வியாழன், 17 அக்டோபர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உன் செய்கைகளைக் கர்த்தருக்கு ஒப்புவி; அப்பொழுது உன் யோசனைகள் உறுதிப்படும். நீதிமொழிகள் 16:3 உங்கள் திட்டங்கள் தோல்வியடைந்து வருவதால் நீங்கள் விரக்தியடைந்திருக்கிறீர்களா? உங்கள் தொழில் அல்லது வேலையில் மீண்டும் மீண்டும் தோல்விகள் ஏற்படுவதால் நம்பிக்கையை இழக்கிறீர்களா? மனம் தளராதீர்கள். இன்னும் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. உங்கள் சொந்த்த் திறன்கள் அல்லது மனித ஆதரவை மட்டுமே நம்புவது தோல்விக்கு வழிவகுக்கும். ஆனால், நீங்கள் தேவனை நம்பி, அவருடைய வல்லமையைச் சார்ந்துகொண்டால், ஒருபொழுதும் தோல்வியடைய மாட்டீர்கள். உங்களிடம் அழகான திட்டங்கள் இருக்கலாம். ஆனால் அவை தேவ திட்டத்துடனும், நோக்கத்துடனும் ஒத்துப்போகவில்லை என்றால் உண்மையான வெற்றிக்கு உத்தரவாதம் இல்லை. ஆகையால், உங்கள் வழிகளைக் கர்த்தருக்கு ஒப்புவியுங்கள், அவர் உங்கள் பாதைகளை வழிநடத்தட்டும். அப்பொழுது நீங்கள் வெற்றியடைவீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என்னுடைய எல்லாத் திட்டங்களையும் உம்மிடம் ஒப்புக்கொடுக்கிறேன். உமது மகிமைக்காக நான் வெற்றிபெற எனக்கு உதவி செய்யும். ஆமென்.
உங்கள் செய்கைகளைக் கர்த்தருக்கு ஒப்புவியுங்கள்; அப்பொழுது...
“வியாழன், 17 அக்டோபர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உன் செய்கைகளைக் கர்த்தருக்கு ஒப்புவி; அப்பொழுது உன் யோசனைகள் உறுதிப்படும். நீதிமொழிகள் 16:3 உங்கள் திட்டங்கள் தோல்வியடைந்து வருவதால் நீங்கள் விரக்தியடைந்திருக்கிறீர்களா? உங்கள் தொழில் அல்லது வேலையில் மீண்டும் மீண்டும் தோல்விகள் ஏற்படுவதால் நம்பிக்கையை இழக்கிறீர்களா? மனம் தளராதீர்கள். இன்னும் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. உங்கள் சொந்த்த் திறன்கள் அல்லது மனித ஆதரவை மட்டுமே நம்புவது தோல்விக்கு வழிவகுக்கும். ஆனால், நீங்கள் தேவனை நம்பி, அவருடைய வல்லமையைச் சார்ந்துகொண்டால், ஒருபொழுதும் தோல்வியடைய மாட்டீர்கள். உங்களிடம் அழகான திட்டங்கள் இருக்கலாம். ஆனால் அவை தேவ திட்டத்துடனும், நோக்கத்துடனும் ஒத்துப்போகவில்லை என்றால் உண்மையான வெற்றிக்கு உத்தரவாதம் இல்லை. ஆகையால், உங்கள் வழிகளைக் கர்த்தருக்கு ஒப்புவியுங்கள், அவர் உங்கள் பாதைகளை வழிநடத்தட்டும். அப்பொழுது நீங்கள் வெற்றியடைவீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என்னுடைய எல்லாத் திட்டங்களையும் உம்மிடம் ஒப்புக்கொடுக்கிறேன். உமது மகிமைக்காக நான் வெற்றிபெற எனக்கு உதவி செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

