திங்கட்கிழமை, 14 ஆகஸ்ட் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார். யோசுவா 1:9 * திடமனம் என்பது நிச்சயமற்ற மற்றும் சவாலான நேரங்களில் நம்மிடமிருந்து வெளிப்படும் குணமாகும்.* மோசேக்குப் பின்பு யோசுவா, இஸ்ரவேலரை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு அழைத்துச் செல்லும் பணியை மேற்கொண்டபோது, கர்த்தர் இந்த வார்த்தைகளின் மூலம் யோசுவாவை உற்சாகப்படுத்தினார். இஸ்ரவேலர்கள் யோர்தான் நதியைக் கடந்து வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் பிரவேசித்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தைப் பற்றி யோசுவா புத்தகத்தில் படிக்கிறோம். அது லேசானதாகத் தோன்றினாலும், நடந்த முறை முற்றிலும் ஆச்சரியமானது. மக்கள் கானானுக்குள் நுழையும் நேரம் வந்தபோது, யோர்தான் நதி நிரம்பி கரைபுரண்டோடுவதைப் பார்த்தார்கள், அது அவர்களுடைய நம்பிக்கையை அசைத்து அச்சுறுத்தியது. இருப்பினும், யோசுவா கர்த்தர் மீதான விசுவாசத்தில் தளரவில்லை. அவர் தனது விசுவாசத்திலும் கர்த்தருக்குக் கீழ்ப்படிதலிலும் உறுதியாக இருந்தார். மேலும் உடன்படிக்கைப் பெட்டியுடன் ஆசாரியர்களை ஆற்றில் இறங்கும்படி கட்டளையிடுவதில் தைரியத்தையும் திடமனதையும் வெளிப்படுத்தினார். யோசுவாவின் கீழ்ப்படிதலையும், விசுவாசத்தில் முன்னேறுவதற்கான அவனுடைய தைரியத்தையும் தேவன் கனம்பண்ணினார். ஆம்! ஆசிரியர்களின் கால்கள் ஆற்றின் தண்ணீரின் ஓரத்தில் பட்டவுடனே தண்ணீர் அதிசயமாகப் பிரிந்தது. மக்கள் தண்ணீரற்ற உலர்ந்த தரைவழியாய்க் கடந்து போனார்கள். * கஷ்டமான சூழ்நிலைகளில் தைரியம் இல்லாமல் போராடுகிறீர்களா?* நீங்கள் முழு கீழ்ப்படிதலுடனும் நம்பிக்கையுடனும் கர்த்தரின் வழிகளைப் பின்பற்றும்போது, பயணம் எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் அவர் உங்களுடன் இருப்பார்.* கர்த்தரில் உறுதியாக இருங்கள், திடமனதோடு இருங்கள்.* கடைசியாக வெற்றி உங்களுடையது. ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் விசுவாசத்திலும், உமக்குக் கீழ்ப்படிதலிலும் உறுதியாய் இருப்பதற்கு எனக்கு திடமான இருதயத்தை தந்தருளும். ஆமென்.
பலங்கொண்டு திடமனதாயிருங்கள்.
“திங்கட்கிழமை, 14 ஆகஸ்ட் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார். யோசுவா 1:9 * திடமனம் என்பது நிச்சயமற்ற மற்றும் சவாலான நேரங்களில் நம்மிடமிருந்து வெளிப்படும் குணமாகும்.* மோசேக்குப் பின்பு யோசுவா, இஸ்ரவேலரை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு அழைத்துச் செல்லும் பணியை மேற்கொண்டபோது, கர்த்தர் இந்த வார்த்தைகளின் மூலம் யோசுவாவை உற்சாகப்படுத்தினார். இஸ்ரவேலர்கள் யோர்தான் நதியைக் கடந்து வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் பிரவேசித்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தைப் பற்றி யோசுவா புத்தகத்தில் படிக்கிறோம். அது லேசானதாகத் தோன்றினாலும், நடந்த முறை முற்றிலும் ஆச்சரியமானது. மக்கள் கானானுக்குள் நுழையும் நேரம் வந்தபோது, யோர்தான் நதி நிரம்பி கரைபுரண்டோடுவதைப் பார்த்தார்கள், அது அவர்களுடைய நம்பிக்கையை அசைத்து அச்சுறுத்தியது. இருப்பினும், யோசுவா கர்த்தர் மீதான விசுவாசத்தில் தளரவில்லை. அவர் தனது விசுவாசத்திலும் கர்த்தருக்குக் கீழ்ப்படிதலிலும் உறுதியாக இருந்தார். மேலும் உடன்படிக்கைப் பெட்டியுடன் ஆசாரியர்களை ஆற்றில் இறங்கும்படி கட்டளையிடுவதில் தைரியத்தையும் திடமனதையும் வெளிப்படுத்தினார். யோசுவாவின் கீழ்ப்படிதலையும், விசுவாசத்தில் முன்னேறுவதற்கான அவனுடைய தைரியத்தையும் தேவன் கனம்பண்ணினார். ஆம்! ஆசிரியர்களின் கால்கள் ஆற்றின் தண்ணீரின் ஓரத்தில் பட்டவுடனே தண்ணீர் அதிசயமாகப் பிரிந்தது. மக்கள் தண்ணீரற்ற உலர்ந்த தரைவழியாய்க் கடந்து போனார்கள். * கஷ்டமான சூழ்நிலைகளில் தைரியம் இல்லாமல் போராடுகிறீர்களா?* நீங்கள் முழு கீழ்ப்படிதலுடனும் நம்பிக்கையுடனும் கர்த்தரின் வழிகளைப் பின்பற்றும்போது, பயணம் எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் அவர் உங்களுடன் இருப்பார்.* கர்த்தரில் உறுதியாக இருங்கள், திடமனதோடு இருங்கள்.* கடைசியாக வெற்றி உங்களுடையது. ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் விசுவாசத்திலும், உமக்குக் கீழ்ப்படிதலிலும் உறுதியாய் இருப்பதற்கு எனக்கு திடமான இருதயத்தை தந்தருளும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

