நீங்கள் உதவிச் செய்வது, உதவியின் பின்னணியில் உள்ள நோக்கம் ஆகியவற்றை ஆய்வு செய்யுங்கள்.* கர்த்தர் எதிர்பார்க்கிறபடி உங்கள் நோக்கம் இல்லையென்றால் உங்கள் முழுச் செயலும் மாய்மாலமானதாக இருக்கும். * ஒரு வேலையின் அல்லது பரிசின் அளவைவிட அதை செய்வதற்குரிய இருதயத்தின் நோக்கம் தான் முக்கியம் என்பதை விதவையின் காணிக்கை நமக்குக் காட்டுகிறது.* செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் காரணமாகவோ அல்லது உங்கள் பெயர் மற்றும் புகழுக்காகவோ எதையும் செய்யாதீர்கள். மாறாக, உங்கள் நோக்கங்களை உண்மையானதாகவும் கர்த்தருக்குப் பிரியமானதாகவும் ஆக்குங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் வேலை அல்லது உதவியின் பின்னணியில் உள்ள என் நோக்கங்களில் உண்மையாக இருக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

சனிக்கிழமை, 26 ஆகஸ்ட் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள். கொலோசெயர் 3:24 * இந்த வசனம் எதைச் செய்தாலும் முழு மனதுடன் செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.* நமது நோக்கங்களைப் பற்றி நாம் உற்சாகமாக இருந்தால் ஒழிய, நம் வேலையில் முழு இருதயத்தையும் செயல்படுத்துவது சாத்தியமில்லை.* நாம் நமது வேலையில் உற்சாகமாக இருக்கும்போது, அது ஒரு மகிழ்ச்சியான சேவையாக மாறி கர்த்தரை கனப்படுத்துகிறது. எருசலேமின் தேவாலயத்தில், தன்னிடம் இருந்த அனைத்தையும் காணிக்கையாகக் கொடுத்த விதவையின் கதை, கர்த்தருக்குச் சேவை செய்வதில் ஆர்வமாக இருப்பதற்கு ஒரு அருமையான உதாரணம். அவள் இரண்டு காசை காணிக்கையாகப் போட்டாள். அந்த இரண்டு காசுகள் அவளுடைய சூழ்நிலையில் மிகவும் மதிப்புமிக்கவை. மற்றவர்களின் பெரிய காணிக்கைகளுடன் ஒப்பிடும்போது அவளுடைய பங்களிப்பு மிகக் குறைவு என்றாலும், அது உண்மையுடன் கொடுக்கப்பட்டது. இது கர்த்தருக்கு அவளுடைய அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக காணிக்கை அளித்த பலரைப் போலல்லாமல், விதவையின் மகிழ்ச்சியான தியாகம் கர்த்தரிடத்தில் அவளுக்கு இருந்த உண்மையான அன்பையும் விசுவாசத்தையும் பிரதிபலித்தது. * மனுஷன் முகத்தைப் பார்க்கிறான், ஆனால் கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்று பரிசுத்த வேதாகமம் கூறுகிறது.* உங்கள் ஈடுபாட்டின் உண்மைத் தன்மை, பிறருக்கு நீங்கள் உதவிச் செய்வது, உதவியின் பின்னணியில் உள்ள நோக்கம் ஆகியவற்றை ஆய்வு செய்யுங்கள்.* கர்த்தர் எதிர்பார்க்கிறபடி உங்கள் நோக்கம் இல்லையென்றால் உங்கள் முழுச் செயலும் மாய்மாலமானதாக இருக்கும். * ஒரு வேலையின் அல்லது பரிசின் அளவைவிட அதை செய்வதற்குரிய இருதயத்தின் நோக்கம் தான் முக்கியம் என்பதை விதவையின் காணிக்கை நமக்குக் காட்டுகிறது.* செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் காரணமாகவோ அல்லது உங்கள் பெயர் மற்றும் புகழுக்காகவோ எதையும் செய்யாதீர்கள். மாறாக, உங்கள் நோக்கங்களை உண்மையானதாகவும் கர்த்தருக்குப் பிரியமானதாகவும் ஆக்குங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் வேலை அல்லது உதவியின் பின்னணியில் உள்ள என் நோக்கங்களில் உண்மையாக இருக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.