← செய்திகளுக்குத் திரும்பு
பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள்பிதா பிரியமாயிருக்கிறார்.
படத்தைப் பதிவிறக்கு

பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க...

“லூக்கா 12: 32. * பரலோக ராஜ்யத்தை ஸ்தாபிக்க இயேசு இவ்வுலகிற்கு வந்தார்.* இயேசுவை உங்கள் இரட்சகராகவும் ஆண்டவராகவும் ஏற்றுக்கொண்டபோது, நீங்களும் அவருடைய ராஜ்யத்தில் ஒரு அங்கமானீர்கள்.* பரிசுத்த வேதாகமத்தின்படி, இயேசு மீண்டும் இவ்வுலகிற்கு வரும்போது, நீங்களும் அவருடன் ஆட்சி செய்வீர்கள். இது எவ்வளவு பெரிய பாக்கியம்! * எனவே, சிறந்த ஆசீர்வாதங்களை பெறவும், பெரிய காரியங்களை சாதிக்கவும் நீங்கள் தகுதியற்றவர் என்று கருத வேண்டாம்?* தாழ்வு மனப்பான்மை உங்களை குறைந்த மதிப்பிற்கு உட்படுத்த அனுமதிக்காதீர்கள். * நீங்கள் தனித்துவமாகப் படைக்கப்பட்டவர்கள், கர்த்தருக்குப் பிரியமானவர்கள், அவருடைய மகத்தான திட்டத்தின் ஒரு பகுதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.* கிறிஸ்து உங்களுக்குள் இருந்தால், உங்கள் சொந்த கனவுகள் மற்றும் சிந்தனைகளுக்கும் அப்பால் நீங்கள் அதிகம் சாதிக்க முடியும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என்னை உமது ராஜ்யத்தின் ஒரு பகுதியாக ஆக்கியதற்கு நன்றி. உமது வழிகளில் அச்சமின்றி, உண்மையோடு, உறுதியுடன் இருக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

சனிக்கிழமை, 7 ஜனவரி 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள்பிதா பிரியமாயிருக்கிறார். லூக்கா 12: 32. * பரலோக ராஜ்யத்தை ஸ்தாபிக்க இயேசு இவ்வுலகிற்கு வந்தார்.* இயேசுவை உங்கள் இரட்சகராகவும் ஆண்டவராகவும் ஏற்றுக்கொண்டபோது, நீங்களும் அவருடைய ராஜ்யத்தில் ஒரு அங்கமானீர்கள்.* பரிசுத்த வேதாகமத்தின்படி, இயேசு மீண்டும் இவ்வுலகிற்கு வரும்போது, நீங்களும் அவருடன் ஆட்சி செய்வீர்கள். இது எவ்வளவு பெரிய பாக்கியம்! * எனவே, சிறந்த ஆசீர்வாதங்களை பெறவும், பெரிய காரியங்களை சாதிக்கவும் நீங்கள் தகுதியற்றவர் என்று கருத வேண்டாம்?* தாழ்வு மனப்பான்மை உங்களை குறைந்த மதிப்பிற்கு உட்படுத்த அனுமதிக்காதீர்கள். * நீங்கள் தனித்துவமாகப் படைக்கப்பட்டவர்கள், கர்த்தருக்குப் பிரியமானவர்கள், அவருடைய மகத்தான திட்டத்தின் ஒரு பகுதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.* கிறிஸ்து உங்களுக்குள் இருந்தால், உங்கள் சொந்த கனவுகள் மற்றும் சிந்தனைகளுக்கும் அப்பால் நீங்கள் அதிகம் சாதிக்க முடியும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என்னை உமது ராஜ்யத்தின் ஒரு பகுதியாக ஆக்கியதற்கு நன்றி. உமது வழிகளில் அச்சமின்றி, உண்மையோடு, உறுதியுடன் இருக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.