← செய்திகளுக்குத் திரும்பு
கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள்.
படத்தைப் பதிவிறக்கு

கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள்.

“சங்கீதம் 34:8 - நீங்கள் தேவனை நெருக்கமாய் அறிவீர்களா?- நீங்கள் அவரது அன்பான நற்குணத்தையும் விசுவாசத்தையும் அனுபவித்திருக்கிறீர்களா?- நாம் அவரை நம்புகிறோமா இல்லையா என்பதற்கு அப்பாற்பட்டு தேவனின் சுபாவம் மாறாததும், நித்தியமானதும், எப்பொழுதும் நல்லதாகவே இருக்கிறது.- அவர் தமது குணாதியசத்தை அனுபவிக்க வருமாறு அனைவரையும் அழைக்கிறார்.- ஒரு உணவைச் சுவைக்காமல், அது நல்லதா கெட்டதா என்று ஒருவர் சொல்ல முடியாது.- அதுபோலவே, தேவனின் நற்குணத்தை உண்மையாய்ப் புரிந்துகொள்ளத் திறந்த இருதயத்துடனும் மனதுடனும் அதனை நாம் அனுபவிக்க வேண்டும்.- அவருடன் நெருங்கிய உறவு இல்லாமல், அவருடைய நற்குணத்தின் ஆழத்தை நாம் முழுமையாய் ருசிக்க முடியாது. - அவர், பாதுகாப்பு, சமாதானம்,, வழிகாட்டுதல், மன்னிப்பு மற்றும் பலவற்றையும் தருகிறார்.- நீங்கள் இருக்கிறவண்ணமாய் அவரிடம் வாருங்கள்.- அவர் அன்பினால் நிறைந்தவர். உண்மையுள்ள இருதயத்துடன் தம்மிடம் வரும் எவரையும் அவர் புறக்கணிப்பதில்லை.- தேவனின் அன்பு நிபந்தனையற்றதும் எல்லையற்றதுமாயிருக்கிறது. அவர் உண்மையிலேயே நல்லவர். நாம் அவர்மீது நம்பிக்கை வைக்கும்போது, அவர் நமக்குத் தயவளிக்கிறார்.- அவருடைய நற்குணமும் அன்பும் நம்மைச் சூழ்ந்து, மகிழ்ச்சியினாலும் மனநிறைவினாலும் நம்மை நிரப்பும்.- எனவே, உங்கள் வாழ்க்கையில் உண்மையான மாறாத நன்மைக்கான ஆதாரத்தை நீங்கள் தேடிக்கொண்டிருப்பீர்களானால், தேவனைத் தவிர வேறு எதையும் பார்க்க வேண்டாம்.- கர்த்தர் எவ்வளவு நல்லவர் என்பதை நீங்களே ருசித்துப் பாருங்கள்! ஜெபம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே, உமது நற்குணத்தை ருசித்துப் பார்க்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

வெள்ளிக்கிழமை, 26 ஜனவரி 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள். சங்கீதம் 34:8 - நீங்கள் தேவனை நெருக்கமாய் அறிவீர்களா?- நீங்கள் அவரது அன்பான நற்குணத்தையும் விசுவாசத்தையும் அனுபவித்திருக்கிறீர்களா?- நாம் அவரை நம்புகிறோமா இல்லையா என்பதற்கு அப்பாற்பட்டு தேவனின் சுபாவம் மாறாததும், நித்தியமானதும், எப்பொழுதும் நல்லதாகவே இருக்கிறது.- அவர் தமது குணாதியசத்தை அனுபவிக்க வருமாறு அனைவரையும் அழைக்கிறார்.- ஒரு உணவைச் சுவைக்காமல், அது நல்லதா கெட்டதா என்று ஒருவர் சொல்ல முடியாது.- அதுபோலவே, தேவனின் நற்குணத்தை உண்மையாய்ப் புரிந்துகொள்ளத் திறந்த இருதயத்துடனும் மனதுடனும் அதனை நாம் அனுபவிக்க வேண்டும்.- அவருடன் நெருங்கிய உறவு இல்லாமல், அவருடைய நற்குணத்தின் ஆழத்தை நாம் முழுமையாய் ருசிக்க முடியாது. - அவர், பாதுகாப்பு, சமாதானம்,, வழிகாட்டுதல், மன்னிப்பு மற்றும் பலவற்றையும் தருகிறார்.- நீங்கள் இருக்கிறவண்ணமாய் அவரிடம் வாருங்கள்.- அவர் அன்பினால் நிறைந்தவர். உண்மையுள்ள இருதயத்துடன் தம்மிடம் வரும் எவரையும் அவர் புறக்கணிப்பதில்லை.- தேவனின் அன்பு நிபந்தனையற்றதும் எல்லையற்றதுமாயிருக்கிறது. அவர் உண்மையிலேயே நல்லவர். நாம் அவர்மீது நம்பிக்கை வைக்கும்போது, அவர் நமக்குத் தயவளிக்கிறார்.- அவருடைய நற்குணமும் அன்பும் நம்மைச் சூழ்ந்து, மகிழ்ச்சியினாலும் மனநிறைவினாலும் நம்மை நிரப்பும்.- எனவே, உங்கள் வாழ்க்கையில் உண்மையான மாறாத நன்மைக்கான ஆதாரத்தை நீங்கள் தேடிக்கொண்டிருப்பீர்களானால், தேவனைத் தவிர வேறு எதையும் பார்க்க வேண்டாம்.- கர்த்தர் எவ்வளவு நல்லவர் என்பதை நீங்களே ருசித்துப் பாருங்கள்! ஜெபம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே, உமது நற்குணத்தை ருசித்துப் பார்க்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.