← செய்திகளுக்குத் திரும்பு
சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும்.
படத்தைப் பதிவிறக்கு

சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும்.

“சங்கீதம் 30:5B வேதாகமத்தில், யோசேப்பு தனது தகப்பன் யாக்கோபிற்கு மிகவும் பிரியமான மகனாக இருந்தார். இது அவரது சகோதரர்களிடையே பொறாமையை ஏற்படுத்தியது. அவர்கள் அவருக்கு எதிராக சதி செய்து எகிப்திற்கு அடிமையாக விற்றனர். அடிமையாகவும், பின்னர் சிறைக் கைதியாகவும் யோசேப்பு சொல்ல முடியாத துன்பங்களைச் சகித்தார். குடும்பத்திலிருந்தும் சொந்த நாட்டிலிருந்தும் விலக்கப்பட்டிருந்த அந்த சோகமான நாட்களில் பல இரவுகளில் யோசேப்பு அழுதுகொண்டிருந்திருக்க வேண்டும். என்றாலும், யோசேப்பின் வாழ்க்கைக்கு கர்த்தர் ஒரு அற்புதமான திட்டத்தை வைத்திருந்தார். அவர் யோசேப்புக்கு சொப்பனங்களை அர்த்தம் சொல்லும் திறமையைக் கொடுத்தார், அது இறுதியில் எகிப்தின் ராஜாவான பார்வோனிடம் அவரைக் கொண்டுவந்தது. ஒரு சந்தர்ப்பத்தில், வரவிருக்கும் பஞ்சத்தைப் பற்றிய பார்வோனின் சொப்பனத்தை துல்லியமாக விளக்கினார். இது அவரது வாழ்க்கையை வியத்தகு முறையில் மாற்றியது. ஆம், இக்கட்டுக்காலத்தில் உதவுவதற்காக அவர் எகிப்தில் உயர் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவரது அழுகை மற்றும் நம்பிக்கையற்ற இரவுகள் மகிழ்ச்சியின் காலை நேரங்களாக மாற்றப்பட்டன. பிரதிபலிப்பு கேள்விகள்: 1. நீங்களும் உங்கள் கஷ்டமான சூழ்நிலையின் மத்தியில் விசுவாசத்தில் நிலைத்திருக்கப் போராடிக் கொண்டிருக்கிறீர்களா?2. யோசேப்பின் பயணத்தைப் பற்றி சிந்தித்துப் பார்த்தால், உங்கள் அழுகையின் இரவுகளில் கூட மகிழ்ச்சி வரும் என்ற நம்பிக்கையை நீங்கள் எப்படிக் கண்டுக்கொள்ளலாம்? * ஒருபோதும் மனம் தளர்ந்து விடாதீர்கள்.* நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார் என்று பரிசுத்த வேதாகமம் கூறுகிறது.* உங்கள் விசுவாசம் அல்லது கர்த்தரின் கொள்கையில் சமரசம் செய்யாமல் தொடர்ந்து அவரை நம்புங்கள்.* கர்த்தர் சீக்கிரத்தில் உங்கள் புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாற்றுவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நான் விடுதலையைப் பெற்றுக்கொள்ளும் வரை உமது வாக்குத்தத்தங்களையும், வழிகளையும் உறுதியாகப் பற்றிக்கொள்ள எனக்கு பலத்தைத் தாரும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

வெள்ளிக்கிழமை, 15 செப்டம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும். சங்கீதம் 30:5B வேதாகமத்தில், யோசேப்பு தனது தகப்பன் யாக்கோபிற்கு மிகவும் பிரியமான மகனாக இருந்தார். இது அவரது சகோதரர்களிடையே பொறாமையை ஏற்படுத்தியது. அவர்கள் அவருக்கு எதிராக சதி செய்து எகிப்திற்கு அடிமையாக விற்றனர். அடிமையாகவும், பின்னர் சிறைக் கைதியாகவும் யோசேப்பு சொல்ல முடியாத துன்பங்களைச் சகித்தார். குடும்பத்திலிருந்தும் சொந்த நாட்டிலிருந்தும் விலக்கப்பட்டிருந்த அந்த சோகமான நாட்களில் பல இரவுகளில் யோசேப்பு அழுதுகொண்டிருந்திருக்க வேண்டும். என்றாலும், யோசேப்பின் வாழ்க்கைக்கு கர்த்தர் ஒரு அற்புதமான திட்டத்தை வைத்திருந்தார். அவர் யோசேப்புக்கு சொப்பனங்களை அர்த்தம் சொல்லும் திறமையைக் கொடுத்தார், அது இறுதியில் எகிப்தின் ராஜாவான பார்வோனிடம் அவரைக் கொண்டுவந்தது. ஒரு சந்தர்ப்பத்தில், வரவிருக்கும் பஞ்சத்தைப் பற்றிய பார்வோனின் சொப்பனத்தை துல்லியமாக விளக்கினார். இது அவரது வாழ்க்கையை வியத்தகு முறையில் மாற்றியது. ஆம், இக்கட்டுக்காலத்தில் உதவுவதற்காக அவர் எகிப்தில் உயர் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவரது அழுகை மற்றும் நம்பிக்கையற்ற இரவுகள் மகிழ்ச்சியின் காலை நேரங்களாக மாற்றப்பட்டன. பிரதிபலிப்பு கேள்விகள்: 1. நீங்களும் உங்கள் கஷ்டமான சூழ்நிலையின் மத்தியில் விசுவாசத்தில் நிலைத்திருக்கப் போராடிக் கொண்டிருக்கிறீர்களா?2. யோசேப்பின் பயணத்தைப் பற்றி சிந்தித்துப் பார்த்தால், உங்கள் அழுகையின் இரவுகளில் கூட மகிழ்ச்சி வரும் என்ற நம்பிக்கையை நீங்கள் எப்படிக் கண்டுக்கொள்ளலாம்? * ஒருபோதும் மனம் தளர்ந்து விடாதீர்கள்.* நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார் என்று பரிசுத்த வேதாகமம் கூறுகிறது.* உங்கள் விசுவாசம் அல்லது கர்த்தரின் கொள்கையில் சமரசம் செய்யாமல் தொடர்ந்து அவரை நம்புங்கள்.* கர்த்தர் சீக்கிரத்தில் உங்கள் புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாற்றுவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நான் விடுதலையைப் பெற்றுக்கொள்ளும் வரை உமது வாக்குத்தத்தங்களையும், வழிகளையும் உறுதியாகப் பற்றிக்கொள்ள எனக்கு பலத்தைத் தாரும். ஆமென்.