ஞாயிற்றுக்கிழமை, 20 ஆகஸ்ட் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல, கர்த்தரும் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனைச் சிட்சிக்கிறார். நீதிமொழிகள் 3:12 * நீதிமொழிகள் 3:12 கர்த்தரின் அன்புக்கும் ஒழுக்கத்துக்கும் உள்ள தொடர்பை விளக்குகிறது.* அக்கறையுள்ள ஒரு தகப்பன் தன் அன்பான குழந்தையைத் திருத்துவது போல, நம் பரலோகத் தகப்பனும் நம்மீது உள்ள மிகுந்த அன்பின் காரணமாக நம்மைச் சிட்சிக்கிறார்.* ஒழுக்கத்தின் மூலம், கர்த்தர் நம்மை சீரமைத்து, நம் குணத்தை செம்மைப்படுத்துகிறார், மேலும் கீழ்ப்படிதலோடுக் கூடிய ஆன்மீக வளர்ச்சியின் பாதையில் நம்மை வழிநடத்துகிறார். யோனாவின் கதை கர்த்தரின் அன்பான ஒழுக்கம் மற்றும் கீழ்ப்படிதலுக்கான அழைப்பின் தெளிவான எடுத்துக்காட்டு. நினிவேக்குச் சென்று கர்த்தருடைய செய்தியை அறிவிக்கும்படி யோனாவுக்கு தேவனால் கட்டளைக் கிடைத்தது. என்றாலும், அவர் எதிர் திசையில் தப்பி ஓடினார். அவருடைய கீழ்ப்படியாமையின் காரணமாக, அவர் கடலில் தூக்கி எறியப்பட்டார் மற்றும் ஒரு பெரிய மீன் அவரை விழுங்கியது. மீனின் வயிற்றில் இருந்த காலத்தில், அது யோனாவுக்கு தன்னுடைய சிந்தனையை ஒழுங்குப்படுத்தி மனந்திரும்புதலுக்குரிய நேரமாய் இருந்தது. கர்த்தரின் ஒழுக்கம் அவரைத் தாழ்மைப்படுத்தி அர்பணிக்க வைத்தது. யோனா இறுதியில் கர்த்தரின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நினிவேக்குச் சென்று பிரசங்கித்தார், நகரத்தின் மனந்திரும்புதலையும் கர்த்தருடைய இரக்கத்தையும் கண்டார். * யோனாவின் பயணம், நாம் கர்த்தரைப் பின்பற்றுவதற்கும், நம்மைத் திருத்திக்கொண்டு மீட்பைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பையும் வெளிப்படுத்துகிறாய் இருக்கிறது.* ஒழுக்கம் மூலம், கர்த்தர் நம் போக்கை சரிசெய்வது மட்டுமல்லாமல், அவருடைய நோக்கங்களுக்கு நேராகவும் நம்மை வழிநடத்துகிறார்.* உங்கள் வாழ்க்கையில் இதுபோன்ற சூழ்நிலைகளை நீங்கள் சந்தித்தால், உங்கள் பாதையைப் பற்றி சிந்தித்து, உங்கள் வாழ்க்கை சரியான பாதையில் உள்ளதா என்பதைச் சரிபார்க்க நேரம் ஒதுக்குங்கள்.* இல்லை என்றால், மனந்திரும்பி, சரியான ஒழுங்கு நடவடிக்கையை எடுங்கள்.* தைரியமாக இயேசுவிடம் வாருங்கள். அவர் அன்பானவர், உண்மையுள்ளவர், உங்களை மீட்டெடுக்க ஆர்வமாயிருக்கிறார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது சிட்சையை ஏற்றுக்கொள்ளவும், உமது சித்தத்தின்படி என் வழிகளைச் சரிசெய்யவும் எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.
தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல,...
“நீதிமொழிகள் 3:12 * நீதிமொழிகள் 3:12 கர்த்தரின் அன்புக்கும் ஒழுக்கத்துக்கும் உள்ள தொடர்பை விளக்குகிறது.* அக்கறையுள்ள ஒரு தகப்பன் தன் அன்பான குழந்தையைத் திருத்துவது போல, நம் பரலோகத் தகப்பனும் நம்மீது உள்ள மிகுந்த அன்பின் காரணமாக நம்மைச் சிட்சிக்கிறார்.* ஒழுக்கத்தின் மூலம், கர்த்தர் நம்மை சீரமைத்து, நம் குணத்தை செம்மைப்படுத்துகிறார், மேலும் கீழ்ப்படிதலோடுக் கூடிய ஆன்மீக வளர்ச்சியின் பாதையில் நம்மை வழிநடத்துகிறார். யோனாவின் கதை கர்த்தரின் அன்பான ஒழுக்கம் மற்றும் கீழ்ப்படிதலுக்கான அழைப்பின் தெளிவான எடுத்துக்காட்டு. நினிவேக்குச் சென்று கர்த்தருடைய செய்தியை அறிவிக்கும்படி யோனாவுக்கு தேவனால் கட்டளைக் கிடைத்தது. என்றாலும், அவர் எதிர் திசையில் தப்பி ஓடினார். அவருடைய கீழ்ப்படியாமையின் காரணமாக, அவர் கடலில் தூக்கி எறியப்பட்டார் மற்றும் ஒரு பெரிய மீன் அவரை விழுங்கியது. மீனின் வயிற்றில் இருந்த காலத்தில், அது யோனாவுக்கு தன்னுடைய சிந்தனையை ஒழுங்குப்படுத்தி மனந்திரும்புதலுக்குரிய நேரமாய் இருந்தது. கர்த்தரின் ஒழுக்கம் அவரைத் தாழ்மைப்படுத்தி அர்பணிக்க வைத்தது. யோனா இறுதியில் கர்த்தரின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நினிவேக்குச் சென்று பிரசங்கித்தார், நகரத்தின் மனந்திரும்புதலையும் கர்த்தருடைய இரக்கத்தையும் கண்டார். * யோனாவின் பயணம், நாம் கர்த்தரைப் பின்பற்றுவதற்கும், நம்மைத் திருத்திக்கொண்டு மீட்பைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பையும் வெளிப்படுத்துகிறாய் இருக்கிறது.* ஒழுக்கம் மூலம், கர்த்தர் நம் போக்கை சரிசெய்வது மட்டுமல்லாமல், அவருடைய நோக்கங்களுக்கு நேராகவும் நம்மை வழிநடத்துகிறார்.* உங்கள் வாழ்க்கையில் இதுபோன்ற சூழ்நிலைகளை நீங்கள் சந்தித்தால், உங்கள் பாதையைப் பற்றி சிந்தித்து, உங்கள் வாழ்க்கை சரியான பாதையில் உள்ளதா என்பதைச் சரிபார்க்க நேரம் ஒதுக்குங்கள்.* இல்லை என்றால், மனந்திரும்பி, சரியான ஒழுங்கு நடவடிக்கையை எடுங்கள்.* தைரியமாக இயேசுவிடம் வாருங்கள். அவர் அன்பானவர், உண்மையுள்ளவர், உங்களை மீட்டெடுக்க ஆர்வமாயிருக்கிறார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது சிட்சையை ஏற்றுக்கொள்ளவும், உமது சித்தத்தின்படி என் வழிகளைச் சரிசெய்யவும் எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

