வியாழன், 31 ஆகஸ்ட் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன். ஏசாயா 41:10 * இந்தப் உலகத்தைப் படைத்தவர் நம்முடன் இருப்பதால், நாம் பயப்பட தேவையில்லை என்பதை இந்த வாக்குத்தத்தம் நினைவூட்டுகிறது. 2 ராஜாக்கள் புத்தகத்தில், சீரிய ராஜா எலிசா தீர்க்கதரிசியைப் பிடிக்க முயன்ற சம்பவத்தைப் பற்றி படிக்கிறோம். எலிசாவின் வேலைக்காரன் எதிரியின் படைகளைக் கண்டபோது, பயம் அவனைப் பற்றிக்கொண்டது. ஆனால், எலிசா அமைதியாக இருந்து, அவர்களுக்கு இருக்கும் தெய்வீக பாதுகாப்பைக் காண தனது வேலைக்காரனின் கண்களைத் திறக்கும்படி கர்த்தரிடம் கேட்டார். எலிசாவைச் சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை பார்க்கும்படி கர்த்தர் வேலைக்காரனின் கண்களைத் திறந்து அவருடைய தெய்வீக பாதுகாப்பை உறுதிப்படுத்தினார். “பயப்படாதே, தேவன் உன்னுடனே இருக்கிறார்” என்ற வாக்குறுதிக்கு இது ஒரு சான்றாக விளங்குகிறது. * மேலும் அந்தச் சம்பவத்தில், ராணுவ வீரர்கள் எப்படி இயற்கைக்கு அப்பாற்பட்ட முறையில் குருட்டாட்டமாக காணப்பட்டார்கள் என்பதை வாசிக்கிறோம். எலிசா அவர்களை சமாரியா நகரத்திற்கு அழைத்துச் சென்றார், அங்கு அவர்களின் பார்வையை மீண்டும் பெற்றனர், மேலும் அவர்கள் இரக்கத்துடன் நடத்தப்பட்டனர். * நீங்கள் இப்பொழுது அக்கினிமயமான சூழ்நிலைகளில் நடந்து கொண்டிருக்கலாம், மேலும் உங்கள் எதிரிகளையோ அல்லது சவால்களையோ தனித்து எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருப்பதைப் போல உணரலாம். * மனம் தளர வேண்டாம்.* உங்கள் எல்லா சோதனைகள் மற்றும் சவால்களுக்கு மத்தியில் கர்த்தர் உங்களுடன் இருப்பார் என்ற கர்த்தரின் வாக்குத்தத்தை நினைவில் வையுங்கள்.* அவருடைய பராமரிப்புக்குள் இருங்கள், விரைவில் உங்கள் வாழ்க்கையில் விடுதலையை காண்பீர்கள். ஜெபம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, என்னுடன் இருப்பதற்கு நன்றி. உமது பாதுகாப்பில் நம்பிக்கை வைத்து, உமது வலிமைமிக்க கரங்களின் கீழ் அடங்கியிருக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.
பயப்படாதேயுங்கள், கர்ததர் உங்களுடன் இருக்கிறார்.
“வியாழன், 31 ஆகஸ்ட் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன். ஏசாயா 41:10 * இந்தப் உலகத்தைப் படைத்தவர் நம்முடன் இருப்பதால், நாம் பயப்பட தேவையில்லை என்பதை இந்த வாக்குத்தத்தம் நினைவூட்டுகிறது. 2 ராஜாக்கள் புத்தகத்தில், சீரிய ராஜா எலிசா தீர்க்கதரிசியைப் பிடிக்க முயன்ற சம்பவத்தைப் பற்றி படிக்கிறோம். எலிசாவின் வேலைக்காரன் எதிரியின் படைகளைக் கண்டபோது, பயம் அவனைப் பற்றிக்கொண்டது. ஆனால், எலிசா அமைதியாக இருந்து, அவர்களுக்கு இருக்கும் தெய்வீக பாதுகாப்பைக் காண தனது வேலைக்காரனின் கண்களைத் திறக்கும்படி கர்த்தரிடம் கேட்டார். எலிசாவைச் சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை பார்க்கும்படி கர்த்தர் வேலைக்காரனின் கண்களைத் திறந்து அவருடைய தெய்வீக பாதுகாப்பை உறுதிப்படுத்தினார். "பயப்படாதே, தேவன் உன்னுடனே இருக்கிறார்" என்ற வாக்குறுதிக்கு இது ஒரு சான்றாக விளங்குகிறது. * மேலும் அந்தச் சம்பவத்தில், ராணுவ வீரர்கள் எப்படி இயற்கைக்கு அப்பாற்பட்ட முறையில் குருட்டாட்டமாக காணப்பட்டார்கள் என்பதை வாசிக்கிறோம். எலிசா அவர்களை சமாரியா நகரத்திற்கு அழைத்துச் சென்றார், அங்கு அவர்களின் பார்வையை மீண்டும் பெற்றனர், மேலும் அவர்கள் இரக்கத்துடன் நடத்தப்பட்டனர். * நீங்கள் இப்பொழுது அக்கினிமயமான சூழ்நிலைகளில் நடந்து கொண்டிருக்கலாம், மேலும் உங்கள் எதிரிகளையோ அல்லது சவால்களையோ தனித்து எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருப்பதைப் போல உணரலாம். * மனம் தளர வேண்டாம்.* உங்கள் எல்லா சோதனைகள் மற்றும் சவால்களுக்கு மத்தியில் கர்த்தர் உங்களுடன் இருப்பார் என்ற கர்த்தரின் வாக்குத்தத்தை நினைவில் வையுங்கள்.* அவருடைய பராமரிப்புக்குள் இருங்கள், விரைவில் உங்கள் வாழ்க்கையில் விடுதலையை காண்பீர்கள். ஜெபம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, என்னுடன் இருப்பதற்கு நன்றி. உமது பாதுகாப்பில் நம்பிக்கை வைத்து, உமது வலிமைமிக்க கரங்களின் கீழ் அடங்கியிருக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

