← செய்திகளுக்குத் திரும்பு
கோபம் கொண்டாலும் பாவம் செய்யாதிருங்கள்.
படத்தைப் பதிவிறக்கு

கோபம் கொண்டாலும் பாவம் செய்யாதிருங்கள்.

“புதன்கிழமை, 20 மார்ச் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீங்கள் கோபங்கொண்டாலும், பாவஞ்செய்யாதிருங்கள். சங்கீதம் 4:4 அன்பு தேவ பிள்ளையே,நீங்கள் இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற்றப் பிறகு உங்கள் வாழ்க்கை எப்படி மாறியிருக்கிறது? உங்கள் குணாதிசயங்களில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏதேனும் நீங்கள் கவனித்தீர்களா?பரிசுத்த வேதாகமம் "அந்தந்த மரம் அதனதன் கனியினால் அறியப்படும்", என்று கூறுகிறது. உங்களோடிருக்கிறவர்கள் உங்களில் காணப்படும் நேர்மறையான மாற்றங்களைக் குறித்துச் சாட்சியளிக்க முடியுமா? உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த நீங்கள் இன்னும் போராடுகிறீர்களா?உங்கள் பொறுமையை இழந்து தவறான வார்த்தைகளைப் பயன்படுத்துவதோ, அல்லது மோதலிலும், பகைமையிலும் ஈடுபடுவதோ ஒரு பாவமாகக் கருதப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் கோபம் உங்களைக் கட்டுப்படுத்த விடாதீர்கள். நீங்கள் கோபத்துடன் போராடினால், உங்கள் பலவீனத்தைத் தேவனிடம் ஒப்படைத்து, அவர் உங்களை ஆட்கொள்ள இடங்கொடுங்கள். நீங்கள் எல்லா அடிமைத்தனங்களிலிருந்தும் கட்டுகளிலிருந்தும் விடுதலைபெறவே கிறிஸ்து உங்களுக்காக மரித்தார். அவர் உங்களைத் தெய்வீக சுபாவம் உடையவராய் மாற்றுவார். தேவ சமாதானத்தோடிருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் கோபம் மாற எனக்கு உதவிச் செய்யும். நான் சமாதானமுள்ள மனிதனாயிருக்கட்டும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

புதன்கிழமை, 20 மார்ச் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீங்கள் கோபங்கொண்டாலும், பாவஞ்செய்யாதிருங்கள். சங்கீதம் 4:4 அன்பு தேவ பிள்ளையே,நீங்கள் இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற்றப் பிறகு உங்கள் வாழ்க்கை எப்படி மாறியிருக்கிறது? உங்கள் குணாதிசயங்களில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏதேனும் நீங்கள் கவனித்தீர்களா?பரிசுத்த வேதாகமம் “அந்தந்த மரம் அதனதன் கனியினால் அறியப்படும்”, என்று கூறுகிறது. உங்களோடிருக்கிறவர்கள் உங்களில் காணப்படும் நேர்மறையான மாற்றங்களைக் குறித்துச் சாட்சியளிக்க முடியுமா? உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த நீங்கள் இன்னும் போராடுகிறீர்களா?உங்கள் பொறுமையை இழந்து தவறான வார்த்தைகளைப் பயன்படுத்துவதோ, அல்லது மோதலிலும், பகைமையிலும் ஈடுபடுவதோ ஒரு பாவமாகக் கருதப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் கோபம் உங்களைக் கட்டுப்படுத்த விடாதீர்கள். நீங்கள் கோபத்துடன் போராடினால், உங்கள் பலவீனத்தைத் தேவனிடம் ஒப்படைத்து, அவர் உங்களை ஆட்கொள்ள இடங்கொடுங்கள். நீங்கள் எல்லா அடிமைத்தனங்களிலிருந்தும் கட்டுகளிலிருந்தும் விடுதலைபெறவே கிறிஸ்து உங்களுக்காக மரித்தார். அவர் உங்களைத் தெய்வீக சுபாவம் உடையவராய் மாற்றுவார். தேவ சமாதானத்தோடிருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் கோபம் மாற எனக்கு உதவிச் செய்யும். நான் சமாதானமுள்ள மனிதனாயிருக்கட்டும். ஆமென்.