← செய்திகளுக்குத் திரும்பு
நீங்கள் இயேசுவை நம்பினால் அனைத்தும் நன்மைக்காகவே நடக்கும்.
படத்தைப் பதிவிறக்கு

நீங்கள் இயேசுவை நம்பினால் அனைத்தும் நன்மைக்காகவே நடக்கும்.

“வெள்ளிக்கிழமை, 29 செப்டம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். ரோமர் 8:28 பவுலும் சீலாவும் இயேசுவைப் பற்றி பிரசங்கித்ததற்காக பிடிக்கப்பட்டு பிலிப்புப்பட்டணச் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை அநேக அடி அடித்தபின்பு, உட்காவலறையிலே அடைத்து, அவர்கள் கால்களைத் தொழுமரத்தில் மாட்டிவைத்தனர். இந்த தொடர் நிகழ்வுகள் பவுலை புண்படுத்தியிருக்கலாம். இருப்பினும், தனது சிறை அனுபவத்திலிருந்து கர்த்தர் இன்னும் ஏதாவது நல்லதைச் செய்வார் என்று அவர் உறுதியாக நம்பியிருந்தார். சிறையில், நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப் பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். சடிதியிலே சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையும்படியாக பூமி மிகவும் அதிர்ந்தது; உடனே கதவுகளெல்லாம் திறவுண்டது; எல்லாருடைய கட்டுகளும் கழன்றுபோயிற்று. சிறைச்சாலைக்காரன் நித்திரைதெளிந்து, சிறைச்சாலையின் கதவுகள் திறந்திருக்கிறதைக் கண்டு, கட்டுண்டவர்கள் ஓடிப்போனார்களென்று எண்ணி பயந்தான். ஆனால் பவுல் அவனிடம், "நீ உனக்குக் கெடுதி ஒன்றுஞ் செய்துகொள்ளாதே; நாங்கள் எல்லாரும் இங்கேதான் இருக்கிறோம்" என்றான். இதைக் கேட்ட சிறைச்சாலைக்காரன் ஓடி, நடுநடுங்கி, பவுலுக்கும் சீலாவுக்கும் முன்பாக விழுந்தான். அவன் அவர்களிடம், "ஆண்டவன்மாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும்?" என்று கேட்டான். அன்று இரவு, அவனும் அவனுடையவர்கள் அனைவரும் ஞானஸ்நானம் பெற்றார்கள். கர்த்தர் எப்பொழுதும் கிரியைச் செய்துக் கொண்டிருக்கிறார் என்பதையும், மிகவும் கடினமான சூழ்நிலைகளிலும் மக்களை தன்னிடம் கொண்டு வர அவரால் முடியும் என்பதையும் இந்த சம்பவம் நமக்கு நினைவூட்டுகிறது. # நீங்கள் கடினமான காலங்களில் செல்கிறீர்களா?# நம்பிக்கை இழக்க வேண்டாம்.# கர்த்தர் உங்கள் வாழ்வில் கிரியைச் செய்கிறார்.# நம்பிக்கையுடன் இருங்கள், மேலும் இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற உறுதியுடன் இருங்கள்.# உங்கள் வாழ்க்கையில் எல்லாமே நல்லபடியாக முடிவடையும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நான் நம்பிக்கையுடன் இருக்கவும், உம்மில் என் விசுவாச வாழ்க்கையைத் தொடரவும் எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

வெள்ளிக்கிழமை, 29 செப்டம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். ரோமர் 8:28 பவுலும் சீலாவும் இயேசுவைப் பற்றி பிரசங்கித்ததற்காக பிடிக்கப்பட்டு பிலிப்புப்பட்டணச் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை அநேக அடி அடித்தபின்பு, உட்காவலறையிலே அடைத்து, அவர்கள் கால்களைத் தொழுமரத்தில் மாட்டிவைத்தனர். இந்த தொடர் நிகழ்வுகள் பவுலை புண்படுத்தியிருக்கலாம். இருப்பினும், தனது சிறை அனுபவத்திலிருந்து கர்த்தர் இன்னும் ஏதாவது நல்லதைச் செய்வார் என்று அவர் உறுதியாக நம்பியிருந்தார். சிறையில், நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப் பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். சடிதியிலே சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையும்படியாக பூமி மிகவும் அதிர்ந்தது; உடனே கதவுகளெல்லாம் திறவுண்டது; எல்லாருடைய கட்டுகளும் கழன்றுபோயிற்று. சிறைச்சாலைக்காரன் நித்திரைதெளிந்து, சிறைச்சாலையின் கதவுகள் திறந்திருக்கிறதைக் கண்டு, கட்டுண்டவர்கள் ஓடிப்போனார்களென்று எண்ணி பயந்தான். ஆனால் பவுல் அவனிடம், “நீ உனக்குக் கெடுதி ஒன்றுஞ் செய்துகொள்ளாதே; நாங்கள் எல்லாரும் இங்கேதான் இருக்கிறோம்” என்றான். இதைக் கேட்ட சிறைச்சாலைக்காரன் ஓடி, நடுநடுங்கி, பவுலுக்கும் சீலாவுக்கும் முன்பாக விழுந்தான். அவன் அவர்களிடம், “ஆண்டவன்மாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான். அன்று இரவு, அவனும் அவனுடையவர்கள் அனைவரும் ஞானஸ்நானம் பெற்றார்கள். கர்த்தர் எப்பொழுதும் கிரியைச் செய்துக் கொண்டிருக்கிறார் என்பதையும், மிகவும் கடினமான சூழ்நிலைகளிலும் மக்களை தன்னிடம் கொண்டு வர அவரால் முடியும் என்பதையும் இந்த சம்பவம் நமக்கு நினைவூட்டுகிறது. # நீங்கள் கடினமான காலங்களில் செல்கிறீர்களா?# நம்பிக்கை இழக்க வேண்டாம்.# கர்த்தர் உங்கள் வாழ்வில் கிரியைச் செய்கிறார்.# நம்பிக்கையுடன் இருங்கள், மேலும் இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற உறுதியுடன் இருங்கள்.# உங்கள் வாழ்க்கையில் எல்லாமே நல்லபடியாக முடிவடையும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நான் நம்பிக்கையுடன் இருக்கவும், உம்மில் என் விசுவாச வாழ்க்கையைத் தொடரவும் எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.