செவ்வாய், 7 நவம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள்; அதினாலே சிலர் அறியாமல் தேவதூதரையும் உபசரித்ததுண்டு. எபிரெயர் 13:2. விருந்தோம்பும் பண்பு என்பது அந்நியர்கள் அல்லது விருந்தினர்களை உபசரிப்பது, இரக்கம் காட்டுவது மற்றும் தாராள மனப்பான்மையோடிருப்பது ஆகியவற்றைக் குறிக்கிறது. ஒரு விருந்தோம்பும் பண்பைக் கொண்ட நபர் மற்றவர்களை அன்புடன் வரவேற்று உபசரித்து, அவர்களுக்கு ஒரு நல்ல சமாதானமான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்கின்றார். அவர்கள் கலாச்சார வேறுபாடுகளை ஏற்றுக் கொண்டு, ஒற்றுமையை ஊக்குவித்து நட்பின் சூழலை உருவாக்குகின்றனர். அந்நியர்கள் போல் காட்சியளித்த கர்த்தருடையத் தூதர்கள் ஆபிரகாமின் கூடாரத்தை கடந்துச் சென்ற போது, ஆபிரகாம் அவர்களை உபசரித்தார். அது அவரது, விருந்தோம்பும் பண்பை காட்டுகிறது. அவர்கள் தங்கள் உண்மையான அடையாளத்தை வெளிப்படுத்தும் வரை ஆபிரகாம் அவர்களை கர்த்தருடையத் தூதர்கள் என்று கண்டுக்கொள்ளவில்லை. அவர்கள் யார் என்று அவருக்குத் தெரியாவிட்டாலும், ஆபிரகாம் அவர்களிடம் கண்ணியமுடனும், நட்புடனும் நடந்துக்கொண்டார், அவர்களுக்கு சுவையான உணவளித்து அவர்களை பராமரித்தார். அதன் விளைவாக கர்த்தரின் ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொண்டார். நீங்கள் எப்படி விருந்தோம்பல் செய்கிறீர்கள்? # இன்றைய உலகில், அந்நியர்களை ஆதரிப்பது மிகவும் ஆபத்தானதாக மாறி வருகிறது. என்றாலும், அனைவரையும் அன்புடன் உபசரிப்பது கர்த்தருடைய பிள்ளைகளுக்குள் அவசியம் காணப்பட வேண்டிய பண்பாகும்.# எல்லா அந்நியர்களும் கெட்டவர்கள் அல்ல.# எனவே, மற்றவர்களை, குறிப்பாக நமக்குத் தெரியாதவர்களை விமர்சிக்க வேண்டாம்.# ஆனால், மக்களைப் பகுத்தறிந்து, அவர்களின் நோக்கங்களை அறிந்து, அவர்களைச் சரியாகக் கையாள்வதற்கான கிருபையைக் கர்த்தரிடம் கேளுங்கள். # பிறரிடம் அன்புடனும், இரக்கத்துடனும், அக்கறையுடனும், நடந்துக்கொண்டு இயேசுவின் அன்பை செயலில் காட்டுங்கள்.# அவர்களின் தேவைகளை முன்கூட்டியே புரிந்துகொண்டு உங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய முயற்சியுங்கள்.# பிறர் உங்களுடன் நேரத்தை செலவிட ஏங்கும் வகையில் வாழுங்கள்.# உங்கள் வார்த்தைகளிலும் செயலிலும் இயேசுவின் அன்பும் அரவணைப்பும் இருக்கட்டும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது அன்பையும் அரவணைப்பையும், மற்றவர்களிடம் காட்டி அவர்களை உபசரிக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.
அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள்.
“செவ்வாய், 7 நவம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள்; அதினாலே சிலர் அறியாமல் தேவதூதரையும் உபசரித்ததுண்டு. எபிரெயர் 13:2. விருந்தோம்பும் பண்பு என்பது அந்நியர்கள் அல்லது விருந்தினர்களை உபசரிப்பது, இரக்கம் காட்டுவது மற்றும் தாராள மனப்பான்மையோடிருப்பது ஆகியவற்றைக் குறிக்கிறது. ஒரு விருந்தோம்பும் பண்பைக் கொண்ட நபர் மற்றவர்களை அன்புடன் வரவேற்று உபசரித்து, அவர்களுக்கு ஒரு நல்ல சமாதானமான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்கின்றார். அவர்கள் கலாச்சார வேறுபாடுகளை ஏற்றுக் கொண்டு, ஒற்றுமையை ஊக்குவித்து நட்பின் சூழலை உருவாக்குகின்றனர். அந்நியர்கள் போல் காட்சியளித்த கர்த்தருடையத் தூதர்கள் ஆபிரகாமின் கூடாரத்தை கடந்துச் சென்ற போது, ஆபிரகாம் அவர்களை உபசரித்தார். அது அவரது, விருந்தோம்பும் பண்பை காட்டுகிறது. அவர்கள் தங்கள் உண்மையான அடையாளத்தை வெளிப்படுத்தும் வரை ஆபிரகாம் அவர்களை கர்த்தருடையத் தூதர்கள் என்று கண்டுக்கொள்ளவில்லை. அவர்கள் யார் என்று அவருக்குத் தெரியாவிட்டாலும், ஆபிரகாம் அவர்களிடம் கண்ணியமுடனும், நட்புடனும் நடந்துக்கொண்டார், அவர்களுக்கு சுவையான உணவளித்து அவர்களை பராமரித்தார். அதன் விளைவாக கர்த்தரின் ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொண்டார். நீங்கள் எப்படி விருந்தோம்பல் செய்கிறீர்கள்? # இன்றைய உலகில், அந்நியர்களை ஆதரிப்பது மிகவும் ஆபத்தானதாக மாறி வருகிறது. என்றாலும், அனைவரையும் அன்புடன் உபசரிப்பது கர்த்தருடைய பிள்ளைகளுக்குள் அவசியம் காணப்பட வேண்டிய பண்பாகும்.# எல்லா அந்நியர்களும் கெட்டவர்கள் அல்ல.# எனவே, மற்றவர்களை, குறிப்பாக நமக்குத் தெரியாதவர்களை விமர்சிக்க வேண்டாம்.# ஆனால், மக்களைப் பகுத்தறிந்து, அவர்களின் நோக்கங்களை அறிந்து, அவர்களைச் சரியாகக் கையாள்வதற்கான கிருபையைக் கர்த்தரிடம் கேளுங்கள். # பிறரிடம் அன்புடனும், இரக்கத்துடனும், அக்கறையுடனும், நடந்துக்கொண்டு இயேசுவின் அன்பை செயலில் காட்டுங்கள்.# அவர்களின் தேவைகளை முன்கூட்டியே புரிந்துகொண்டு உங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய முயற்சியுங்கள்.# பிறர் உங்களுடன் நேரத்தை செலவிட ஏங்கும் வகையில் வாழுங்கள்.# உங்கள் வார்த்தைகளிலும் செயலிலும் இயேசுவின் அன்பும் அரவணைப்பும் இருக்கட்டும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது அன்பையும் அரவணைப்பையும், மற்றவர்களிடம் காட்டி அவர்களை உபசரிக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

