← Back to Devotionals

மனுஷனுடைய இருதயம் அவனுடைய வழியை யோசிக்கும்; அவனுடைய நடைகளை...

“நீதிமொழிகள் 16:9 உத்தி என்பது நீண்ட கால இலக்கை அடைவதற்காக, கவனமாக திட்டமிடுவதாகும். உத்தியுடன் சிந்திக்கிறது என்பது பெரிய பரந்த நோக்கத்தோடு நீண்ட கால இலக்குகளை அடைவதற்கான திட்டங்களை உருவாக்குவது. வணிகம், தனிப்பட்ட வளர்ச்சி மேலும் ஊழியம் போன்ற வாழ்க்கையின் அனைத்து பகுதிகளிலும் உத்தியோடுக் கூடிய சிந்தனை அவசியம். இது சரியான முடிவுகளை எடுக்கவும், நமது செல்வங்களை மிகவும் திறம்பட உபயோகிக்கவும், நமது இலக்குகளை மிகவும் திறமையாக அடையவும், நிறைவான வாழ்க்கையை வாழவும் உதவிச் செய்யும். சிந்திக்கவும் திட்டமிடவும் கர்த்தர் நமக்கு கிருபையைக் கொடுத்திருக்கிறார். இருப்பினும், கர்த்தருடைய ஆலோசனையையும் வழிகாட்டுதலையும் நாம் சார்ந்து வாழ்ந்து, நமது திட்டங்களை கர்த்தருடைய திட்டங்களுடன் ஒத்துப்போகும்போது வெற்றிக் கிடைக்கிறது. வேதாகமத்தில், யுத்தம், நிர்வாகம், ஆகிய இரண்டிலும் முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு முன் தலைவர்கள் கர்த்தரின் ஆலோசனையை நாடுவதைப் பற்றி பல இடங்களில் படிக்கிறோம். தாவீது ராஜா முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு முன் கர்த்தரின் வழிகாட்டுதலை தவறாமல் நாடுவதைப் பற்றி வேதாகமம் கூறுகிறது, அதுவே அவருடைய வெற்றிக்கான ரகசியம். # எப்பொழுதும் அவசரப்பட்டு முடிவெடுக்கும் நபராக இருக்காதீர்கள்.# சூழ்நிலையை அலசி ஆராய்ந்து, நன்மைத் தீமைகளைப் புரிந்துகொண்டு, முடிவெடுப்பதற்கு முன் கர்த்தரின் ஆலோசனையை நாடும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.# அப்படியானால் நீங்கள் எந்த செயலிலும் வெற்றி பெறுவீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நான் செய்யும் எல்லாவற்றிலும் ஒரு உத்தி நிறைந்த நபராக இருக்கவும், என் வாழ்க்கையின் எல்லா பகுதிகளிலும் உமது திட்டங்கள் மற்றும் எண்ணங்களுடன் என்னை இணைத்துக் கொள்ளவும் எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”

Word of Hope

Today's Reflection

ஞாயிற்றுக்கிழமை, 22 அக்டோபர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:மனுஷனுடைய இருதயம் அவனுடைய வழியை யோசிக்கும்; அவனுடைய நடைகளை உறுதிப்படுத்துகிறவரோ கர்த்தர். நீதிமொழிகள் 16:9 உத்தி என்பது நீண்ட கால இலக்கை அடைவதற்காக, கவனமாக திட்டமிடுவதாகும். உத்தியுடன் சிந்திக்கிறது என்பது பெரிய பரந்த நோக்கத்தோடு நீண்ட கால இலக்குகளை அடைவதற்கான திட்டங்களை உருவாக்குவது. வணிகம், தனிப்பட்ட வளர்ச்சி மேலும் ஊழியம் போன்ற வாழ்க்கையின் அனைத்து பகுதிகளிலும் உத்தியோடுக் கூடிய சிந்தனை அவசியம். இது சரியான முடிவுகளை எடுக்கவும், நமது செல்வங்களை மிகவும் திறம்பட உபயோகிக்கவும், நமது இலக்குகளை மிகவும் திறமையாக அடையவும், நிறைவான வாழ்க்கையை வாழவும் உதவிச் செய்யும். சிந்திக்கவும் திட்டமிடவும் கர்த்தர் நமக்கு கிருபையைக் கொடுத்திருக்கிறார். இருப்பினும், கர்த்தருடைய ஆலோசனையையும் வழிகாட்டுதலையும் நாம் சார்ந்து வாழ்ந்து, நமது திட்டங்களை கர்த்தருடைய திட்டங்களுடன் ஒத்துப்போகும்போது வெற்றிக் கிடைக்கிறது. வேதாகமத்தில், யுத்தம், நிர்வாகம், ஆகிய இரண்டிலும் முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு முன் தலைவர்கள் கர்த்தரின் ஆலோசனையை நாடுவதைப் பற்றி பல இடங்களில் படிக்கிறோம். தாவீது ராஜா முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு முன் கர்த்தரின் வழிகாட்டுதலை தவறாமல் நாடுவதைப் பற்றி வேதாகமம் கூறுகிறது, அதுவே அவருடைய வெற்றிக்கான ரகசியம். # எப்பொழுதும் அவசரப்பட்டு முடிவெடுக்கும் நபராக இருக்காதீர்கள்.# சூழ்நிலையை அலசி ஆராய்ந்து, நன்மைத் தீமைகளைப் புரிந்துகொண்டு, முடிவெடுப்பதற்கு முன் கர்த்தரின் ஆலோசனையை நாடும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.# அப்படியானால் நீங்கள் எந்த செயலிலும் வெற்றி பெறுவீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நான் செய்யும் எல்லாவற்றிலும் ஒரு உத்தி நிறைந்த நபராக இருக்கவும், என் வாழ்க்கையின் எல்லா பகுதிகளிலும் உமது திட்டங்கள் மற்றும் எண்ணங்களுடன் என்னை இணைத்துக் கொள்ளவும் எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.