← செய்திகளுக்குத் திரும்பு
யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்து கொள்ளுங்கள்.
படத்தைப் பதிவிறக்கு

யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்து கொள்ளுங்கள்.

“யோசுவா 24:15 * நம் வாழ்க்கையின் பல திருப்புமுனைகளை, நோக்கத்தை, வெற்றியை தீர்மானிக்கும் பல முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கான தருணங்களை அடிக்கடி நம் வாழ்க்கையில் சந்திக்கிறோம்.* மேலே உள்ள வசனம், இஸ்ரவேல் மக்களுக்கு யோசுவாவிடமிருந்து கொடுக்கப்பட்ட ஒரு வல்லமைமிக்கச் செய்தியாகும், மேலும் கர்த்தருக்கு நாம் நம்மை அர்ப்பணிப்பதில் தீர்க்கமாக இருப்பதன் முக்கியத்துவத்தை நமக்கு நினைவூட்டுகிறது. அந்நிய நாட்டினரின் ஆட்சி மற்றும் துன்புறுத்தலுக்கு மத்தியில் தானியேலின் வாழ்க்கையை நாம் பார்க்கும்போது, அவர் கர்த்தர் மீதான பக்தியில் உறுதியாக இருந்தார். ராஜாவைத் தவிர வேறு யாரையும் நோக்கி விண்ணப்பம் செய்யக்கூடாது என்று ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டபோது, தானியல் ஒரு நெருக்கடியான சூழ்நிலையைச் சந்தித்தார். கடுமையான தண்டனைக்கு வாய்ப்புகள் இருந்தப் போதிலும், தானியல் தான் கர்த்தர் மேல் வைத்திருக்கும் விசுவாசத்தை சமரசம் செய்ய மறுத்து, இஸ்ரவேலின் கர்த்தரை நோக்கி வெளிப்படையாக ஜெபித்தார். அவர் தனது உயிரின் பாதுகாப்பை விடக் கர்த்தருக்குக் கீழ்ப்படிவதைத் தெரிந்தெடுத்தார். சர்வவல்லவருடனான தனது உறவை மதித்து முக்கியப்படுத்தி ஒரு தீர்க்கமான முடிவை வெளிப்படுத்தினார். * இதே போன்று, கர்த்தரும், அவருடைய வழிகளைப் பின்பற்றுவதற்கான நமது உண்மையான அர்ப்பணிப்பைப் பற்றி நாம் தீர்மானிக்க வேண்டும் என்று நம்மை எதிர்பார்க்கிறார்.* நன்ம, தீமைகளை அறிவதற்கான அறிவையும், புத்தியையும் நமக்குத் தந்து, அவரைப் பின்பற்றுவதா அல்லது உலகத்தைப் பின்பற்றுவதா என்பதை நாமே தீர்மானிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.* எதிர்ப்பு அல்லது நிச்சயமற்ற நிலையிலும் நாம் கர்த்தருக்கு உறுதியாக நிற்க தயாராக இருக்க வேண்டும்.* கர்த்தரின் பிள்ளைகளாக, நீங்கள் எல்லாவற்றிற்கும் மேலாக அவரைத் தெரிந்தெடுத்து உங்கள் சொந்த ஆசைகளை விட அவருடைய விருப்பத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை செய்வீர்களா? ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, முழு அர்ப்பணிப்புடன் உங்களைப் பின்பற்றுவதில் தீர்க்கமாக இருக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

புதன்கிழமை, 16 ஆகஸ்ட் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்து கொள்ளுங்கள். யோசுவா 24:15 * நம் வாழ்க்கையின் பல திருப்புமுனைகளை, நோக்கத்தை, வெற்றியை தீர்மானிக்கும் பல முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கான தருணங்களை அடிக்கடி நம் வாழ்க்கையில் சந்திக்கிறோம்.* மேலே உள்ள வசனம், இஸ்ரவேல் மக்களுக்கு யோசுவாவிடமிருந்து கொடுக்கப்பட்ட ஒரு வல்லமைமிக்கச் செய்தியாகும், மேலும் கர்த்தருக்கு நாம் நம்மை அர்ப்பணிப்பதில் தீர்க்கமாக இருப்பதன் முக்கியத்துவத்தை நமக்கு நினைவூட்டுகிறது. அந்நிய நாட்டினரின் ஆட்சி மற்றும் துன்புறுத்தலுக்கு மத்தியில் தானியேலின் வாழ்க்கையை நாம் பார்க்கும்போது, அவர் கர்த்தர் மீதான பக்தியில் உறுதியாக இருந்தார். ராஜாவைத் தவிர வேறு யாரையும் நோக்கி விண்ணப்பம் செய்யக்கூடாது என்று ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டபோது, தானியல் ஒரு நெருக்கடியான சூழ்நிலையைச் சந்தித்தார். கடுமையான தண்டனைக்கு வாய்ப்புகள் இருந்தப் போதிலும், தானியல் தான் கர்த்தர் மேல் வைத்திருக்கும் விசுவாசத்தை சமரசம் செய்ய மறுத்து, இஸ்ரவேலின் கர்த்தரை நோக்கி வெளிப்படையாக ஜெபித்தார். அவர் தனது உயிரின் பாதுகாப்பை விடக் கர்த்தருக்குக் கீழ்ப்படிவதைத் தெரிந்தெடுத்தார். சர்வவல்லவருடனான தனது உறவை மதித்து முக்கியப்படுத்தி ஒரு தீர்க்கமான முடிவை வெளிப்படுத்தினார். * இதே போன்று, கர்த்தரும், அவருடைய வழிகளைப் பின்பற்றுவதற்கான நமது உண்மையான அர்ப்பணிப்பைப் பற்றி நாம் தீர்மானிக்க வேண்டும் என்று நம்மை எதிர்பார்க்கிறார்.* நன்ம, தீமைகளை அறிவதற்கான அறிவையும், புத்தியையும் நமக்குத் தந்து, அவரைப் பின்பற்றுவதா அல்லது உலகத்தைப் பின்பற்றுவதா என்பதை நாமே தீர்மானிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.* எதிர்ப்பு அல்லது நிச்சயமற்ற நிலையிலும் நாம் கர்த்தருக்கு உறுதியாக நிற்க தயாராக இருக்க வேண்டும்.* கர்த்தரின் பிள்ளைகளாக, நீங்கள் எல்லாவற்றிற்கும் மேலாக அவரைத் தெரிந்தெடுத்து உங்கள் சொந்த ஆசைகளை விட அவருடைய விருப்பத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை செய்வீர்களா? ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, முழு அர்ப்பணிப்புடன் உங்களைப் பின்பற்றுவதில் தீர்க்கமாக இருக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.