← செய்திகளுக்குத் திரும்பு
உங்கள் அழுகையின் சத்தத்துக்கு கர்த்தர் மனமிரங்குவார்.
படத்தைப் பதிவிறக்கு

உங்கள் அழுகையின் சத்தத்துக்கு கர்த்தர் மனமிரங்குவார்.

“செவ்வாய்க்கிழமை, 18 ஏப்ரல் 2023 இன்றைய நம்பிக்கை வார்த்தை:உன் கூப்பிடுதலின் சத்தத்துக்கு அவர் உருக்கமாய் இரங்கி அதைக் கேட்டவுடனே உனக்கு மறுஉத்தரவு அருளுவார். ஏசாயா 30:19. * கர்த்தர் உங்களுடைய அழுகையைப் பார்க்கிறார். அவர் உங்களுக்கு பதில் அளிப்பார்.* ஆனால் உங்கள் ஜெபங்களுக்கு கர்த்தர் பதிலளிக்க எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும் என்று நீங்கள் யோசிக்கலாம்.* காத்திருப்பு உண்மையில் வேதனையானது.* ஆனால் நீங்கள் அவரை நம்பி, உங்கள் கவலைகளை அவர் கையாள அனுமதித்தால், அவர் சரியான நேரத்தில் எல்லாவற்றையும் நேர்த்தியாக செய்வார். * நோய்வாய்ப்பட்டு இறந்த தங்கள் சகோதரன் லாசருவைப் பற்றி மார்த்தாளும், மரியாளும் இயேசுவிடம் அழுதபோது அவர்களுடன் அவரும் அழுதார்.* அவர் மனதுருகி லாசருவை உயிரோடு எழுப்பினார். * அதேபோல், இயேசு உங்கள் அழுகைக்கும் மனதுருகுவார்.* உங்கள் மனவேதனைகளை இயேசுவிடம் கொட்டி, அவருடைய பாதத்தில் கண்ணீரை சிந்துங்கள்.* அவர் உங்களைக் கண்டிக்க மாட்டார்.* அவர் உங்களுக்காக மனமிருங்குவார், உங்கள் கூக்குரலுக்கு பதிலளிப்பார்.* அவர் உங்கள் கண்ணீரைத் துடைத்து உங்களை மகிழ்ச்சியினால் நிரப்புவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து என் கூப்பிடுதலுக்கு பதிலளித்தருளும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

செவ்வாய்க்கிழமை, 18 ஏப்ரல் 2023 இன்றைய நம்பிக்கை வார்த்தை:உன் கூப்பிடுதலின் சத்தத்துக்கு அவர் உருக்கமாய் இரங்கி அதைக் கேட்டவுடனே உனக்கு மறுஉத்தரவு அருளுவார். ஏசாயா 30:19. * கர்த்தர் உங்களுடைய அழுகையைப் பார்க்கிறார். அவர் உங்களுக்கு பதில் அளிப்பார்.* ஆனால் உங்கள் ஜெபங்களுக்கு கர்த்தர் பதிலளிக்க எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும் என்று நீங்கள் யோசிக்கலாம்.* காத்திருப்பு உண்மையில் வேதனையானது.* ஆனால் நீங்கள் அவரை நம்பி, உங்கள் கவலைகளை அவர் கையாள அனுமதித்தால், அவர் சரியான நேரத்தில் எல்லாவற்றையும் நேர்த்தியாக செய்வார். * நோய்வாய்ப்பட்டு இறந்த தங்கள் சகோதரன் லாசருவைப் பற்றி மார்த்தாளும், மரியாளும் இயேசுவிடம் அழுதபோது அவர்களுடன் அவரும் அழுதார்.* அவர் மனதுருகி லாசருவை உயிரோடு எழுப்பினார். * அதேபோல், இயேசு உங்கள் அழுகைக்கும் மனதுருகுவார்.* உங்கள் மனவேதனைகளை இயேசுவிடம் கொட்டி, அவருடைய பாதத்தில் கண்ணீரை சிந்துங்கள்.* அவர் உங்களைக் கண்டிக்க மாட்டார்.* அவர் உங்களுக்காக மனமிருங்குவார், உங்கள் கூக்குரலுக்கு பதிலளிப்பார்.* அவர் உங்கள் கண்ணீரைத் துடைத்து உங்களை மகிழ்ச்சியினால் நிரப்புவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து என் கூப்பிடுதலுக்கு பதிலளித்தருளும். ஆமென்.