← செய்திகளுக்குத் திரும்பு
மனுஷனுடைய ஆவி கர்த்தர் தந்த தீபமாயிருக்கிறது.
படத்தைப் பதிவிறக்கு

மனுஷனுடைய ஆவி கர்த்தர் தந்த தீபமாயிருக்கிறது.

“நீதிமொழிகள் 20:27 மனிதர்களாகிய நாம் மாமிசத்தால் ஆனவர்கள், நமக்குள் ஒரு ஆவி இருக்கிறது. அது கர்த்தரால் நமக்குக் கொடுக்கப்பட்டு நம் உணர்ச்சிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. நமது ஆவி நம் உடலை விட்டு வெளியேறும்போது, நாம் இறந்துவிட்டதாக அறிவிக்கப்படுகிறது. வேதத்தின் படி ஜீவன் கொடுக்கும் ஆவியான இயேசுவை நம் இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்போது, அவர் நமக்குள் ஒரு ஆவியாக வாழ்ந்து, நமது உள்ளார்ந்த இயல்பை மாற்றியமைக்கிறார். இந்த ஆன்மீக மாற்றம் நம் வாழ்வில் தெய்வீக குணங்களை வெளிப்படுத்துகிறது. இது நமது அனுதின நடைமுறைக்கு வழிகாட்டுகிறது, மேலும் நாம் மேம்படுத்த வேண்டிய பகுதிகளை அடையாளம் காண உதவுகிறது. நமது வாழ்வில் நல்ல ஆரோக்கியம் மற்றும் வெற்றியின் பலன்களை அனுபவிக்க நமது ஆத்தும நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். கர்த்தருடன் போதுமான நேரத்தை செலவிடுவதே நமது வாழ்வின் மாற்றத்திற்கான திறவுகோலாகும். ஜெபிப்போம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, உம்முடன் அதிக நேரத்தை செலவிடவும், உமது சாயலில் மாற்றப்படவும் எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

செவ்வாய், 9 மே 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:மனுஷனுடைய ஆவி கர்த்தர் தந்த தீபமாயிருக்கிறது. நீதிமொழிகள் 20:27 மனிதர்களாகிய நாம் மாமிசத்தால் ஆனவர்கள், நமக்குள் ஒரு ஆவி இருக்கிறது. அது கர்த்தரால் நமக்குக் கொடுக்கப்பட்டு நம் உணர்ச்சிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. நமது ஆவி நம் உடலை விட்டு வெளியேறும்போது, நாம் இறந்துவிட்டதாக அறிவிக்கப்படுகிறது. வேதத்தின் படி ஜீவன் கொடுக்கும் ஆவியான இயேசுவை நம் இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்போது, அவர் நமக்குள் ஒரு ஆவியாக வாழ்ந்து, நமது உள்ளார்ந்த இயல்பை மாற்றியமைக்கிறார். இந்த ஆன்மீக மாற்றம் நம் வாழ்வில் தெய்வீக குணங்களை வெளிப்படுத்துகிறது. இது நமது அனுதின நடைமுறைக்கு வழிகாட்டுகிறது, மேலும் நாம் மேம்படுத்த வேண்டிய பகுதிகளை அடையாளம் காண உதவுகிறது. நமது வாழ்வில் நல்ல ஆரோக்கியம் மற்றும் வெற்றியின் பலன்களை அனுபவிக்க நமது ஆத்தும நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். கர்த்தருடன் போதுமான நேரத்தை செலவிடுவதே நமது வாழ்வின் மாற்றத்திற்கான திறவுகோலாகும். ஜெபிப்போம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, உம்முடன் அதிக நேரத்தை செலவிடவும், உமது சாயலில் மாற்றப்படவும் எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.