← செய்திகளுக்குத் திரும்பு
தேவனை நம்பும் எவரும் வெட்கமடைவதில்லை
படத்தைப் பதிவிறக்கு

தேவனை நம்பும் எவரும் வெட்கமடைவதில்லை

“திங்கட்கிழமை, 25 நவம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:ஒருவன் உம்மை நம்பினால் அவன் வெட்கப்பட்டுப் போகமாட்டான். சங்கீதம் 25:3 (TERV) இன்று, பலர் தேவனை நம்புவதோ அல்லது அவருடைய வழிகளைப் பின்பற்றுவதோ தற்காலத்திற்கு ஒவ்வாது என்றும், அது வயதானவர்களுக்கோ அல்லது கடந்த காலங்களுக்கோ மட்டுமே ஒதுக்கப்பட்டது என்றும் நினைக்கலாம். வேதாகமக் கொள்கைகள், நெறிமுறைகள் மற்றும் ஒழுக்கம் இல்லாமல் கவலையற்ற வாழ்க்கை வாழ்பவர்கள் மேற்புறத்தில் (வெளியில்) செழிப்பானது போல் தோன்றலாம்; அவர்கள், தங்கள் வாழ்க்கை பாதுகாப்பானதாகவும் வலுவானதாகவும் உணரலாம்.ஆனால், அத்தகைய வாழ்க்கை முறையின் இறுதி விளைவுகள் வேதனையாயிருக்கும். மறுபுறத்தில், தேவனுடைய வழிகள், எப்போதும் ஜொலிப்பதுபோன்றோ அல்லது கவர்ச்சிகரமானதாகவோ இருக்காது. கிறிஸ்துவைப் பின்பற்றுவதற்குத் தியாகம் தேவைப்படுகிறது. மேலும் அனைவரையும் பிரியப்படுத்துவது சாத்தியமற்றது. கிறிஸ்தவ வாழ்க்கை, ஒழுக்கம் நிறைந்த ஒன்றாகும். இது சவாலானதாய் இருக்கலாம். ஆயினும்கூட, சிரமங்கள் இருந்தாலும், இறுதி முடிவு மகிமையாயிருக்கும். கர்த்தரை நம்புகிற ஒருவரும் வெட்கமடைவதில்லை; அவர்கள் அவமானப்பட்டுப் போவதில்லை. ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உம்மை நம்பி, இறுதிவரை உம்முடைய வழிகளை உண்மையாய்ப் பின்பற்ற எனக்கு உதவி செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

திங்கட்கிழமை, 25 நவம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:ஒருவன் உம்மை நம்பினால் அவன் வெட்கப்பட்டுப் போகமாட்டான். சங்கீதம் 25:3 (TERV) இன்று, பலர் தேவனை நம்புவதோ அல்லது அவருடைய வழிகளைப் பின்பற்றுவதோ தற்காலத்திற்கு ஒவ்வாது என்றும், அது வயதானவர்களுக்கோ அல்லது கடந்த காலங்களுக்கோ மட்டுமே ஒதுக்கப்பட்டது என்றும் நினைக்கலாம். வேதாகமக் கொள்கைகள், நெறிமுறைகள் மற்றும் ஒழுக்கம் இல்லாமல் கவலையற்ற வாழ்க்கை வாழ்பவர்கள் மேற்புறத்தில் (வெளியில்) செழிப்பானது போல் தோன்றலாம்; அவர்கள், தங்கள் வாழ்க்கை பாதுகாப்பானதாகவும் வலுவானதாகவும் உணரலாம்.ஆனால், அத்தகைய வாழ்க்கை முறையின் இறுதி விளைவுகள் வேதனையாயிருக்கும். மறுபுறத்தில், தேவனுடைய வழிகள், எப்போதும் ஜொலிப்பதுபோன்றோ அல்லது கவர்ச்சிகரமானதாகவோ இருக்காது. கிறிஸ்துவைப் பின்பற்றுவதற்குத் தியாகம் தேவைப்படுகிறது. மேலும் அனைவரையும் பிரியப்படுத்துவது சாத்தியமற்றது. கிறிஸ்தவ வாழ்க்கை, ஒழுக்கம் நிறைந்த ஒன்றாகும். இது சவாலானதாய் இருக்கலாம். ஆயினும்கூட, சிரமங்கள் இருந்தாலும், இறுதி முடிவு மகிமையாயிருக்கும். கர்த்தரை நம்புகிற ஒருவரும் வெட்கமடைவதில்லை; அவர்கள் அவமானப்பட்டுப் போவதில்லை. ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உம்மை நம்பி, இறுதிவரை உம்முடைய வழிகளை உண்மையாய்ப் பின்பற்ற எனக்கு உதவி செய்யும். ஆமென்.