வெள்ளிக்கிழமை, 18 அக்டோபர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன். பிலிப்பியர் 3:8 யூதப் பழக்கவழக்கங்களையும் சட்டங்களையும் பின்பற்றிய ஒரு கற்றறிந்த மற்றும் மரியாதைக்குரிய மனிதரான பவுல், கிறிஸ்துவின் விசுவாசிகளைத் துன்புறுத்தினார். ஆனால், தேவனைச் சந்தித்த பிறகு அவரது வாழ்க்கை முற்றிலும் மாறியது. அவர், கிருபையாய்த் தனது தவறுகளை மன்னித்துத் தன் வாழ்வை மாற்றியமைத்த கிறிஸ்துவைப் பற்றிப் பிரசங்கிக்கத் தொடங்கினார். அவருடைய வாழ்க்கையை மாற்றிய அனுபவமானது, இயேசுவின் எல்லையற்ற மதிப்பையும் அவருடைய அன்பையும் அவருக்கு உணர்த்தியது. கிறிஸ்து மற்றும் அவருடைய அன்பின் மதிப்போடு ஒப்பிடும்போது இந்த உலகில் உள்ள எதுவும் (கல்வி, செல்வம், செல்வாக்கு, அதிகாரம் போன்றவை) மதிப்பற்றது என்பதைப் பவுல் புரிந்துகொண்டார். அவர் தனது அனுபவங்கள், அறிவு மற்றும் புத்தி அனைத்தையும் குப்பையாகக் கருதினார். கிறிஸ்துவைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ளவும், அவருடன் இருக்கவும் அவர் ஏங்கினார். நம் வாழ்வின் மறுரூபம் இயேசு கிறிஸ்துவினால் உண்டாயிற்றா?இயேசு கிறிஸ்து நம் வாழ்வில் உள்ள மற்ற எல்லாவற்றையும் விட மதிப்புமிக்கவரா? ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் மேலுள்ள உமது அன்பின் விலைமதிப்பற்ற தன்மையை நினைவில் கொள்ள எனக்கு உதவி செய்யும். ஆமென்.
நஷ்டமென்று எண்ணுங்கள்
“வெள்ளிக்கிழமை, 18 அக்டோபர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன். பிலிப்பியர் 3:8 யூதப் பழக்கவழக்கங்களையும் சட்டங்களையும் பின்பற்றிய ஒரு கற்றறிந்த மற்றும் மரியாதைக்குரிய மனிதரான பவுல், கிறிஸ்துவின் விசுவாசிகளைத் துன்புறுத்தினார். ஆனால், தேவனைச் சந்தித்த பிறகு அவரது வாழ்க்கை முற்றிலும் மாறியது. அவர், கிருபையாய்த் தனது தவறுகளை மன்னித்துத் தன் வாழ்வை மாற்றியமைத்த கிறிஸ்துவைப் பற்றிப் பிரசங்கிக்கத் தொடங்கினார். அவருடைய வாழ்க்கையை மாற்றிய அனுபவமானது, இயேசுவின் எல்லையற்ற மதிப்பையும் அவருடைய அன்பையும் அவருக்கு உணர்த்தியது. கிறிஸ்து மற்றும் அவருடைய அன்பின் மதிப்போடு ஒப்பிடும்போது இந்த உலகில் உள்ள எதுவும் (கல்வி, செல்வம், செல்வாக்கு, அதிகாரம் போன்றவை) மதிப்பற்றது என்பதைப் பவுல் புரிந்துகொண்டார். அவர் தனது அனுபவங்கள், அறிவு மற்றும் புத்தி அனைத்தையும் குப்பையாகக் கருதினார். கிறிஸ்துவைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ளவும், அவருடன் இருக்கவும் அவர் ஏங்கினார். நம் வாழ்வின் மறுரூபம் இயேசு கிறிஸ்துவினால் உண்டாயிற்றா?இயேசு கிறிஸ்து நம் வாழ்வில் உள்ள மற்ற எல்லாவற்றையும் விட மதிப்புமிக்கவரா? ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் மேலுள்ள உமது அன்பின் விலைமதிப்பற்ற தன்மையை நினைவில் கொள்ள எனக்கு உதவி செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

