← செய்திகளுக்குத் திரும்பு
கடவுள் உங்களுக்கு இரட்டிப்பாகத் திரும்பக் கொடுப்பார்.
படத்தைப் பதிவிறக்கு

கடவுள் உங்களுக்கு இரட்டிப்பாகத் திரும்பக் கொடுப்பார்.

“ஞாயிறு, 1 ஜனவரி 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:இரட்டிப்பான நன்மையைத் தருவேன் சகரியா 9:12 கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, நீங்கள் ஒரு புதிய ஆண்டைத் தொடங்கும் இந்நேரத்தில், கடவுள் உங்களுக்கு இரண்டு மடங்கு மறுசீரமைப்பை வழங்க வேண்டும் என்று, வாழ்த்துகிறேன். * முந்தைய ஆண்டு துக்கம், துன்பம் மற்றும் இழப்புகள் நிறைந்ததாக இருந்திருக்கலாம்.* இதே சூழ்நிலையில் புதிய வருடத்தை தாக்குப் பிடிக்க நீங்கள் பயப்படலாம். * கவலைப்படாதீர்கள்.* பயப்படாதீர்கள். கடவுளை நம்புங்கள்.* உங்கள் வாழ்க்கை, சட்ட உரிமைகள், தனிப்பட்ட அதிகாரம் மற்றும் வளங்களின் மீதான கட்டுப்பாட்டை கடவுளின் ஆளுகைக்கு ஒப்புகொடுங்கள்.* உங்கள் எல்லா பிரச்சனைகள் மற்றும் போராட்டங்களையும் ஆண்டவரிடம் சமர்ப்பித்து விடுங்கள்.* கண்டிப்பாக ஒரு வித்தியாசத்தைக் காண்பீர்கள். * யோசேப்பு கர்த்தருக்குத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்து, தெய்வீக நற்பண்புகளையும் மதிப்புகளையும் பின்பற்றுவதில் உறுதியாக இருந்தார். கானான் தேசம் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களுக்குள் பிரிக்கப்பட்டபோது, யோசேப்பு இரண்டு பங்குகளைப் பெற்றார். * அவமானத்தின் மத்தியிலும், அன்னாள் பயபக்தியுடன் இருந்தபடியால், கர்த்தருக்கு பலி செலுத்தும் போதெல்லாம், இரட்டிப்புப் பங்கைக் பெற்றாள். * எலிசா தீர்க்கதரிசி, தன்னைத் தாழ்த்தி, தன் எஜமானான எலியாவுக்குப் பணிவிடை செய்வதிலும், அவரை பின்பற்றுவதிலும் உறுதியாயிருந்தார். ஆகவே கடவுளுடைய ஆவியை இரட்டிப்பாக பெற்றார். * யோபு தன்னுடைய பேரிழப்புகளின் மத்தியிலும் கடவுளை மறுதலிக்கவில்லை. அவர் கடவுளுடன் நெருக்கமாக இருந்து, அவருக்குக் கீழ்ப்படிந்தார். ஆகவே, கடவுள் யோபின் ஆரோக்கியத்தையும் குடும்பத்தையும் மீட்டெடுத்தபோது, அவரிடம் இரண்டு மடங்கு செல்வம் இருந்தது. * இஸ்ரவேலர்கள் கடவுளின் கட்டளைகளைப் பின்பற்றியபோது ஆறாம் நாளில் மன்னாவை இரண்டு மடங்கு பெற்றனர். * அவமானத்தின் மத்தியிலும் கடவுளைப் துதிக்கிறவர்களுக்கு தேசத்தில் இரட்டிப்புப் பங்கையும், நித்திய மகிழ்ச்சியையும் ஆண்டவர் வாக்கு பண்ணியிருக்கிறார் . * அதேபோல், உங்களுக்கும் இந்த ஆண்டு தேவன் செய்வார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நான் என்னையும், எனக்குரிய அனைத்தையும், உமது அதிகாரத்தின் கீழ் சமர்ப்பிக்கிறேன். எனது பிரச்சனைகளையும் சிரமங்களையும் உமது கவனிப்பில் இருக்க ஒப்படைக்கிறேன். தயவு செய்து எனது ஆசீர்வாதங்களை இரட்டிப்பாக மீட்டுத் தாரும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

ஞாயிறு, 1 ஜனவரி 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:இரட்டிப்பான நன்மையைத் தருவேன் சகரியா 9:12 கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, நீங்கள் ஒரு புதிய ஆண்டைத் தொடங்கும் இந்நேரத்தில், கடவுள் உங்களுக்கு இரண்டு மடங்கு மறுசீரமைப்பை வழங்க வேண்டும் என்று, வாழ்த்துகிறேன். * முந்தைய ஆண்டு துக்கம், துன்பம் மற்றும் இழப்புகள் நிறைந்ததாக இருந்திருக்கலாம்.* இதே சூழ்நிலையில் புதிய வருடத்தை தாக்குப் பிடிக்க நீங்கள் பயப்படலாம். * கவலைப்படாதீர்கள்.* பயப்படாதீர்கள். கடவுளை நம்புங்கள்.* உங்கள் வாழ்க்கை, சட்ட உரிமைகள், தனிப்பட்ட அதிகாரம் மற்றும் வளங்களின் மீதான கட்டுப்பாட்டை கடவுளின் ஆளுகைக்கு ஒப்புகொடுங்கள்.* உங்கள் எல்லா பிரச்சனைகள் மற்றும் போராட்டங்களையும் ஆண்டவரிடம் சமர்ப்பித்து விடுங்கள்.* கண்டிப்பாக ஒரு வித்தியாசத்தைக் காண்பீர்கள். * யோசேப்பு கர்த்தருக்குத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்து, தெய்வீக நற்பண்புகளையும் மதிப்புகளையும் பின்பற்றுவதில் உறுதியாக இருந்தார். கானான் தேசம் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களுக்குள் பிரிக்கப்பட்டபோது, யோசேப்பு இரண்டு பங்குகளைப் பெற்றார். * அவமானத்தின் மத்தியிலும், அன்னாள் பயபக்தியுடன் இருந்தபடியால், கர்த்தருக்கு பலி செலுத்தும் போதெல்லாம், இரட்டிப்புப் பங்கைக் பெற்றாள். * எலிசா தீர்க்கதரிசி, தன்னைத் தாழ்த்தி, தன் எஜமானான எலியாவுக்குப் பணிவிடை செய்வதிலும், அவரை பின்பற்றுவதிலும் உறுதியாயிருந்தார். ஆகவே கடவுளுடைய ஆவியை இரட்டிப்பாக பெற்றார். * யோபு தன்னுடைய பேரிழப்புகளின் மத்தியிலும் கடவுளை மறுதலிக்கவில்லை. அவர் கடவுளுடன் நெருக்கமாக இருந்து, அவருக்குக் கீழ்ப்படிந்தார். ஆகவே, கடவுள் யோபின் ஆரோக்கியத்தையும் குடும்பத்தையும் மீட்டெடுத்தபோது, அவரிடம் இரண்டு மடங்கு செல்வம் இருந்தது. * இஸ்ரவேலர்கள் கடவுளின் கட்டளைகளைப் பின்பற்றியபோது ஆறாம் நாளில் மன்னாவை இரண்டு மடங்கு பெற்றனர். * அவமானத்தின் மத்தியிலும் கடவுளைப் துதிக்கிறவர்களுக்கு தேசத்தில் இரட்டிப்புப் பங்கையும், நித்திய மகிழ்ச்சியையும் ஆண்டவர் வாக்கு பண்ணியிருக்கிறார் . * அதேபோல், உங்களுக்கும் இந்த ஆண்டு தேவன் செய்வார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நான் என்னையும், எனக்குரிய அனைத்தையும், உமது அதிகாரத்தின் கீழ் சமர்ப்பிக்கிறேன். எனது பிரச்சனைகளையும் சிரமங்களையும் உமது கவனிப்பில் இருக்க ஒப்படைக்கிறேன். தயவு செய்து எனது ஆசீர்வாதங்களை இரட்டிப்பாக மீட்டுத் தாரும். ஆமென்.