திங்கட்கிழமை, 8 மே 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:இந்தக்காரியம் கர்த்தரால் வந்தது. ஆதியாகமம் 24:50 * நீங்கள் உங்கள் தாயின் வயிற்றில் உருவாகுவதற்கு முன்பே, கர்த்தர் உங்களைத் தனக்காகத் தேர்ந்தெடுத்தார்.* அவர் நம் ஒவ்வொருவருக்கும் என்ன வைத்திருக்கிறாரோ அது அவர் குறித்த நேரத்தில் வெளிப்படும், அது நமக்கு அழகாகவும் அற்புதமாகவும் இருக்கும்.* பரிசுத்த வேதாகமத்தின்படி, தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களக்கு ஆயத்தம் பண்ணினவைகளை கண் காணவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை.* இப்பொழுது இருக்கும் தேவைகளையும், எதிர்காலத்திற்கு உங்கள் தேவைகளாக நீங்கள் கருதும் அனைத்தையும் இயேசுவிடம் சொல்லுங்கள்.* அவர் தனது விருப்பத்திற்கும் நோக்கத்திற்கும் ஏற்ப அனைவருக்கும் சிறப்பாகவும், ஏராளமாகவும் வழங்குகிறார். * சில நேரங்களில், நீங்கள் கேட்பதற்கு முன்பே அதைப் பெறுவீர்கள்.* மற்ற நேரங்களில், நீங்கள் சிறிது நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும்.* கர்த்தர் உங்கள் வாழ்க்கையை எவ்வாறு பார்க்கிறார் என்றும், அவர் எவ்வாறு செயல்படுகிறார் என்பதையும் நீங்கள் புரிந்து கொண்டால் ஏமாற்றங்களைத் தவிர்க்கலாம்.* எனவே கோபப்படவோ, கலக்கமடையவோ, வருத்தப்படவோ வேண்டாம்.* அவசரப்படுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.* உங்கள் கடந்தகால ஆசீர்வாதங்களையோ அல்லது மற்றவர்களின் ஆசீர்வாதங்களையோ உங்கள் தற்போதைய சூழ்நிலையுடன் ஒப்பிடாதீர்கள். * இஸ்ரவேலர்களை கர்த்தர் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்த பிறகும் எகிப்தின் வெள்ளரிக்காய்களையும், கொம்மட்டிக்காய்களையும், கீரைகளையும், வெண்காயங்களையும், பூண்டுகளையும் நினைத்துக் கொண்டிருந்ததைப் போல இருக்காதீர்கள்.* மாறாக, கர்த்தருடைய வாக்குறுதிகளை தியானித்து, அவற்றை நம்பி அவருக்கு நன்றியை வெளிப்படுத்துங்கள்.* நீங்கள் அவருடைய நன்மைகளை நினைத்து அதை அனுபவிக்கும்போது, சந்தேகத்திற்கு இடமின்றி கர்த்தரின் மகத்துவத்தை உணர்ந்தவர்களாய், “இது கர்த்தரிடத்திலிருந்து வந்தது” என்று அறிவிப்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது நேரத்திற்காக பொறுமையுடன் காத்திருந்து, அதனால் உமது முழு ஆசீர்வாத்தையும் நான் சமாதானத்துடனும் மகிழ்ச்சியுடனும் அனுபவிக்க எனக்கு உதவிச் செய்யும் ஆமென்.
காரியம் கர்த்தரிடமிருந்து வருகிறது.
“திங்கட்கிழமை, 8 மே 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:இந்தக்காரியம் கர்த்தரால் வந்தது. ஆதியாகமம் 24:50 * நீங்கள் உங்கள் தாயின் வயிற்றில் உருவாகுவதற்கு முன்பே, கர்த்தர் உங்களைத் தனக்காகத் தேர்ந்தெடுத்தார்.* அவர் நம் ஒவ்வொருவருக்கும் என்ன வைத்திருக்கிறாரோ அது அவர் குறித்த நேரத்தில் வெளிப்படும், அது நமக்கு அழகாகவும் அற்புதமாகவும் இருக்கும்.* பரிசுத்த வேதாகமத்தின்படி, தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களக்கு ஆயத்தம் பண்ணினவைகளை கண் காணவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை.* இப்பொழுது இருக்கும் தேவைகளையும், எதிர்காலத்திற்கு உங்கள் தேவைகளாக நீங்கள் கருதும் அனைத்தையும் இயேசுவிடம் சொல்லுங்கள்.* அவர் தனது விருப்பத்திற்கும் நோக்கத்திற்கும் ஏற்ப அனைவருக்கும் சிறப்பாகவும், ஏராளமாகவும் வழங்குகிறார். * சில நேரங்களில், நீங்கள் கேட்பதற்கு முன்பே அதைப் பெறுவீர்கள்.* மற்ற நேரங்களில், நீங்கள் சிறிது நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும்.* கர்த்தர் உங்கள் வாழ்க்கையை எவ்வாறு பார்க்கிறார் என்றும், அவர் எவ்வாறு செயல்படுகிறார் என்பதையும் நீங்கள் புரிந்து கொண்டால் ஏமாற்றங்களைத் தவிர்க்கலாம்.* எனவே கோபப்படவோ, கலக்கமடையவோ, வருத்தப்படவோ வேண்டாம்.* அவசரப்படுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.* உங்கள் கடந்தகால ஆசீர்வாதங்களையோ அல்லது மற்றவர்களின் ஆசீர்வாதங்களையோ உங்கள் தற்போதைய சூழ்நிலையுடன் ஒப்பிடாதீர்கள். * இஸ்ரவேலர்களை கர்த்தர் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்த பிறகும் எகிப்தின் வெள்ளரிக்காய்களையும், கொம்மட்டிக்காய்களையும், கீரைகளையும், வெண்காயங்களையும், பூண்டுகளையும் நினைத்துக் கொண்டிருந்ததைப் போல இருக்காதீர்கள்.* மாறாக, கர்த்தருடைய வாக்குறுதிகளை தியானித்து, அவற்றை நம்பி அவருக்கு நன்றியை வெளிப்படுத்துங்கள்.* நீங்கள் அவருடைய நன்மைகளை நினைத்து அதை அனுபவிக்கும்போது, சந்தேகத்திற்கு இடமின்றி கர்த்தரின் மகத்துவத்தை உணர்ந்தவர்களாய், "இது கர்த்தரிடத்திலிருந்து வந்தது" என்று அறிவிப்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது நேரத்திற்காக பொறுமையுடன் காத்திருந்து, அதனால் உமது முழு ஆசீர்வாத்தையும் நான் சமாதானத்துடனும் மகிழ்ச்சியுடனும் அனுபவிக்க எனக்கு உதவிச் செய்யும் ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

