← Back to Devotionals

உங்கள் சொந்த நலன்களை மட்டும் பார்க்காமல், மற்றவர்களின்...

“வியாழன், 3 ஆகஸ்ட் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவகளையும் நோக்குவானாக. பிலிப்பியர் 2:4. வேதாகமத்தில், லூக்கா, இயேசுவைப் பற்றிய அழகான உவமையை விவரிக்கிறார். இது ஒரு அந்நியன் அடிக்கப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டு குற்றுயிராகக் கிடந்தபோது ஒரு நல்ல சமாரியன் உதவச் சென்ற கதை. அவன் அந்த மனிதனின் நாட்டையோ, மதத்தையோ பொருட்படுத்தவில்லை. தேவையில் இருக்கிற ஒருவனை அவன் அருகில் சென்றுக் கவனித்தான். அந்த மனிதனைக் குணப்படுத்த, உடனடியாக முதலுதவி செய்தான், அவனை சத்திரத்துக்கு அழைத்துச் சென்றான். மேலும் அவனைக் குணப்படுத்த கூடுதல் செலவுகளை செய்ய முன்வந்தான். சமாரியன் தனது நேரத்தையோ, வசதியையோ அல்லது தனிப்பட்ட பாதுகாப்பைக் குறித்தோக் கருத்தில் கொள்ளாமல், காயமடைந்த மனிதனின் நலன்கள் மற்றும் தேவைக்கு முன்னுரிமை அளித்தான், கிறிஸ்துவின் அன்பையும் இரக்கத்தையும் அவனிடத்தில் காட்டினான். * இந்த உவமையின் மூலம், மற்றவர்களிடம் உங்கள் அணுகுமுறை மற்றும் செயல்களை ஆராயுங்கள்.* உங்களைச் சுற்றியிருப்பவர்களின் தேவைகளை கவனிக்காமல் விரைவாக விலகிவிட நினைக்கிறீர்களா அல்லது உங்களுக்கு கடினமாக இருந்தாலும் நிறுத்தி உதவத் தயாராக இருக்கிறீர்களா?* நீங்கள் உங்கள் சொந்த நலன்களில் மூழ்கி இருக்கிறீர்களா அல்லது மற்றவர்களின் நலனில் உண்மையான அக்கறை கொண்டிருக்கிறீர்களா? * கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களாகிய நாம், அவருடைய தன்னலமற்ற தன்மையை நம் அன்றாட வாழ்வில் வெளிப்படுத்த அழைக்கப்பட்டுள்ளோம்.* நம் வாழ்க்கைக்கு நேரம் செலவிடுவது தேவைப்பட்டாலும், மற்றவர்களுக்கு சேவை செய்யவும், அவர்களை ஆசீர்வதிக்கவும் வாய்ப்புகளைத் தேடவேண்டும் என்பதை இது குறிக்கிறது.* நாம் மற்றவர்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கும்போது, நாம் கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்தி, உலகில் அவருடைய கிருபை மற்றும் இரக்கத்தின் பாத்திரங்களாக மாறுகிறோம். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் சொந்த நலன்களை மட்டுமல்ல, மற்றவர்களின் நலன்களையும் பார்க்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”

Word of Hope

Today's Reflection

வியாழன், 3 ஆகஸ்ட் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவகளையும் நோக்குவானாக. பிலிப்பியர் 2:4. வேதாகமத்தில், லூக்கா, இயேசுவைப் பற்றிய அழகான உவமையை விவரிக்கிறார். இது ஒரு அந்நியன் அடிக்கப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டு குற்றுயிராகக் கிடந்தபோது ஒரு நல்ல சமாரியன் உதவச் சென்ற கதை. அவன் அந்த மனிதனின் நாட்டையோ, மதத்தையோ பொருட்படுத்தவில்லை. தேவையில் இருக்கிற ஒருவனை அவன் அருகில் சென்றுக் கவனித்தான். அந்த மனிதனைக் குணப்படுத்த, உடனடியாக முதலுதவி செய்தான், அவனை சத்திரத்துக்கு அழைத்துச் சென்றான். மேலும் அவனைக் குணப்படுத்த கூடுதல் செலவுகளை செய்ய முன்வந்தான். சமாரியன் தனது நேரத்தையோ, வசதியையோ அல்லது தனிப்பட்ட பாதுகாப்பைக் குறித்தோக் கருத்தில் கொள்ளாமல், காயமடைந்த மனிதனின் நலன்கள் மற்றும் தேவைக்கு முன்னுரிமை அளித்தான், கிறிஸ்துவின் அன்பையும் இரக்கத்தையும் அவனிடத்தில் காட்டினான். * இந்த உவமையின் மூலம், மற்றவர்களிடம் உங்கள் அணுகுமுறை மற்றும் செயல்களை ஆராயுங்கள்.* உங்களைச் சுற்றியிருப்பவர்களின் தேவைகளை கவனிக்காமல் விரைவாக விலகிவிட நினைக்கிறீர்களா அல்லது உங்களுக்கு கடினமாக இருந்தாலும் நிறுத்தி உதவத் தயாராக இருக்கிறீர்களா?* நீங்கள் உங்கள் சொந்த நலன்களில் மூழ்கி இருக்கிறீர்களா அல்லது மற்றவர்களின் நலனில் உண்மையான அக்கறை கொண்டிருக்கிறீர்களா? * கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களாகிய நாம், அவருடைய தன்னலமற்ற தன்மையை நம் அன்றாட வாழ்வில் வெளிப்படுத்த அழைக்கப்பட்டுள்ளோம்.* நம் வாழ்க்கைக்கு நேரம் செலவிடுவது தேவைப்பட்டாலும், மற்றவர்களுக்கு சேவை செய்யவும், அவர்களை ஆசீர்வதிக்கவும் வாய்ப்புகளைத் தேடவேண்டும் என்பதை இது குறிக்கிறது.* நாம் மற்றவர்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கும்போது, நாம் கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்தி, உலகில் அவருடைய கிருபை மற்றும் இரக்கத்தின் பாத்திரங்களாக மாறுகிறோம். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் சொந்த நலன்களை மட்டுமல்ல, மற்றவர்களின் நலன்களையும் பார்க்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.