← செய்திகளுக்குத் திரும்பு
பிறரை நியாயந்தீர்ப்பதை நிறுத்துங்கள்
படத்தைப் பதிவிறக்கு

பிறரை நியாயந்தீர்ப்பதை நிறுத்துங்கள்

“சனிக்கிழமை, 7 டிசம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:இப்படியிருக்க, நாம் இனிமேல் ஒருவரையொருவர் குற்றவாளிகளென்று தீர்க்காதிருப்போமாக. ரோமர் 14:13 * மற்றவர்களை விரைவாக மதிப்பிடுகிறீர்களா?* மனிதர்களின் தவறுகளைப் பற்றி நீங்கள் அடிக்கடி விமர்சிக்கிறீர்களா? * பெரும்பாலான நேரங்களில், கண்டனமும் தீர்ப்பும் ஒரு நபரின் ஆவிக்குச் சேதம் விளைவித்து, எதிர்பாராத தீங்கை விளைவிக்கும்.* விமர்சனம் செய்யும் பழக்கத்தை வளர விடுவது, நம் இருதயத்தில் பெருமைக்கு வழிவகுக்கும்.* இந்த பெருமை, இறுதியில் நம் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். * மற்றவர்களை நியாயந்தீர்ப்பதையோ, கண்டனம் செய்வதையோ தவிர்த்திடுவோம்.* மாறாக, நாம் நேர்மையான முன்மாதிரியாய் இருக்க முயற்சி செய்ய வேண்டும். * மற்றவர்களின் நல்லது கெட்டது இரண்டையும் உற்று நோக்கி, அவர்களின் நேர்மையான குணங்களுக்காக அவர்களைப் பாராட்டக் கற்றுக்கொள்ளுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, மற்றவர்களை நியாயந்தீர்ப்பதற்குப் பதிலாக அவர்களை ஊக்குவிக்க எனக்கு கிருபை தாரும். என் வாழ்க்கை மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கட்டும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

சனிக்கிழமை, 7 டிசம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:இப்படியிருக்க, நாம் இனிமேல் ஒருவரையொருவர் குற்றவாளிகளென்று தீர்க்காதிருப்போமாக. ரோமர் 14:13 * மற்றவர்களை விரைவாக மதிப்பிடுகிறீர்களா?* மனிதர்களின் தவறுகளைப் பற்றி நீங்கள் அடிக்கடி விமர்சிக்கிறீர்களா? * பெரும்பாலான நேரங்களில், கண்டனமும் தீர்ப்பும் ஒரு நபரின் ஆவிக்குச் சேதம் விளைவித்து, எதிர்பாராத தீங்கை விளைவிக்கும்.* விமர்சனம் செய்யும் பழக்கத்தை வளர விடுவது, நம் இருதயத்தில் பெருமைக்கு வழிவகுக்கும்.* இந்த பெருமை, இறுதியில் நம் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். * மற்றவர்களை நியாயந்தீர்ப்பதையோ, கண்டனம் செய்வதையோ தவிர்த்திடுவோம்.* மாறாக, நாம் நேர்மையான முன்மாதிரியாய் இருக்க முயற்சி செய்ய வேண்டும். * மற்றவர்களின் நல்லது கெட்டது இரண்டையும் உற்று நோக்கி, அவர்களின் நேர்மையான குணங்களுக்காக அவர்களைப் பாராட்டக் கற்றுக்கொள்ளுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, மற்றவர்களை நியாயந்தீர்ப்பதற்குப் பதிலாக அவர்களை ஊக்குவிக்க எனக்கு கிருபை தாரும். என் வாழ்க்கை மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கட்டும். ஆமென்.