← செய்திகளுக்குத் திரும்பு
கர்த்தர் உங்களைத் தம் ஜனங்களாகச் சேர்த்துக்கொண்டு, உங்கள் தேவனாயிருப்பார்.
படத்தைப் பதிவிறக்கு

கர்த்தர் உங்களைத் தம் ஜனங்களாகச் சேர்த்துக்கொண்டு, உங்கள்...

“வியாழன், 13 ஜூலை 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உங்களை எனக்கு ஜனங்களாகச் சேர்த்துக்கொண்டு, உங்களுக்கு தேவனாயிருப்பேன். யாத்திராகமம் 6:7A * நீங்கள் ஒரு அனாதையைப் போல் உணர்கிறீர்களா?* உங்கள் சொந்த குடும்பமே உங்கள் வார்த்தைகளையும் உணர்வுகளையும் அலட்சியம் செய்து, உங்களை தனிமை மற்றும் நிராகரிப்பு போன்ற உணர்வுகளுக்குள் தள்ளுகிறார்களா?* இவ்வுலகில் உள்ளவர்கள் உங்களை நிராகரிக்கலாம் மற்றும் கவனிக்காமல் இருக்கலாம், ஆனால் மன உறுதியுடன் இருங்கள்: இந்த உலகத்தின் தேவன் உங்களை தமக்குச் சொந்தமானவர் என்று கூறுகிறார்.* இது ஒரு குறிப்பிடத்தக்க ஆசீர்வாதம் அல்லவா?* எதிர்ப்புகளும், நிராகரிப்பும் நீடித்தாலும், கர்த்தர் உங்கள் சார்பாக எழும்புவார், உங்களை ஒடுக்கும் அனைவருக்கும் அவமானத்தைத் தருவார் என்பதில் உறுதியாக இருங்கள். இஸ்ரவேலர்களின் வாழ்க்கைப் பயணத்தை வேதாகமத்தில் பாருங்கள், அவர்கள் பெரும் துன்பங்களையும் அடிமைத்தனத்தையும் அனுபவித்தார்கள். அவர்கள் விவரிக்க முடியாத அளவு மிரட்டலுக்கும் துன்புறுத்தலுக்கும் ஆளானார்கள். நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு எகிப்தியர்கள் அவர்களை ஒடுக்கி கொடூரமாக நடத்தினார்கள். இருப்பினும், கர்த்தர் அவர்களின் கூக்குரலைக் கேட்டு, அவர்களை எகிப்திலிருந்து விடுதலைச் செய்து அழைத்துச் செல்ல மோசேயை எழுப்பினார், அடையாளங்கள் மற்றும் அற்புதங்கள் மூலம் தம் வல்லமையை வெளிப்படுத்தினார். அவர்களின் சோதனையான நேரங்கள் முழுவதும், கர்த்தர் உண்மையுள்ளவராக இருந்தார் மற்றும் அவர்களின் எதிரிகளுக்கு முன்பாக அவருடைய வல்லமையையும் மகிமையையும் வெளிப்படுத்தினார். இன்று, இஸ்ரேல் உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடுகளில் ஒன்றாகும். * அதுபோலவே, கர்த்தர் உங்களைத் தனக்குச் சொந்தமாகத் தெரிந்தெடுத்திருக்கிறார்.* நீங்கள் அவருடன் ஆழமான மற்றும் நெருக்கமான உறவை வளர்த்துக் கொள்கிறீர்களா?* இல்லையென்றால், அவருடன் தனிப்பட்ட உறவை வளர்த்துக்கொள்ளவும், வாழ்க்கையில் அவருக்கு முன்னுரிமை அளிக்கவும் நான் உங்களை வலியுறுத்துகிறேன்.* அவருடைய சித்தத்திற்கு ஒப்புக் கொடுத்து, உங்களைச் சுற்றியுள்ள உலகத்தை ஆதாயப்படுத்தும் வகையில், உங்களிலும், உங்கள் வாழ்க்கை மூலமும் அவருடைய மகிமையை வெளிப்படுத்த அவரை அனுமதியுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என்னை உமது பிள்ளையாகத் தெரிந்தெடுத்ததற்கு நன்றி. உம்முடன் நெருக்கமான உறவை வளர்த்துக் கொள்ள எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

வியாழன், 13 ஜூலை 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உங்களை எனக்கு ஜனங்களாகச் சேர்த்துக்கொண்டு, உங்களுக்கு தேவனாயிருப்பேன். யாத்திராகமம் 6:7A * நீங்கள் ஒரு அனாதையைப் போல் உணர்கிறீர்களா?* உங்கள் சொந்த குடும்பமே உங்கள் வார்த்தைகளையும் உணர்வுகளையும் அலட்சியம் செய்து, உங்களை தனிமை மற்றும் நிராகரிப்பு போன்ற உணர்வுகளுக்குள் தள்ளுகிறார்களா?* இவ்வுலகில் உள்ளவர்கள் உங்களை நிராகரிக்கலாம் மற்றும் கவனிக்காமல் இருக்கலாம், ஆனால் மன உறுதியுடன் இருங்கள்: இந்த உலகத்தின் தேவன் உங்களை தமக்குச் சொந்தமானவர் என்று கூறுகிறார்.* இது ஒரு குறிப்பிடத்தக்க ஆசீர்வாதம் அல்லவா?* எதிர்ப்புகளும், நிராகரிப்பும் நீடித்தாலும், கர்த்தர் உங்கள் சார்பாக எழும்புவார், உங்களை ஒடுக்கும் அனைவருக்கும் அவமானத்தைத் தருவார் என்பதில் உறுதியாக இருங்கள். இஸ்ரவேலர்களின் வாழ்க்கைப் பயணத்தை வேதாகமத்தில் பாருங்கள், அவர்கள் பெரும் துன்பங்களையும் அடிமைத்தனத்தையும் அனுபவித்தார்கள். அவர்கள் விவரிக்க முடியாத அளவு மிரட்டலுக்கும் துன்புறுத்தலுக்கும் ஆளானார்கள். நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு எகிப்தியர்கள் அவர்களை ஒடுக்கி கொடூரமாக நடத்தினார்கள். இருப்பினும், கர்த்தர் அவர்களின் கூக்குரலைக் கேட்டு, அவர்களை எகிப்திலிருந்து விடுதலைச் செய்து அழைத்துச் செல்ல மோசேயை எழுப்பினார், அடையாளங்கள் மற்றும் அற்புதங்கள் மூலம் தம் வல்லமையை வெளிப்படுத்தினார். அவர்களின் சோதனையான நேரங்கள் முழுவதும், கர்த்தர் உண்மையுள்ளவராக இருந்தார் மற்றும் அவர்களின் எதிரிகளுக்கு முன்பாக அவருடைய வல்லமையையும் மகிமையையும் வெளிப்படுத்தினார். இன்று, இஸ்ரேல் உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடுகளில் ஒன்றாகும். * அதுபோலவே, கர்த்தர் உங்களைத் தனக்குச் சொந்தமாகத் தெரிந்தெடுத்திருக்கிறார்.* நீங்கள் அவருடன் ஆழமான மற்றும் நெருக்கமான உறவை வளர்த்துக் கொள்கிறீர்களா?* இல்லையென்றால், அவருடன் தனிப்பட்ட உறவை வளர்த்துக்கொள்ளவும், வாழ்க்கையில் அவருக்கு முன்னுரிமை அளிக்கவும் நான் உங்களை வலியுறுத்துகிறேன்.* அவருடைய சித்தத்திற்கு ஒப்புக் கொடுத்து, உங்களைச் சுற்றியுள்ள உலகத்தை ஆதாயப்படுத்தும் வகையில், உங்களிலும், உங்கள் வாழ்க்கை மூலமும் அவருடைய மகிமையை வெளிப்படுத்த அவரை அனுமதியுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என்னை உமது பிள்ளையாகத் தெரிந்தெடுத்ததற்கு நன்றி. உம்முடன் நெருக்கமான உறவை வளர்த்துக் கொள்ள எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.