← Back to Devotionals

இயேசு கிறிஸ்துவுக்குச் சொந்தமானவர்களுக்கு எந்தவொரு ஆக்கினைத்...

“செவ்வாய்க்கிழமை, 30 ஏப்ரல் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை. ரோமர் 8:1 "நீங்கள் யாருக்குச் சொந்தம்? இயேசுவுக்கா அல்லது சாத்தானுக்கா? இயேசுவை உங்கள் இருதயத்தில் ஏற்றுக்கொண்டிருந்தால், நீங்கள் தேவனுடைய பிள்ளை என்று அழைக்கப்படுவதற்கு உரிமை உண்டு. தேவ பிள்ளையாக, நீங்கள் பாவத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டீர்கள். ஜீவ ஆவியானவரின் வல்லமை, மரணத்திற்கு வழிவகுக்கும் பாவத்தின் வல்லமையிலிருந்து உங்களை விடுவித்துள்ளது. நீங்கள் சாத்தானிலிருந்தும், சாத்தானுக்கும், அவனைப் பின்பற்றுவோர்க்கும் வைக்கப்பட்டிருக்கும் ஆக்கினைத் தீர்ப்பினின்றும் விடுபட்டுள்ளீர்கள். மகிழ்ச்சியாய் இருங்கள், ஏனென்றால் நீங்கள் இயேசு கிறிஸ்துவுக்குச் சொந்தமானவர்கள்! தேவன் கொடுத்த சமாதானத்தைக் கெடுக்கக் குற்ற மனசாட்சியை அனுமதிக்காதீர்கள். பிசாசின் பொய்களைக் கேட்டு, தேவ பிரசன்னத்திலிருந்து விலகிச் செல்லாதீர்கள். கர்த்தருக்குள் தொடர்ந்து பலமாய் வளருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என்னை உமது பிள்ளையாக ஏற்றுக்கொண்டு, தண்டனையினின்று என்னை விடுவித்ததற்கு நன்றி. பரிசுத்த வாழ்க்கையைத் தொடர எனக்கு உதவி செய்யும். ஆமென்”

Word of Hope

Today's Reflection

செவ்வாய்க்கிழமை, 30 ஏப்ரல் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை. ரோமர் 8:1 “நீங்கள் யாருக்குச் சொந்தம்? இயேசுவுக்கா அல்லது சாத்தானுக்கா? இயேசுவை உங்கள் இருதயத்தில் ஏற்றுக்கொண்டிருந்தால், நீங்கள் தேவனுடைய பிள்ளை என்று அழைக்கப்படுவதற்கு உரிமை உண்டு. தேவ பிள்ளையாக, நீங்கள் பாவத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டீர்கள். ஜீவ ஆவியானவரின் வல்லமை, மரணத்திற்கு வழிவகுக்கும் பாவத்தின் வல்லமையிலிருந்து உங்களை விடுவித்துள்ளது. நீங்கள் சாத்தானிலிருந்தும், சாத்தானுக்கும், அவனைப் பின்பற்றுவோர்க்கும் வைக்கப்பட்டிருக்கும் ஆக்கினைத் தீர்ப்பினின்றும் விடுபட்டுள்ளீர்கள். மகிழ்ச்சியாய் இருங்கள், ஏனென்றால் நீங்கள் இயேசு கிறிஸ்துவுக்குச் சொந்தமானவர்கள்! தேவன் கொடுத்த சமாதானத்தைக் கெடுக்கக் குற்ற மனசாட்சியை அனுமதிக்காதீர்கள். பிசாசின் பொய்களைக் கேட்டு, தேவ பிரசன்னத்திலிருந்து விலகிச் செல்லாதீர்கள். கர்த்தருக்குள் தொடர்ந்து பலமாய் வளருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என்னை உமது பிள்ளையாக ஏற்றுக்கொண்டு, தண்டனையினின்று என்னை விடுவித்ததற்கு நன்றி. பரிசுத்த வாழ்க்கையைத் தொடர எனக்கு உதவி செய்யும். ஆமென்.