வெள்ளிக்கிழமை, 16 ஜூன் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தரை நம்பியிருக்கிறவனையோ கிருபை சூழ்ந்துகொள்ளும். சங்கீதம் 32:10 * நீங்கள் கர்த்தரை நம்பும்போது, அவரை மகிழ்ச்சியடையச் செய்கிறீர்கள்.* அதன் மூலம், அவர் உங்களிலும் உங்கள் வாழ்க்கையிலும் மகிழ்ந்து களிகூருகிறார்.* அவர் உங்களை எல்லாத் தீமைகளிலிருந்தும் பாதுகாத்து, உங்கள் தேவைகளை சந்திப்பார், அவருடைய நன்மையினாலும், இரக்கத்தினாலும் உங்கள் வாழ்க்கையை செழிப்பாக்குவார்.* அவருடைய இரக்கம் உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களைத் தொடரும்.* இது ஒரு சிறந்த பாதுகாப்பு அல்லவா? * அவருடைய இரக்கம் உங்களைச் சூழ்ந்திருக்கும் போது எந்தத் தீமையும் உங்களைத் தாக்க முடியாது.* உங்களைச் சூழ்ந்துகொள்ளவும், உங்களைக் கவனித்துக்கொள்ளவும், உங்களைப் பாதுகாக்கவும், உங்களுக்கு உதவிச் செய்யவும் அவர் தம்முடைய தூதர்களை அனுப்புவார். * நீங்கள் ஒருபோதும் தனியாக இல்லை.* எனவே, உங்கள் சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல், கர்த்தரை நம்புங்கள்.* உங்கள் விசுவாசம் மலைகளையும் கர்த்தருடைய இருதயத்தையும் அசைக்க வல்லது.* உங்கள் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் அவரை மாத்திரம் நம்பி அவரை சார்ந்திருங்கள்.* நீங்கள் ஒருபோதும் ஏமாற்றமடைய மாட்டீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உம்மை நம்பவும், உம்மோடு நெருக்கமாக இருக்கவும், என் வாழ்நாளின் எல்லா நாட்களிலும் உமது நன்மையையும், தயவையும் அனுபவிக்கவும் எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.
கர்த்தரில் நம்பிக்கை வையுங்கள்; அவருடைய கிருபை உங்களைச்...
“வெள்ளிக்கிழமை, 16 ஜூன் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தரை நம்பியிருக்கிறவனையோ கிருபை சூழ்ந்துகொள்ளும். சங்கீதம் 32:10 * நீங்கள் கர்த்தரை நம்பும்போது, அவரை மகிழ்ச்சியடையச் செய்கிறீர்கள்.* அதன் மூலம், அவர் உங்களிலும் உங்கள் வாழ்க்கையிலும் மகிழ்ந்து களிகூருகிறார்.* அவர் உங்களை எல்லாத் தீமைகளிலிருந்தும் பாதுகாத்து, உங்கள் தேவைகளை சந்திப்பார், அவருடைய நன்மையினாலும், இரக்கத்தினாலும் உங்கள் வாழ்க்கையை செழிப்பாக்குவார்.* அவருடைய இரக்கம் உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களைத் தொடரும்.* இது ஒரு சிறந்த பாதுகாப்பு அல்லவா? * அவருடைய இரக்கம் உங்களைச் சூழ்ந்திருக்கும் போது எந்தத் தீமையும் உங்களைத் தாக்க முடியாது.* உங்களைச் சூழ்ந்துகொள்ளவும், உங்களைக் கவனித்துக்கொள்ளவும், உங்களைப் பாதுகாக்கவும், உங்களுக்கு உதவிச் செய்யவும் அவர் தம்முடைய தூதர்களை அனுப்புவார். * நீங்கள் ஒருபோதும் தனியாக இல்லை.* எனவே, உங்கள் சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல், கர்த்தரை நம்புங்கள்.* உங்கள் விசுவாசம் மலைகளையும் கர்த்தருடைய இருதயத்தையும் அசைக்க வல்லது.* உங்கள் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் அவரை மாத்திரம் நம்பி அவரை சார்ந்திருங்கள்.* நீங்கள் ஒருபோதும் ஏமாற்றமடைய மாட்டீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உம்மை நம்பவும், உம்மோடு நெருக்கமாக இருக்கவும், என் வாழ்நாளின் எல்லா நாட்களிலும் உமது நன்மையையும், தயவையும் அனுபவிக்கவும் எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

