← செய்திகளுக்குத் திரும்பு
மிகவும் கவனமாக, ஞானமாய் வாழ்ந்து, ஒவ்வொரு வாய்ப்பையும் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்.
படத்தைப் பதிவிறக்கு

மிகவும் கவனமாக, ஞானமாய் வாழ்ந்து, ஒவ்வொரு வாய்ப்பையும்...

“வியாழன், 14 செப்டம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:ஆனபடியினாலே, நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்துகொள்ளப்பார்த்து, நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள். எபேசியர் 5:15-16 எருசலேமின் அலங்கம் இடிந்து விழுந்து, மக்கள் பெரும் துன்பத்தை சந்தித்தக் காலத்தில், நெகேமியா என்ற மனிதர் பெர்சியா ராஜாவுக்கு பானபாத்திரக்காரராக இருந்தார். அரண்மனையில் அவரதது வாழ்க்கை பாதுகாப்பாக இருந்தாலும், எருசலேமின் பாழடைந்த நிலை அவரை வேதனைப் படுத்தியது. நெகேமியாவின் வேதனையை உணர்ந்த ராஜா, எருசலேமின் அலங்கத்தை மீண்டும் கட்டுவதற்கு அவரை அனுமதித்தார். கட்டுவதற்கு தேவையான அனைத்துப் பொருட்களும் அரசாங்கத்தால் செலவுச் செய்யப்படும் என்று மன்னர் உறுதியளித்தார். நெகேமியா உடனடியாகச் செயல்பட்டு, மக்களை குழுக்களாக அமைத்து, தாமதமின்றி வேலையைத் தொடங்கினார். எதிர்ப்பு மற்றும் அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், அலங்கத்தைக் கட்ட நெகேமியா உறுதியாய் இருந்தார். அவர் தொழிலாளர்கள் தங்கள் பணியில் கவனம் செலுத்த அறிவுறுத்தினார். அவர்கள் அலங்கத்தில் வேலை செய்யும் போது பாதுகாப்புக்காக பட்டயங்களையும், ஈட்டிகளையும் வில்லுகளையும் பிடித்திருக்கிற ஜனங்களை நெகேமியா நிறுத்தினார். நெகேமியாவின் நல்ல தலைமைத்துவத்தினாலும் அசைக்க முடியாத நம்பிக்கையினாலும் நகரத்தின் சுவர்கள் 52 நாட்களில் மீண்டும் கட்டப்பட்டன. பிரதிபலிப்புக்கான கேள்விகள்: 1. மற்றவர்கள் மற்றும் கர்த்தரின் வேலை தொடர்பான விஷயங்களில் நீங்கள் எவ்வளவு அர்ப்பணிப்புடன் இருக்கிறீர்கள்? 2. கர்த்தர் கொடுத்த வாய்ப்புகளை நீங்கள் மிகவும் கவனமாகவும் விடாமுயற்சியுடனும் செய்கிறீர்களா அல்லது வேலையைத் தள்ளிப் போடுகிறீர்களா? * கர்த்தர் உங்கள் விடாமுயற்சியையும் நேர்மையையும் போற்றி புகழ்கிறார்.* கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த பொறுப்புகளிலும், குடும்பத்திலும் தலைமை தாங்கும் நபராக இருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, குறிக்கப்பட்ட இலக்கை அடைய ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்துவதில் ஞானமாகவும் நேர்மையாகவும் இருக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

வியாழன், 14 செப்டம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:ஆனபடியினாலே, நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்துகொள்ளப்பார்த்து, நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள். எபேசியர் 5:15-16 எருசலேமின் அலங்கம் இடிந்து விழுந்து, மக்கள் பெரும் துன்பத்தை சந்தித்தக் காலத்தில், நெகேமியா என்ற மனிதர் பெர்சியா ராஜாவுக்கு பானபாத்திரக்காரராக இருந்தார். அரண்மனையில் அவரதது வாழ்க்கை பாதுகாப்பாக இருந்தாலும், எருசலேமின் பாழடைந்த நிலை அவரை வேதனைப் படுத்தியது. நெகேமியாவின் வேதனையை உணர்ந்த ராஜா, எருசலேமின் அலங்கத்தை மீண்டும் கட்டுவதற்கு அவரை அனுமதித்தார். கட்டுவதற்கு தேவையான அனைத்துப் பொருட்களும் அரசாங்கத்தால் செலவுச் செய்யப்படும் என்று மன்னர் உறுதியளித்தார். நெகேமியா உடனடியாகச் செயல்பட்டு, மக்களை குழுக்களாக அமைத்து, தாமதமின்றி வேலையைத் தொடங்கினார். எதிர்ப்பு மற்றும் அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், அலங்கத்தைக் கட்ட நெகேமியா உறுதியாய் இருந்தார். அவர் தொழிலாளர்கள் தங்கள் பணியில் கவனம் செலுத்த அறிவுறுத்தினார். அவர்கள் அலங்கத்தில் வேலை செய்யும் போது பாதுகாப்புக்காக பட்டயங்களையும், ஈட்டிகளையும் வில்லுகளையும் பிடித்திருக்கிற ஜனங்களை நெகேமியா நிறுத்தினார். நெகேமியாவின் நல்ல தலைமைத்துவத்தினாலும் அசைக்க முடியாத நம்பிக்கையினாலும் நகரத்தின் சுவர்கள் 52 நாட்களில் மீண்டும் கட்டப்பட்டன. பிரதிபலிப்புக்கான கேள்விகள்: 1. மற்றவர்கள் மற்றும் கர்த்தரின் வேலை தொடர்பான விஷயங்களில் நீங்கள் எவ்வளவு அர்ப்பணிப்புடன் இருக்கிறீர்கள்? 2. கர்த்தர் கொடுத்த வாய்ப்புகளை நீங்கள் மிகவும் கவனமாகவும் விடாமுயற்சியுடனும் செய்கிறீர்களா அல்லது வேலையைத் தள்ளிப் போடுகிறீர்களா? * கர்த்தர் உங்கள் விடாமுயற்சியையும் நேர்மையையும் போற்றி புகழ்கிறார்.* கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த பொறுப்புகளிலும், குடும்பத்திலும் தலைமை தாங்கும் நபராக இருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, குறிக்கப்பட்ட இலக்கை அடைய ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்துவதில் ஞானமாகவும் நேர்மையாகவும் இருக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.