← செய்திகளுக்குத் திரும்பு
சமாதானமாயிருக்கும்படிக்கே தேவன் நம்மை அழைத்திருக்கிறார்.
படத்தைப் பதிவிறக்கு

சமாதானமாயிருக்கும்படிக்கே தேவன் நம்மை அழைத்திருக்கிறார்.

“1 கொரிந்தியர் 7:15 * மோதல்களும், சண்டைகளும் எப்பொழுதும் தலைப்புச் செய்திகளில் காணப்படுகிறது. இவைகள் மக்களின் வாழ்க்கையை முன்பை விட அதிக அழுத்தத்திற்குள்ளாக்குகிறது.* மன அழுத்தம் தொடர்பான நோய்கள் அதிகரித்து வருகின்றன, மேலும் உலகம் முழுவதும் அமைதி என்பது அரிதாகி வருகிறது.* இந்த உண்மைகளைப் பற்றி சிந்திப்பது நமது எதிர்காலத்தை பயமுறுத்துவதாகவும், நிச்சயமற்றதாகவும் தோன்றுகிறது. * ஆனாலும், இத்தனை நிச்சயமற்ற நிலைகளுக்கு மத்தியிலும், இயேசு நமக்கு நம்பிக்கையைத் தருகிறார்.* அவர் தம்முடைய சமாதானத்தை நமக்கு வாக்களித்திருக்கிறார், சமாதானமாக வாழும்படி நம்மை வற்புறுத்துகிறார்.* உங்களுடையக் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களைப் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்களோ?* கவலை உங்கள் வாழ்க்கையை மேலும் துயரமாக்குவதைத் தவிர வேறு எதையும் செய்யாது. * நீங்கள் உங்கள் வாழ்க்கையை இயேசுவுக்குச் சமர்ப்பித்து, அவருடைய வழிமுறைகளைப் பின்பற்றுவதில் உறுதியாக இருந்தால், அவர் உங்கள் எதிர்காலத்தைக் கவனித்துக்கொள்வார்.* உங்கள் கவலைகளை இயேசுவிடம் ஒப்படைப்பதன் மூலம், அவருடைய சமாதானத்தை நீங்கள் அனுபவிக்க முடியும்.* கிறிஸ்துவின் சமாதானம் உங்கள் இருதயங்களில் ஆதிக்கம் செலுத்தி, மற்றவர்களின் வாழ்விலும் உங்கள் மூலம் பாய்ந்து செல்லட்டும் .* உங்கள் சமுதாயத்தில் சமாதானம் செய்பவராகவும், இயேசுவுக்கு சாட்சியாகவும் இருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து உமது சமாதானத்தை எனக்குத் தந்து, எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படாமல் என் வாழ்க்கையை சந்தோஷமாய் அனுபவிக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

திங்கட்கிழமை, 22 மே 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:சமாதானமாயிருக்கும்படிக்கே தேவன் நம்மை அழைத்திருக்கிறார். 1 கொரிந்தியர் 7:15 * மோதல்களும், சண்டைகளும் எப்பொழுதும் தலைப்புச் செய்திகளில் காணப்படுகிறது. இவைகள் மக்களின் வாழ்க்கையை முன்பை விட அதிக அழுத்தத்திற்குள்ளாக்குகிறது.* மன அழுத்தம் தொடர்பான நோய்கள் அதிகரித்து வருகின்றன, மேலும் உலகம் முழுவதும் அமைதி என்பது அரிதாகி வருகிறது.* இந்த உண்மைகளைப் பற்றி சிந்திப்பது நமது எதிர்காலத்தை பயமுறுத்துவதாகவும், நிச்சயமற்றதாகவும் தோன்றுகிறது. * ஆனாலும், இத்தனை நிச்சயமற்ற நிலைகளுக்கு மத்தியிலும், இயேசு நமக்கு நம்பிக்கையைத் தருகிறார்.* அவர் தம்முடைய சமாதானத்தை நமக்கு வாக்களித்திருக்கிறார், சமாதானமாக வாழும்படி நம்மை வற்புறுத்துகிறார்.* உங்களுடையக் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களைப் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்களோ?* கவலை உங்கள் வாழ்க்கையை மேலும் துயரமாக்குவதைத் தவிர வேறு எதையும் செய்யாது. * நீங்கள் உங்கள் வாழ்க்கையை இயேசுவுக்குச் சமர்ப்பித்து, அவருடைய வழிமுறைகளைப் பின்பற்றுவதில் உறுதியாக இருந்தால், அவர் உங்கள் எதிர்காலத்தைக் கவனித்துக்கொள்வார்.* உங்கள் கவலைகளை இயேசுவிடம் ஒப்படைப்பதன் மூலம், அவருடைய சமாதானத்தை நீங்கள் அனுபவிக்க முடியும்.* கிறிஸ்துவின் சமாதானம் உங்கள் இருதயங்களில் ஆதிக்கம் செலுத்தி, மற்றவர்களின் வாழ்விலும் உங்கள் மூலம் பாய்ந்து செல்லட்டும் .* உங்கள் சமுதாயத்தில் சமாதானம் செய்பவராகவும், இயேசுவுக்கு சாட்சியாகவும் இருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து உமது சமாதானத்தை எனக்குத் தந்து, எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படாமல் என் வாழ்க்கையை சந்தோஷமாய் அனுபவிக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.