← செய்திகளுக்குத் திரும்பு
விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.
படத்தைப் பதிவிறக்கு

விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின்...

“எபிரெயர் 11:1 * கர்த்தர் தருகிற பரிசாகிய விசுவாசம் மிகவும் முக்கியமானது, மேலும் நமது அன்றாட வாழ்வில் விசுவாசத்தை கடைப்பிடிப்பது கர்த்தரை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்கிறது.* சூழ்நிலைகள் நிச்சயமற்றதாக தோன்றினாலும் கர்த்தருடைய வாக்குறுதிகளை நம்புவதற்கு இது நமக்கு உதவுகிறது. ஆபிரகாம் மற்றும் சாராள் கதை காணப்படாதவைகளின் மேல் அவர்களுக்கு இருந்த விசுவாசத்தை வெளிப்படுத்துகிறது. அவர்கள் குழந்தைப்பேறு வயதைத் தாண்டியிருந்தாலும், கர்த்தர் அவர்களின் முதுமையில் ஒரு குழந்தையை வாக்களித்தார். உடல் இயலாமை மற்றும் பல வருட காத்திருப்பு இருந்தபோதிலும், அவர்கள் கர்த்தரின் வாக்குத்தத்தில் விசுவாசமாயிருந்தனர். காணப்படாததில் அவர்களுக்கு இருந்த அசைக்க முடியாத நம்பிக்கை, ஈசாக்கு என்ற மகன் அவர்களுக்கு கிடைத்தபோது நிறைவேறியது . * ஆபிரகாம் மற்றும் சாராளைப் போல, நீங்களும் சாத்தியமற்ற சூழ்நிலைகளை சந்திக்கலாம், ஆனால் கர்த்தருடைய வல்லமை, எல்லா வரம்புகளையும் மீறி செல்லக் கூடியது.* விசுவாசம் என்பது காண்பதை அடிப்படையாகக் கொண்டிருக்காமல், கர்த்தரின் தன்மைகளை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.* நீங்கள் அறியாத காரியங்களை நோக்கிச் செல்லும்போது, அவருடைய வாக்குறுதிகளுக்கு நேராக உங்கள் இருதயத்தைச் செலுத்துங்கள். * உங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்த அவருடைய வார்த்தைகளில் வேரூன்றி, அவற்றை தினமும் தியானம் செய்யுங்கள்.* உங்கள் மனதைக் காக்க அனைத்து எதிர்மறையான கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களிலிருந்தும் விலகி இருங்கள்.* உங்கள் இருதயத்தையும் விசுவாசத்தையும் காணும் தேவன், அவர் குறித்த நேரத்தில் நிச்சயமாக உங்களுக்கு மிகவும் மகத்தான வெகுமதியை அளிப்பார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, விசுவாசம், கிருபை என்கிறப் பரிசுகளை எனக்குத் தந்து உம்மை நம்பி நடக்க எனக்கு உதவிச் செய்யும் ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

செவ்வாய், 29 ஆகஸ்ட் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது. எபிரெயர் 11:1 * கர்த்தர் தருகிற பரிசாகிய விசுவாசம் மிகவும் முக்கியமானது, மேலும் நமது அன்றாட வாழ்வில் விசுவாசத்தை கடைப்பிடிப்பது கர்த்தரை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்கிறது.* சூழ்நிலைகள் நிச்சயமற்றதாக தோன்றினாலும் கர்த்தருடைய வாக்குறுதிகளை நம்புவதற்கு இது நமக்கு உதவுகிறது. ஆபிரகாம் மற்றும் சாராள் கதை காணப்படாதவைகளின் மேல் அவர்களுக்கு இருந்த விசுவாசத்தை வெளிப்படுத்துகிறது. அவர்கள் குழந்தைப்பேறு வயதைத் தாண்டியிருந்தாலும், கர்த்தர் அவர்களின் முதுமையில் ஒரு குழந்தையை வாக்களித்தார். உடல் இயலாமை மற்றும் பல வருட காத்திருப்பு இருந்தபோதிலும், அவர்கள் கர்த்தரின் வாக்குத்தத்தில் விசுவாசமாயிருந்தனர். காணப்படாததில் அவர்களுக்கு இருந்த அசைக்க முடியாத நம்பிக்கை, ஈசாக்கு என்ற மகன் அவர்களுக்கு கிடைத்தபோது நிறைவேறியது . * ஆபிரகாம் மற்றும் சாராளைப் போல, நீங்களும் சாத்தியமற்ற சூழ்நிலைகளை சந்திக்கலாம், ஆனால் கர்த்தருடைய வல்லமை, எல்லா வரம்புகளையும் மீறி செல்லக் கூடியது.* விசுவாசம் என்பது காண்பதை அடிப்படையாகக் கொண்டிருக்காமல், கர்த்தரின் தன்மைகளை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.* நீங்கள் அறியாத காரியங்களை நோக்கிச் செல்லும்போது, அவருடைய வாக்குறுதிகளுக்கு நேராக உங்கள் இருதயத்தைச் செலுத்துங்கள். * உங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்த அவருடைய வார்த்தைகளில் வேரூன்றி, அவற்றை தினமும் தியானம் செய்யுங்கள்.* உங்கள் மனதைக் காக்க அனைத்து எதிர்மறையான கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களிலிருந்தும் விலகி இருங்கள்.* உங்கள் இருதயத்தையும் விசுவாசத்தையும் காணும் தேவன், அவர் குறித்த நேரத்தில் நிச்சயமாக உங்களுக்கு மிகவும் மகத்தான வெகுமதியை அளிப்பார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, விசுவாசம், கிருபை என்கிறப் பரிசுகளை எனக்குத் தந்து உம்மை நம்பி நடக்க எனக்கு உதவிச் செய்யும் ஆமென்.