← செய்திகளுக்குத் திரும்பு
உங்கள் முன் ஒருவரும் எதிர்த்து நிற்பதில்லை.
படத்தைப் பதிவிறக்கு

உங்கள் முன் ஒருவரும் எதிர்த்து நிற்பதில்லை.

“உபாகமம் 11:25. * இந்த வாக்குறுதி இஸ்ரவேலர்கள் கர்த்தருக்குக் கீழ்ப்படிதல் என்னும் நிபந்தனையின் பேரில் கொடுக்கப்பட்ட வாக்குறுதியாகும். * உங்கள் முழு மனதோடும் இருதயத்தோடும் கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறீர்களா?* கர்த்தரின் அறிவுரைகளுக்கு நீங்கள் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்? * வெற்றியை அடைவதற்கும் செல்வத்தைக் குவிப்பதற்கும் நெறிமுறையற்ற வழிமுறைகளைப் பின்பற்றுவதை இன்றைய சமூகம் பரவலாக ஏற்றுக் கொண்டுள்ளது.* இருப்பினும், கர்த்தரின் பிள்ளைகள் தங்கள் தெய்வீக நற்பண்புகளை விட்டுக்கொடுப்பதற்கு இதை ஒரு காரணமாக சொல்ல முடியாது. * தைரியமாக இருங்கள்; மேலும்,மற்றவர்களுக்கு முன்பாக உங்கள் நல்ல சாட்சியைக் காத்துக்கொள்ளுங்கள்.* உலகத்தின் பார்வைக்கும், ஆசைகளுக்கும் முன்னுரிமைக் கொடுப்பதைவிட கர்த்தரின் வார்த்தைக்கு முன்னுரிமை கொடுங்கள். * எல்லா விஷயங்களிலும் அவருக்குக் கீழ்ப்படியுங்கள்.* அப்போது, உங்கள் எதிரிகள் அனைவருக்கும் எதிராக உங்கள் பாதுகாப்பை கர்த்தர் பலப்படுத்துவதை நீங்கள் காண்பீர்கள்.* நீங்கள் வலுப்பெறும் போது யாரும் உங்களை எதிர்த்து நிற்க முடியாது. ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் உமக்குக் கீழ்ப்படிய எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

வியாழன், 16 பிப்ரவரி 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உங்கள் முன் ஒருவரும் எதிர்த்து நிற்பதில்லை. உபாகமம் 11:25. * இந்த வாக்குறுதி இஸ்ரவேலர்கள் கர்த்தருக்குக் கீழ்ப்படிதல் என்னும் நிபந்தனையின் பேரில் கொடுக்கப்பட்ட வாக்குறுதியாகும். * உங்கள் முழு மனதோடும் இருதயத்தோடும் கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறீர்களா?* கர்த்தரின் அறிவுரைகளுக்கு நீங்கள் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்? * வெற்றியை அடைவதற்கும் செல்வத்தைக் குவிப்பதற்கும் நெறிமுறையற்ற வழிமுறைகளைப் பின்பற்றுவதை இன்றைய சமூகம் பரவலாக ஏற்றுக் கொண்டுள்ளது.* இருப்பினும், கர்த்தரின் பிள்ளைகள் தங்கள் தெய்வீக நற்பண்புகளை விட்டுக்கொடுப்பதற்கு இதை ஒரு காரணமாக சொல்ல முடியாது. * தைரியமாக இருங்கள்; மேலும்,மற்றவர்களுக்கு முன்பாக உங்கள் நல்ல சாட்சியைக் காத்துக்கொள்ளுங்கள்.* உலகத்தின் பார்வைக்கும், ஆசைகளுக்கும் முன்னுரிமைக் கொடுப்பதைவிட கர்த்தரின் வார்த்தைக்கு முன்னுரிமை கொடுங்கள். * எல்லா விஷயங்களிலும் அவருக்குக் கீழ்ப்படியுங்கள்.* அப்போது, உங்கள் எதிரிகள் அனைவருக்கும் எதிராக உங்கள் பாதுகாப்பை கர்த்தர் பலப்படுத்துவதை நீங்கள் காண்பீர்கள்.* நீங்கள் வலுப்பெறும் போது யாரும் உங்களை எதிர்த்து நிற்க முடியாது. ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் உமக்குக் கீழ்ப்படிய எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.